சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சரிப்பித்தல் | நடப்பித்தல் . |
| சரிபங்கு | சமமான பங்கு ; பாதிப்பங்கு . |
| சரிபம் | அசோகமரம் . |
| சரிபாதி | பேர்பாதி . |
| சரிபார்த்தல் | ஒத்துப்பார்த்தல் ; கேடு சூழ்தல் . |
| சரிபோதல் | நேர்நடத்தல் ; சமாதானமாதல் ; விருப்பப்படி நடத்தல் ; ஒத்தல் . |
| சரிமணி | மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை . |
| சரிமணிக்கோவை | மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை . |
| சரிமேரை | குடிகளின் உரிமை . |
| சரியம் | சிறுநன்னாரிப் பூண்டு . |
| சரியாக்குதல் | சமனாக்குதல் ; செய்துமுடித்தல் ; ஒத்திருக்கச் செய்தல் ; ஒழுங்காக்குதல் . |
| சரியாதல் | சமமாதல் ; ஒத்துவருதல் ; முடிவுறுதல் ; நேர்வருதல் . |
| சரியாபாதம் | சிவாகமப்பகுதி நான்கனுள் ஒன்று . |
| சரியாவான் | சரியை நிலையில் ஒழுகுபவன் . |
| சரியிடுதல் | படி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல் . |
| சரியை | ஒழுக்கம் ; பயிற்சி ; சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை ; பிச்சை ; சரிகை . |
| சரியையில்ஞானம் | சிவபெருமானைக் குறித்த தியானபாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி . |
| சரிவர | முறையாய் ; முழுதும் ; திட்டமாய் . |
| சரிவருதல் | நேர்வருதல் ; சமமாதல் ; ஒத்துவருதல் ; தீர்தல் . |
| சரிவாரம் | நில உரிமையாளனும் பயிர்செய்பவனும் விளைவைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் . |
| சரிவு | சரிந்துவிழுகை ; சாய்வு ; நகரம் , ஆறு முதலியவற்றின் ஓரம் ; மகளிர் முன்கை வளையல் . |
| சரிளப்பா | வெண்கடுகு . |
| சரீரக்கட்டு | உடலுறுதி . |
| சரீரக்கூறு | உடலின் பகுதி ; உடல்நிலை . |
| சரீரசம்பந்தம் | உறவு ; புணர்ச்சி . |
| சரீரசரீரிபாவம் | உடலுக்கும் உடலுடையவனுக்குமுள்ள தொடர்பு . |
| சரீரத்திரயம் | தூல சூக்கும காரண சரீரங்கள் , பருவுடல் நுண்ணுடல் காரண உடல்கள் என்னும் மூவகை உடலங்கள் . |
| சரீரப்போக்கு | உடம்பின் தன்மை . |
| சரீரபதனம் | உடம்பு விழுகையாகிய இறப்பு . |
| சரவையிடுதல் | எழுத்துப்பிழை திருத்துதல் . |
| சரவையெழுத்து | திருத்தப்படாத முதற் படி ; படியெழுதுகை . |
| சரளம் | எளிது ; தடையின்மை ; ஒழுங்கு ; சீமைத் தேவதாரு ; சிவதைக்கொடி . |
| சரளி | சுரவரிசை ; கோழை . |
| சரளிக்கட்டு | சளிக்கட்டு . |
| சரளியாடுதல் | எழு சுரங்களையும் பாடிப் பழகுதல் . |
| சரளை | சிறுமணல் சேர்ந்து கெட்டித்த கல்வகை . |
| சரளைகட்டித்தல் | சரற்கல் இடுவித்துப் பாதையைச் செம்மையாக்குதல் . |
| சரற்காலம் | ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்காலம் ; கார்காலம் . |
| சரன் | தூதன் ; ஒற்றன் . |
| சராகம் | நேர்வழி ; நாட்டின் பகுதி . |
| சராகை | வட்டில் . |
| சராங்கம் | தடையின்மை ; நிறைவு ; நேர்மை . |
| சராசரம் | இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் ; அசையும் பொருள் அசையாப் பொருள்கள் ; உலகம் . |
| சராசரி | சரிவீதம் . |
| சராசரிமேரை | ஊர்ச் சிப்பந்திக்குப் பிரித்துக் கொடுக்கும் பாகம் . |
| சராசனம் | வில் ; அரசமரம் . |
| சராத்திரயம் | அம்புக்கூடு . |
| சராப்பு | நாணய நோட்டக்காரன் ; காசுக் கடைக்காரன் ; கருவூல வேலைக்காரன் . |
| சராயு | கருப்பப் பை . |
| சராயுசம் | கருப்பையிற் பிறப்பது . |
| சராவம் | அகல் ; இரும்புக்கம்பி . |
| சராளம் | எளிமை ; தடையின்மை ; ஒழுங்கு . |
| சராளித்தல் | பேதியாதல் , கழிதல் . |
| சரி | ஒப்பு ; சம்மதக்குறிப்பு ; மலைச்சாரல் ; வழி ; கூட்டம் ; கைவளை ; பொருத்தம் ; நடத்தை ; ஒழுங்கு ; சரியளவு . |
| சரிக்கட்டுதல் | ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; நேர்படுத்துதல் ; இணங்குதல் ; கடனைத் தீர்த்தல் ; ஈடுசெய்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் ; இணக்கமாகச் செய்தல் ; உண்மையாதல் . |
| சரிக்குச்சரி | பதிலுக்குப்பதில் ; பழிக்குப்பழி . |
| சரிகமபதநி | ஏழு சுரங்கள் . |
| சரிகாணுதல் | நேரொத்தல் ; சரிபார்த்தல் , ஒத்திடுதல் ; பூர்த்திசெய்தல் ; கொலைசெய்தல் . |
| சரிகை | கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று ; சரியை ; ஆடைக்கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் . |
| சரிசமம் | நேரான ஒப்பு . |
| சரிசமானம் | நேரான ஒப்பு . |
| சரிசு | கைவளை . |
| சரிசொல்லுதல் | ஒப்புக்கொள்ளுதல் ; பொறுப்பேற்றல் . |
| சரித்தல் | சரியச்செய்தல் ; வெட்டித்தள்ளுதல் ; ஒரு பக்கஞ் சாயச்செய்தல் ; சஞ்சரித்தல் ; மேற்கொண்டொழுகுதல் ; வசித்தல் ; செரித்தல் ; அசைத்தல் . |
| சரித்திரகாரன் | வரலாற்று ஆசிரியன் . |
| சரித்திரம் | வரலாறு ; ஒழுக்கம் . |
| சரித்திரை | புளியமரம் . |
| சரித்து | ஆறு . |
| சரிதம் | காண்க : சரித்திரம் . |
| சரிதல் | நழுவுதல் ; கீழே விழுதல் ; குலைதல் ; பின்னிடுதல் ; சாதல் ; சாய்தல் ; சரிவாயிருத்தல் ; கூட்டமாய்ச் செல்லுதல் . |
| சரிதன் | செயலிற் சிறந்தவன் . |
| சரிதி | செயலிற் சிறந்தவன் . |
| சரிதை | காண்க : சரித்திரம் ; சரியை ; பிச்சை . |
| சரிப்படுத்துதல் | நேர்படுத்துதல் ; ஈடுசெய்தல் ; ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; இணக்குதல் ; கடனைத்தீர்த்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் . |
| சரிப்பிடித்தல் | பிறருடன் ஒத்துச்செல்லுதல் ; கேடு சூழ்தல் . |
|
|
|