சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சாவேரி | ஒரு பண்வகை . |
| சாவோலை | இழவோலை . |
| சாழல் | மகளிர் விளையாட்டுவகை , ஒரு நூல்வகை , வரிக்கூத்துவகை , கரடி . |
| சாழை | குடிசை , மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு . |
| சாழைகொட்டுதல் | கைகொட்டுதல் . |
| சாழையகத்தி | ஓர் அகத்திமரவகை . |
| சாளக்கிராமம் | திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய ஒருவகைச் சிலை , ஒரு திருமால் தலம் . |
| சாளகம் | இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று . |
| சாளம் | குங்கிலியம் , மணல் . |
| சாளர் | செவ்வழி யாழ்த்திறவகை . |
| சாளரம் | பலகணி , காண்க : சாலகராகம் |
| சாளா | ஒரு மீன்வகை . |
| சாளி | வண்டு ; குடைவேல் ; பணப்பை . |
| சாளிகம் | வண்டு . |
| சாளிகை | வண்டு , பணப்பை , சாடி . |
| சாளியல் | பணப்பை |
| சாளியா | ஒரு மருந்துவிதை . |
| சாளேசரம் | வெள்ளெழுத்து . |
| சாளேசுரம் | வெள்ளெழுத்து . |
| சாளை | ஒரு மீன்வகை , குடிசை , வழிந்துவிழும் வாய்நீர் . |
| சாளையிறக்குதல் | குடிசை கட்டுதல் . |
| சாளைவாய் | நீர்வடியும் வாய் . |
| சாற்சமந்தம் | மலையாத்திமரம் . |
| சாற்றமுது | இரசம் |
| சாற்று | விளம்பரப்படுத்துகை , ஓசை . |
| சாற்றுதல் | விளம்பரப்படுத்தல் , விரித்துரைத்தல் , சொல்லுதல் , நிறைத்தல் , அடித்தல் , புகழ்தல் , அமைத்தல் . |
| சாற்றுவாரி | காண்க : சாளைவாய் |
| சாற்றுவாய் | காண்க : சாளைவாய் |
| சாற்றோலை | ஆட்டுக்கிடையில் இடையர்கள் ஒதுங்கியிருக்கும் மறைவோலை . |
| சாறடை | காண்க : சாரணை . |
| சாறணை | காண்க : சாரணை . |
| சாறணத்தி | காண்க : சாரணை . |
| சாறயர்தல் | விழாக் கொண்டாடுதல் . |
| சாறிப்போதல் | பயனின்றிப் போதல் . |
| சாறு | இலை , பழம் முதலியவற்றின் சாறு , மணப்பண்டங்கள் ஊறின நீர் , இரசம் , திருவிழா , பூசை , திருமணம் , குலை . |
| சாறுதல் | நழுவுதல் , வழுக்குதல் , சரிதல் , பெருக்குதல் , கொத்துதல் . |
| சாறுதாரி | கரிசலாங்கண்ணி . |
| சாறுபிழிதல் | இரசமெடுத்தல் , வருத்துதல் , நன்றாய் அடித்தல் . |
| சாறுவேளை | பூண்டுவகை . |
| சான்மலி | இலவமரம் ; இலவந்தீவு ; ஒரு நரகம் . |
| சான்மலிசாரம் | இலவம்பிசின் . |
| சான்றவர் | அறிஞர் ; சாணார் . |
| சான்றவன் | சாட்சி கூறுவோன் . |
| சான்றாண்மை | கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை ; பெருந்தன்மை ; பொறுமை ; கள்ளிறக்குந் தொழில் . |
| சான்றார் | காண்க : சாண்றோர் . |
| சான்று | சாட்சி . |
| சான்றோர் | அறிவொழுக்கங்களால் நிறைந்தோர் ; சங்கப் புலவர் ; வீரர் . |
| சான்றோன் | சூரியன் ; அறிவொழுக்கங்களாற் சிறந்தவன் ; மிருகசீரிட நாள் . |
| சான்னித்தியம் | தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு . |
| சானகம் | வில் . |
| சானகி | சீராமன் மனைவியாகிய சீதை ; பொன்னாங்காணிக்கீரை ; கொற்றான் கொடி ; மூங்கில் . |
| சானம் | பெருங்காயம் ; சாதிலிங்கம் ; தியானம் ; அம்மி ; உரைகல் . |
| சானவி | கங்கையாறு . |
| சானி | மனைவி ; பொதுமகள் . |
| சானிகை | மண்ணாற் செய்த தட்டு . |
| சானித்தல் | தியானித்தல் . |
| சானித்தியம் | காண்க : சான்னித்தியம் . |
| சானினி | சிறுகீரை ; சேம்புச்செடி . |
| சானு | தாழ்வரை ; மலை ; முழந்தாள் . |
|
|