சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சிசுமாரம் | கடற்பன்றி ; முதலை . |
சிசுரம் | கிலுகிலப்பைச்செடி . |
சிசுரூசை | குற்றேவல் ; பணிவிடை . |
சிசுரூடை | குற்றேவல் ; பணிவிடை . |
சிசுவத்தி | குழந்தையைக் கொல்லல் . |
சிசுவதை | குழந்தையைக் கொல்லல் . |
சிஞ்சிதம் | அணிகலவொலி . |
சிஞ்சினீ | வில்நாண் . |
சிஞ்சுபம் | அசோகமரம் ; நூக்கமரம் . |
சிஞ்சுமாரம் | முதலை . |
சிஞ்சுரம் | புளி . |
சிஞ்ஞாசு | மெய்யறிவை அடைய விரும்புவோன் . |
சிட்சகன் | ஆசிரியன் ; தண்டிப்பவன் ; மாணாக்கன் . |
சிட்சித்தல் | தண்டித்தல் ; கற்பித்தல் . |
சிட்சிப்பு | தண்டனை ; படிப்பிக்கை . |
சிட்சை | தண்டனை ; பயிற்சி ; இசைப்பயிற்சி முதலியன ; வேதாங்கத்துள் ஒன்று . |
சிட்சைப்படுதல் | அறிவு பயிற்றப்படுதல் ; ஏவல் செய்தல் . |
சிட்டங்கட்டுதல் | செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல் ; திரிந்து கருகிப்போதல் . |
சிட்டப்பட்டார் | அடியார் . |
சிட்டபரிபாலனம் | நல்லோரைக் காத்தல் . |
சிட்டம் | இரும்புக்கிட்டம் ; பெருமை ; நீதி ; உயர்ந்தது ; நூற்சிட்டம் . |
சிட்டர் | பெரியோர் ; கல்வி நிரம்பிய சான்றோர் . |
சிட்டன் | மாணாக்கன் . |
சிட்டா | குறிப்பேடு . |
சிட்டாய்ப்பறத்தல் | சிட்டுக்குருவியைப் போல விரைந்தோடிப் போதல் . |
சிட்டி | உண்டாக்கப்பட்டன ; படைப்பு ; சிறு மட்கலம் ; ஓர் அளவுக்குறிப்பு ; சூது ; கருவியை உருட்டும் செப்பு ; சீழ்க்கை ; ஒழுங்கு . |
சிட்டிக்கை | கைந்நொடி ; கைந்நொடிப் பொழுது ; விரற்பிடியளவு . |
சிட்டித்தல் | படைத்தல் . |
சிட்டிலிங்கி | காட்டுமரவகை . |
சிட்டு | சிட்டுக்குருவி ; இழிந்தது ; சிட்டுக்குடுமி ; பெருமை . |
சிட்டுக்கருவி | குருவிவகை . |
சிட்டை | ஆடைக்கரைவகை ; பெருஞ் செலவுகளுக்கு விவரங்காட்டும் தனிக் கணக்குப் புத்தகம் . |
சிடம் | சாதிக்காய் . |
சிடுக்கு | சிக்கு ; மகளிர் அணிவகை . |
சிடுசிடுத்தல் | சினக்குறிப்புக் காட்டுதல் . |
சிடுசிடுப்பு | சினக்குறிப்பு ; காயச்சும் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு . |
சிடுமூஞ்சி | கடுகடுத்த முகம் ; கடுகடுத்த முகமுடையவன் . |
சிண் | சூதாட்டத்திற் கூட்டாளி ; கூட்டாளி ; விளையாட்டில் பின்னும் ஒரு முறை ஆடுகை . |
சிண்டு | குடுமி ; ஒரு சிற்றளவு ; சிறு பாத்திரவகை . |
சிண்டுதல் | சருவுதல் ; தொடுதல் ; நெருங்குதல் . |
சிண்டுமுடிதல் | சண்டைமூட்டுதல் . |
சிணாட்டால் | பிடித்தல் . |
சிணாட்டிப்பார்த்தல் | சண்டைக்கிழுத்தல் . |
சிணாட்டு | அடர்ந்த சிறு கிளைகள் . |
சிணாட்டுதல் | நோய் திரும்பப் பற்றுதல் . |
சிணாற்றைக்கழித்தல் | சிறு கிளைகளை வெட்டியெறிதல் ; வழக்குத் தீர்த்தல் . |
சிணாறு | அடர்ந்த மரக்கிளைகள் . |
சிணி | கெட்ட நாற்றம் . |
சிணுக்கம் | மூக்கால் அழுதல் ; சுருக்கம் விழுகை ; உடன்பாடன்மையைக் குறிக்கும் முகக்குறி . |
சிணுக்கன் | பயன்றறவன் . |
சிணுக்கு | சீண்டுகை ; சிக்கு ; அழுகை ; உழலை மரம் ; விரல் முதலியவற்றின் நொடிப்பு . |
சிணுக்குச்சிணுக்கெனல் | சிறிது சிறிதாக வெளிவருதல் ; சிடுசிடுப்புக் குறிப்பு ; அடிக்கடி அழுது தொந்தரவுசெய்தற் குறிப்பு . |
சிணுக்குதல் | சிக்குப்படுத்துதல் ; சிறிதுசிறிதாகத் தருதல் ; விட்டு விட்டு வருதல் ; துளித்தல் ; உடன்படாமையை உணர்த்த முகத்தைக் கோட்டுதல் ; சீண்டுதல் ; பிள்ளையைத் திருடுதல் . |
சிணுக்குவாரி | சிக்கல் எடுக்குங் கருவி . |
சிணுங்குதல் | மூக்கால் அழுதல் ; மழை தூறுதல் ; கொஞ்சுதல் . |
சிணுசிணுத்தல் | காண்க : சிணுங்குதல் . |
சித்தக்கல் | குறுஞ்சிலைக்கல் . |
சித்தகங்கை | ஆகாயகங்கை . |
சித்தகம் | தலைச்சீரா ; மெழுகு . |
சித்தசமாதானம் | மன அமைதி . |
சித்தசமுன்னதி | செருக்கு . |
சித்தசலனம் | மனக்குழப்பம் . |
சித்தசன் | மனத்தில் தோன்றுபவனாகிய மன்மதன் . |
சித்தசாதனம் | வெண்கடுகு ; முன்பே சாதித்த தொன்றைப் பின்னும் சாதிக்கை . |
சித்தசாந்தி | மன அமைதி . |
சித்தசுத்தி | மனத்தூய்மை . |
சித்தசுவாதீனம் | மனம் வயப்பட்டிருக்கை . |
சித்தஞ்செய்தல் | காண்க : சித்தப்படுத்துதல் . |
சித்தநெறி | முடிவான வழி . |
சித்தப்படுத்துதல் | ஆயத்தம் செய்தல் . |
சித்தப்பிரமை | மனமயக்கம் ; பைத்தியம் ; சன்னிவகை . |
சித்தம் | மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ; ஆயத்தமானது ; சிவாகமத்துள் ஒன்று ; யோகத்துள் ஒன்று ; மூலப்பகுதி ; முருங்கைமரம் . |
சித்தமன் | ஆமணக்கஞ்செடி . |
சித்தமுகம் | கிலுகிலுப்பைச்செடி . |
சித்தயோகம் | நட்சத்திர யோகம் ஆறனுள் ஒன்று ; நல்வேளை . |
![]() |
![]() |
![]() |