சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சின்னாயி | தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி . |
| சின்னாருகம் | சீந்திற்கொடி . |
| சின்னி | சிறியது ; முகத்தலளவை ; காண்க : சின்னிபொம்மை ; செடிவகை ; புரட்டுக்காரி ; இலவங்கம் ; குன்றிமணி . |
| சின்னிபொம்மை | பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கைகளும் நீண்டு தொங்கும் சட்டையும் கொண்டதாய் ஒருசில பிச்சைக்காரிகள் தம் பாட்டுக்கு ஏற்பத் தாளம் இடும்படி செய்து கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை . |
| சின்னீர் | கலங்கலான நீர் ; மூத்திரம் . |
| சின்னூல் | சிறு நூல் ; நேமிநாதம் என்னும் இலக்கண நூல் . |
| சின்னெறி | கள்ளச் சிறுவழி . |
| சின்னை | பெரிய கடல்மீன்வகை . |
| சினகர் | சைனர் , சமணர் . |
| சினகரம் | கோயில் ; சமணக்கோயில் ; சிறுகோயில் ; அரண்மனை . |
| சினத்தல் | கோபித்தல் ; புண் முதலியன சிவத்தல் . |
| சினந்தவிர்ந்தோன் | கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன் ; அருகன் . |
| சினப்பு | கோபம் ; புண் முதலியவற்றின் வீக்கம் ; வேனற்கட்டி ; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு . |
| சினம் | கோபம் ; நெருப்பு ; போர் ; வெம்மை . |
| சினவர் | பகைவர் . |
| சினவரன் | சினத்தை அடக்கியவன் ; புத்தன் ; அருகன் . |
| சினவல் | போர் . |
| சினவுதல் | கோபிதல் ; கொதித்தெழுதல் ; பொருதல் . |
| சினவுநர் | பகைவர் . |
| சினன் | புத்தன் ; அருகன் . |
| சினா | வட்டத்திருப்பிச்செடி ; பங்கம்பாளைச்செடி . |
| சினாடி | மூக்கிரட்டைக்கொடி . |
| சினாடிகா | மூக்கிரட்டைக்கொடி . |
| சினாது | மெலிந்தது ; மெலிவு . |
| சினாவில் | தும்பைப்பூண்டு . |
| சினீவாலி | சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள் . |
| சினேகபலம் | தைலத்தைக் கொண்ட எள் . |
| சினேகம் | நட்பு ; எண்ணெய் . |
| சினேசம் | சாதிக்காய் . |
| சினேந்திரன் | புத்தன் ; அருகன் . |
| சினை | விலங்கு முதலியவை கருக்கொண்டிருத்தல் ; கருப்பம் ; முட்டை ; பூவரும்பு ; உறுப்பு ; மூங்கில் ; மொட்டு ; மரக்கிளை . |
| சினைகொள்ளுதல் | கருக்கொள்ளுதல் . |
| சினைத்தல் | தோன்றுதல் ; பூ அரும்புதல் ; தழைத்தல் ; சிரங்கு புடைத்தல் ; கருக்கொள்ளுதல் ; பருத்தல் . |
| சினைப்படுத்துதல் | காண்க : சினையாக்குதல் . |
| சினைப்படுதல் | காண்க : சினைகொள்ளுதல் . |
| சினைப்பருவம் | கருக்கொள்ளும் பருவம் ; நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம் . |
| சினைப்பு | வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு ; கருக்கொள்ளுகை ; அரும்புகை ; கொழுப்பு . |
| சினைப்பூ | மரக்கொம்புகளில் தோன்றும் பூ . |
| சினைப்பெயர் | உறுப்பைக் குறிக்கும் பெயர் ; உறுப்புக் காரணமாய் வரும் பெயர் . |
| சினையாக்குதல் | கருவுண்டாக்குதல் ; தொல்லைதருதல் . |
| சினையாகுபெயர் | சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர் . |
| சினையாறுபடுகை | வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல் . |
| சினைவினை | சினையின் தொழிலைக் காட்டி நிற்கும் வினைச்சொல் . |
|
|