சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சீதகும்பம் | அலரி . |
சீதசம்பகம் | கண்ணாடி . |
சீதசுரம் | காண்க : குளிர்காய்ச்சல் . |
சீதநீர் | பனிநீர் . |
சீதப்பற்று | காண்க : சீதக்கட்டு . |
சீதப்பிரபம் | கருப்பூரம் . |
சீதபானு | குளிர்ந்த கதிரையுடைய சந்திரன் . |
சீதபித்தசுரம் | மலைக்காய்ச்சல் . |
சீதபேதி | பேதிவகை ; வயிற்றுளைச்சல் நோய் . |
சீதம் | குளிர்ச்சி , நீர் ; மேகம் ; சோம்பு ; சந்தனம் ; கள் ; கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு ; சீதமலம் ; அகில்மரம் ; ஒரு நரகம் ; காண்க : பெருநறுவிலி ; பற்பாடகம் ; பிறவிப்பாடாணவகை . |
சீதமண்டலம் | சந்திரன் . |
சீதமண்டலி | பாம்புவகை . |
சீதமயூகம் | கருப்பூரம் . |
சீதமேகரோகம் | நீரிழிவுநோய்வகை . |
சீதரன் | திருமால் . |
சீதவலயம் | நிலவுலகின் குளிர்மண்டலப் பகுதி . |
சீதவழும்பு | காண்க : சீதக்கட்டு . |
சீதவாதம் | குளிர்முடக்கு . |
சீதவாரம் | மல்லிகைச்செடி ; உத்தாமணிக் கொடி . |
சீதளகம் | காண்க : வெள்ளாம்பல் . |
சீதளங்காய் | காண்க : கொடிமாதுளை . |
சீதளங்கொள்ளுதல் | நீர்க்கொள்ளுதல் . |
சீதளம் | குளிர்ச்சி ; ஈரம் ; சந்தனம் ; தாமரை ; துருசு ; எலுமிச்சைவகை ; காண்க : கொடிமாதுளை , சிற்றகத்திச்செடி ; பச்சைக் கருப்பூரம் ; கோடகசாலைப்பூண்டு . |
சீதளாதேவி | மாரியம்மன் . |
சீதளி | காண்க : பொன்னாங்காணி . |
சீதளை | கொடிமாதுளை ; கொம்மட்டி மாதுளை ; மாரியம்மன் . |
சீதன் | சந்திரன் . |
சீதனக்காணி | சீதனமாகப் பெற்ற பூமி . |
சீதனக்காரி | சீதனத்துடன் வந்த பெண் . |
சீதனச்சீட்டு | சீதனம் எழுதப்பட்ட ஓலை . |
சீதனம் | மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை . |
சீதனவாட்சி | சீதனவுரிமை . |
சீதனவுறுதி | சீதனம் எழுதப்பட்ட ஓலை . |
சீதாங்கம் | ஒருவகைச் சன்னி ; பிறவிப்பாடாண வகை . |
சீதாங்கனை | சீதை . |
சீதாபதி | சீதையின் கணவனான இராமன் . |
சீதாரி | செம்புளிச்சை ; சாம்பிராணி ; நகரம் . |
சீதாளம் | காண்க : தாளிப்பனை ; கூந்தற்பனை . |
சீதாளி | காண்க : தாளிப்பனை ; கூந்தற்பனை . |
சீதி | குளிர் ; பாவம் ; முற்றத் துறுத்தல் . |
சீது | மது ; ஈயம் . |
சீதுகந்தம் | மகிழமரம் . |
சீதேவி | திருமகள் ; மகளிர் தலைக்கோலவுறுப்பு: செங்கழுநீர் . |
சீதேவியார் செங்கழுநீர் | ஒரு பூண்டுவகை . |
சீதை | உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி ; உழுபடைச்சால் ; காண்க : பொன்னாங்காணி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
சீதோதகம் | குளிர்ந்த நீர் . |
சீந்தல் | மழைத்தூறல் ; மூக்குச்சளி ; சீந்துதல் . |
சீந்தில் | ஒரு படர்கொடி . |
சீந்துதல் | கோபித்தல் ; சீறுதல் ; சிந்துதல் ; மதித்தல் ; மூக்குச் சிந்துதல் ; தீண்டுதல் . |
சீப்பங்கோரை | ஒரு கோரைப்புல்வகை . |
சீப்பால் | காண்க : சீம்பால் . |
சீப்பிடுதல் | மயிர்சீவுதல் . |
சீப்பு | மயிர்வாருஞ் சீப்பு ; வாழைக்குலைச் சீப்பு ; கதவின் தாள் ; கோரைவகை ; மதகிலுள்ள அடைபலகை ; கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தே வீழவிடும் மரம் ; விலா எலும்பு ; தோட்சீப்பு ; நெய்யுங் கருவியின் ஓர் உறுப்பு ; பாளம் ; காற்று முதலியவற்றால் அடித்துவரப்படுவது . |
சீப்புக்கோரை | பயிரோடு முளைக்குங் களைவகை ; கோரைவகை . |
சீப்புநூல் | பட்டைநூல் . |
சீப்புப்பணிகாரம் | அப்பவருக்கவகை . |
சீப்புப்போடுதல் | அடைபலகையால் மதகையடைத்தல் . |
சீப்போம்பு | கப்பல் முகப்புக்கட்டை . |
சீபண்டாரம் | கோயிற்கருவூலம் ; கோயிற்சொத்து . |
சீபதி | திருமகள் கணவனான திருமால் ; அருகன் . |
சீபலம் | வில்வம் . |
சீபலி | கோயிலில் இடும் அன்னபலி ; கோயில்பலி பூசைக்காக எழுந்தருளப்பண்ணும் தெய்வத் திருமேனி ; நாள்விழா . |
சீபாதம் | திருவடி ; கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச் செல்வோர் . |
சீம்பால் | பசுவின் ஈன்றணிமைப் பால் . |
சீமங்கலி | நாவிதன் . |
சீமணல் | நாகமணல் . |
சீமத்து | செல்வம் . |
சீமதி | அழகுள்ளவன் . |
சீமந்தகலியாணம் | காண்க : சீமந்தம் . |
சீமந்தபுத்திரன் | சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பிள்ளை . |
சீமந்தபுத்திரி | சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பெண் . |
சீமந்தம் | முதற் கருப்பத்தில் ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் கருக்கொண்ட பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு . |
சீமந்தரேகை | பெண்களின் தலைமயிரை வகிர்வதால் உச்சியில் உண்டாகும் கோடு . |
சீமந்தினி | பெண் . |
சீமம் | எல்லை . |
![]() |
![]() |
![]() |