சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சத்து | உண்மை ; என்றும் உள்ளது ; நன்மை ; சாரம் ; வலிமை ; சித்து , அறிவு ; ஒழுக்கத்திற் சிறந்தவன் ; ஞானி ; மாவு ; கருப்பூரச் சிலா சத்து ; துத்தம் ; அமைதிகுறிக்குஞ் சொல் . |
| சத்துக்கொடுத்தல் | வலிமை உண்டாக்குதல் . |
| சத்துமா | வறுத்த அரிசியின் மாவு , பொரிமாவு . |
| சத்துமொத்தெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சத்துராதி | பகைவன் . |
| சத்துராளி | பகைவன் . |
| சத்துரு | பகைவன் . |
| சத்துருசங்காரம் | பகைவரை அழிக்கை . |
| சத்துருத்தானம் | இலக்கினத்துக்கு ஆறாம் வீடு , சாதகனுக்குப் பகையிடம் . |
| சத்துருதுரந்தரன் | பகைவர்களை வெல்பவன் . |
| சத்துருபட்சத்தார் | பகையினத்தவர் . |
| சத்துருவாதி | பகைவன் . |
| சத்துவகர் | வியத்தகு செயல்களை நிகழ்த்த வல்ல தேவதூதர் . |
| சத்துவகுணம் | மூவகைக் குணத்துள் ஒன்று , நற்செயல்களில் மனத்தைச் செலுத்தும் குணம் . |
| சத்துவம் | உளதாந்தன்மை ; சாரம் ; இயல்பு ; வலிமை ; சத்துவகுணம் ; உயிரி ; ஒரு மெய்ப்பாட்டுவகை . |
| சத்துவரம் | விரைவு ; வேதிகை . |
| சத்துவாரி | பார்வை மங்கலாய்த் தெரிவது ; வெள்ளெழுத்து . |
| சத்துவாலம் | ஓமகுண்டம் ; தருப்பைப்புல் ; கருப்பம் . |
| சத்துவேது | நேர்மையான காரணம் . |
| சத்தை | உளதாந்தன்மை ; பலன் ; உண்மை ; சாரம் ; வலிமை . |
| சதக்கல் | சதுப்புநிலம் , சேற்றுநிலம் . |
| சதக்கிரது | காண்க : சதமகன் . |
| சதக்கிருது | காண்க : சதமகன் . |
| சதக்கிருதன் | காண்க : சதமகன் . |
| சதக்கினி | நூற்றுவரைக்கொல்லி என்னும் மதிற்பொறி . |
| சதகம் | நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை ; நூற்றாண்டு ; தான்றிமரம் . |
| சதகுப்பி | ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் . |
| சதகுப்பை | ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் . |
| சதகோடி | நூறுகோடி : நூறு முனைகளையுடைய வச்சிரப்படை ; இடி . |
| சதகோடிசங்கம் | பெருங்கூட்டம் . |
| சதங்கை | காலணி , கிண்கிணி ; பெண்களும் குழந்தைகளும் அணியும் ஓர் அணிவகை . |
| சதங்கைக்கொதி | உலைநீரின் ஒருவகைக் கொதிப்பு . |
| சதங்கைத்தாமம் | ஒரு பூமாலைவகை . |
| சதங்கைப்பூரமி | ஒரு பூரான்வகை . |
| சதங்கைப்பூரான் | ஒரு பூரான்வகை . |
| சதங்கைமாலை | ஒருவகைக் கழுத்தணி ; மாலை வகை ; குதிரைகளின் கழுத்தணி . |
| சதசத்து | உள்ளதும் இல்லதும் ; ஆன்மா . |
| சதசதத்தல் | நொதுநொதுத்தல் , ஈரம் பற்றியிருத்தல் . |
| சத்திமத்து | ஞானவதி , காண்க : சக்திதீட்சை . |
| சத்திமான் | சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன் ; காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன் ; சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி . |
| சத்திமுகம் | அரசனது ஆணைப்பத்திரம் . |
| சத்தியசந்தன் | உண்மை பேசுபவன் . |
| சத்தியஞ்செய்தல் | பிரமாணம் பண்ணுதல் . |
| சத்தியஞானம் | மெய்யுணர்வு . |
| சத்தியநிருவாணம் | பிறவியறுத்தல் ; மாணாக்கனை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிருவாண தீட்சைவகை . |
| சத்தியப்பிரமாணம் | சத்தியப்பிரமாணிக்கம் , சத்தியஞ்செய்கை . |
| சத்தியப்பொருள் | உள்பொருள் . |
| சத்தியம் | உண்மை ; பிரமாணம் , துக்கம் , துக்கோற்பத்தி , துக்க நிவாரணம் , துக்க நிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள் ; குறிஞ்சாக்கொடி . |
| சத்தியம்பண்ணுதல் | காண்க : சத்தியஞ்செய்தல் . |
| சத்தியயுகம் | கிரேதாயுகம் , உண்மையே நிகழ்ந்த யுகம் . |
| சத்தியலோகம் | மேலேழு உலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம் . |
| சத்தியவசனம் | உண்மைமொழி ; உண்மை பேசுகை . |
| சத்தியவந்தன் | காண்க : சத்தியசந்தன் . |
| சத்தியவாசகம் | காண்க : சத்தியவசனம் . |
| சத்தியவாதி | காண்க : சத்தியசந்தன் . |
| சத்தியவான் | உண்மையே பேசுபவன் ; சாவித்திரியின் கணவன் . |
| சத்தியவிரதன் | உண்மை பேசுதலையே விரதமாக உடையவன் ; தருமபுத்திரன் . |
| சத்தியவேதம் | மெய்வேதம் , விவிலிய நூல் . |
| சத்தியானிருதம் | மெய்யும் பொய்யும் கலந்தது ; வாணிகத் தொழில் . |
| சத்தியோசாதம் | சிவபிரானுடைய ஐம்முகங்களுள் மேற்கு நோக்கிய முகம் ; ஒரு சைவ மந்திரம் . |
| சத்தியோ நிர்வாண தீட்சை | காண்க : சத்திய நிருவாணம் . |
| சத்தியோ நிர்வாணம் | காண்க : சத்திய நிருவாணம் . |
| சத்திரகன்மம் | ஆயுதத்தால் அறுத்துச் செய்யும் சிகிச்சை . |
| சத்திரசாலை | அன்னசாலை , அறக்கூழ்ச்சாலை . |
| சத்திரபதி | அரசன் ; குடையை உடைய தலைவன் . |
| சத்திரம் | அன்னசாலை ; பல நாள்கள் செய்யும் வேள்விவகை ; கைவிடாப் படை ; இரும்பு ; வேல் ; இரண வைத்தியக் கத்தி ; யசுர் வேதத்தின் ஓர் உட்பிரிவு ; குடை ; வியப்பு ; கவிழ்தும்பைச்செடி ; தும்பைச்செடி . |
| சத்திரம்வைத்தல் | ஆயுதத்தாற் புண்ணை அறுத்தல் . |
| சத்திரவித்தை | அறுவை மருத்துவம் ; படைக்கலன் பயிலுங் கல்வி . |
| சத்திராட்சி | அரத்தைச்செடி . |
| சத்திரி | யானை ; சத்திரியன் . |
| சத்திரித்தல் | ஆயுதத்தால் அறுத்துச் சிகிச்சை செய்தல் . |
| சத்திரியன் | அரச வகுப்பினன் . |
| சத்திரூபம் | சிவனது அருள்வடிவம் . |
| சத்திலி | கருப்பூரம் . |
| சத்தின்வட்டம் | விருந்தின் உணவுவகைகள் . |
|
|
|