சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சாத்தம் | ஒலி அளவை ; வேதவாக்கு முதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை ; சத்தியைத் தெய்வமாகக் கொண்டமதம் . |
சாத்தம்பி | கலவைச்சந்தனங் குழைத்தற்குரிய அம்மி ; மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவகை . |
சாத்தர் | சத்திபூசை செய்வோர் ; வெளிநாடு சென்று வாணிகம்செய்யும் வாணிகக்கூட்டத்தார் . |
சாத்தல் | வேதம் . |
சாத்தவர் | வெளிநாடு சென்று வாணிகம் செய்யும் வாணிகக் கூட்டத்தார் . |
சாத்தவி | சத்தி . |
சாத்தன் | காண்க : ஐயனார் ; அருகன் ; புத்தன் ; சீத்தலைச்சாத்தன் ; ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும் சொல் ; வாணிகக் கூட்டத்தலைவன் . |
சாத்தா | காண்க : ஐயனார் . |
சாத்தாதவன் | காண்க : சாத்தானி . |
சாட்டி | சாட்டை ; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம் ; பயிரிடுதற்காக உரமிடப்பட்டிருக்கும் நிலம் ; சவுக்கு . |
சாட்டியம் | வஞ்சகம் ; பொய் ; சடத்தன்மை ; மந்தம் ; சுரக்குறி ; உடல்வலி ; பிடிவாதம் அறுபது நாளில் விளையும் நெல் . |
சாட்டு | ஒப்பிக்கை ; குற்றப்படுத்துகை . |
சாட்டுக்கூடை | பெரிய கூடை . |
சாட்டுதல் | பிறனிடம் சார்த்துதல் ; குற்றஞ்சுமத்துதல் ; அடித்தல் . |
சாட்டுவளம் | பசும்புற்றரை ; காண்க : அறுகு ; நாவல்மரம் . |
சாட்டுவாய் | தூற்றின தானியத்தோடு பதர் கலந்துள்ள தானியக் குவியல் . |
சாட்டை | கசை ; பம்பரஞ்சுற்றுங் கயிறு ; மரத்தால் செய்யப்பட்ட ஒரு குயக்கருவி வகை . |
சாட்டைக்கூடை | காண்க : சாட்டுக்கூடை . |
சாட்டைவார் | சவுக்கு . |
சாடவம் | ஆறு சுரமுள்ள பண் . |
சாடா | முழுவதும் |
சாடாவாக | முழுவதும் |
சாடி | கோள்மொழி ; தூள் , பொடி ; பாண்ட வகை ; கும்பராசி ; சீலை ; ஆண்கள் மயிர் ; திப்பிலி ; உழுசால் ; ஓர் அளவை . |
சாடித்தல் | கோட்சொல்லுதல் ; கண்டித்தல் ; நொறுக்கல் ; இருபக்கமும் அசைதல் . |
சாடிலி | காண்க : சாட்குலி |
சாடு | மணிமுற்றாத சோளம் ; கையில் இடும் உறை ; வாக்குவன்மை ; புலவன் ; பெரிய கூடை ; வண்டி . |
சாடுகம் | வண்டி . |
சாடுதல் | அடித்தல் ; மோதுதல் ; துகைத்தல் ; குத்திக் கிழித்தல் ; வடுச்செய்தல் ; ஒடித்தல் ; கொல்லுதல் ; அசைதல் ; ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல் . |
சாடுமாலி | வீட்டைப் பெருக்கித் துப்புரவு செய்பவள் ; கேவலமானவள் . |
சாடுவர் | நாவலர் |
சாடை | சாயல் ; ஒப்பு ; போக்கு ; சைகை ; சிறுமை ; கோள்மொழி ; பொடி . |
சாடைபண்ணுதல் | சைகைகாட்டுதல் ; அருள் காட்டுதல் . |
சாடைமாடை | குறிப்பு ; சிறுக ; பார்த்தும் பாராமல் . |
சாண் | ஒன்பது அங்குல அளவு . |
சாண்டு | பூப்புநீர் . |
சாண்டை | பூப்புநீர் . |
சாண்மாதுரன் | முருகக்கடவுள் . |
சாணக்கியம் | சாணக்கியன் செய்வதுபோன்ற சூழச்சி . |
சாணகம் | சாணி . |
சாணங்கி | துளசி . |
சாணத்தனம் | கேலி . |
சாணம் | சாணி ; சாணைக்கல் ; சந்தனக்கல் ; தழும்பு ; நாராலாகிய பொருள் ; சாதிலிங்கம் . |
சாணண் | அறிவாற்றல் மிக்கவன் ; வீரன் . |
சாணாக்கி | மயிர்மாணிக்கப் பூண்டு ; முயற்செவி ; சனகிப்பூண்டு . |
சாணாகம் | சாணி . |
சாணாங்கி | சாணி . |
சாணாத்தி | சாணாரப்பெண் . |
சாணாரக் கத்தி | பாளை சீவும் அரிவாள் . |
சாணான் | கள் இறக்கும் தொழிலினன் , மரம் ஏறுபவன் . |
சாணி | பசு முதலியவற்றின் சாணி ; புத்திநுட்பமுள்ளவன் . |
சாணிச்சுருணை | சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை . |
சாணிதட்டுதல் | சாணியை வறட்டியாக்குமாறு தட்டுதல் . |
சாணிபோடுதல் | எருது , பசு முதலியன மலங்கழித்தல் . |
சாணியுடம்பு | சதைமிக்கு வலியற்ற உடம்பு . |
சாணை | சாணைக்கல் ; வட்டமாகச் சுட்ட பணியாரவகை ; கைக்குழந்தைகளை முடிப்பொதியும் சீலை . |
சாணைக்கல் | ஆயுதம் தீட்டுங் கல் . |
சாணைக்கூறை | திருமணத்திற்கு முன் உறுதிச் சடங்கின்போது பெண்ணுக்குக் கொடுக்கும் புடவை . |
சாணைதீர்தல் | சாணைபிடிக்கப்படுதல் ; இரத்தினப்பட்டை தீட்டுதல் . |
சாணைபிடித்தல் | ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துதல் . |
சாத்தந்தை | சாத்தனுக்குத் தந்தை . |
சாஞ்சலியம் | நிலையின்மை . |
சாட்குலி | ஊன் உண்போன் . |
சாட்கோல் | சாண் அளவுள்ள கோல் . |
சாட்சாத்கரித்தல் | நேரே காணுதல் . |
சாட்சாத்காரம் | நேரில் உணர்கை . |
சாட்சாத்து | கண்கூடாக , வெளிப்படையாக . |
சாட்சி | நேரிற் கண்டவர் ; வழக்கில் சாட்சி கூறுவோர் ; எடுத்துக்காட்டு ; உடன் உண்ணும் விருந்து ; சைதன்னியம் ; சான்று . |
சாட்சிக்காரன் | வழக்கில் சான்று சொல்வோன் . |
சாட்சிப்படி | சாட்சிக்காரர்களுக்குச் செலவாகும் பணம் . |
சாட்சிபூதம் | சாட்சியாயிருத்தல் . |
சாட்சியம் | வழக்கில் கூறும் சான்று . |
சாட்சிவாங்குதல் | சாட்சிக் கையெழுத்து வாங்குதல் ; சாட்சி விசாரித்தல் . |
சாட்டம் | அடிக்கை ; செருக்கு . |
சாட்டாங்கநமஸ்காரம் | இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் . |
சாட்டாங்கம் | இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் . |
![]() |
![]() |
![]() |