சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சுற்றுமதில் | கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில் . |
| சுற்றுமுற்றும் | நாலு பக்கமும் . |
| சுற்றுலா | இன்பச்செலவு . |
| சுற்றுவட்டாரம் | சுற்றுப்புறத்து ஊர்கள் . |
| சுற்றுவரவு | சூழ்ந்துவருகை ; குதிரையின் வட்டசாரி ; மேல் வரும்படி . |
| சுற்றுவழி | நேரற்ற பாதை ; தந்திரச் செயல் . |
| சுற்றுவளையம் | உருட்டி விளையாடும் சக்கரம் ; வட்டம் ; தெருவில் சுற்றிக்கொண்டிருக்கை ; கைகட்டிச் சேவகம் . |
| சுற்றுவாரி | சுவர்ப்புறத்து நீண்ட கூரை . |
| சுற்றுவீதி | கோயிலைச் சுற்றியுள்ள தெரு ; வளைந்துசெல்லும் சாலை . |
| சுற்றுவேலை | உதவித்தொழில் . |
| சுற | காண்க : சுறவம் , சுறவு . |
| சுறட்டன் | தொந்தரவுக்காரன் . |
| சுறட்டு | கொடுமை , தொந்தரவு ; பிடிவாதம் ; சிக்கு ; தலையிடுகை . |
| சுறட்டுக்கோல் | காண்க : துறட்டுக்கோல் . |
| சுறட்டுத்தனம் | முருட்டுத்தனம் . |
| சுறட்டுப்பிடி | முருட்டுத்தனம் . |
| சுறட்டுவலி | வாதநோய்வகை ; பிடிவாதம் . |
| சுறட்டை | பசையின்றி வறண்டது . |
| சுறண்டி | காண்க : சுரண்டி . |
| சுறண்டுதல் | நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல் ; சண்டைக்கிழுத்தல் ; இரத்தல் ; தூண்டி விடுதல் ; கவர்தல் ; விபசாரம் செய்தல் . |
| சுறணம் | காண்க : காறாக்கருணை . |
| சுறவம் | சுறாமீன் , மகரமீன் . |
| சுறவு | சுறாமீன் , மகரமீன் . |
| சுறவுக்குழை | மகரமீன் வடிவாகச் செய்த காதணி . |
| சுறவுக்கோடு | நெய்தல்நில மக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு . |
| சுறவுவாய் | மகரவாய் என்னும் தலைக்கோலம் . |
| சுறவை | கடுமை , உக்கிரம் . |
| சுறா | மகரமீன் ; மகரராசி ; உடம்பில் பூக்கும் உப்பு ; தேக அழுக்கு . |
| சுறாமுள் | சுறாமீன் எலும்பு . |
| சுறாளம் | வேகம் ; கோபம் . |
| சுறீரெனல் | கடுத்தற்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; ஒர் ஒலிக்குறிப்பு . |
| சுறு | மயிர் முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம் . |
| சுறுக்கன் | சுறுசுறுப்புள்ளவன் ; கோபக்காரன் . |
| சுறுக்கு | விரைவு ; வேகம் ; ஆத்திரம் ; சுறுசுறுப்பு ; கூர்மை ; கடுமை ; காரம் ; விலையேற்றம் . |
| சுறுக்குக்காட்டுதல் | அடிகொடுத்து அச்சுறுத்தல் . |
| சுறுக்கெனல் | கடுத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தீடீரெனக் குத்துதற்குறிப்பு . |
| சுறுக்கொள்ளுதல் | மயிர்க்குச்செறிதல் ; தீய்ந்துபோதல் . |
| சுறுசுறுத்தல் | தீவிரப்படுதல் , கடுமையாதல் . |
| சுறுசுறுப்பு | ஊக்கம் ; தீவிரம் . |
| சுறுசுறெனல் | ஒர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; உட்செல்லுதற்குறிப்பு ; கடுத்தற்குறிப்பு . |
| சுறுதி | சுறுசுறுப்பு . |
| சுறை | இலையற்ற கொடிவகை . |
| சுறோணிதம் | காண்க : சுரோணிதம் . |
| சுன் | சனி . |
| சுன்னச்சி | சத்திசாரம் . |
| சுன்னத்துச்செய்தல் | ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சடங்கு செய்தல் . |
| சுன்னம் | சுழி ; சுண்ணாம்பு . |
| சுன்னிதம் | நுட்பம் . |
| சுன்னுக்கட்டி | பாற்கட்டி . |
| சுன்னை | காண்க : சுன்னம் . |
| சுனக்குடம் | சதுரக்கள்ளிமரம் . |
| சுனகன் | நாய் ; தென்மேற்றிசை . |
| சுனம் | வெள்ளுள்ளி . |
| சுனாசமாய் | காண்க : சுனாயாசமாய் . |
| சுனாசி | இந்திரன் . |
| சுனாசீரன் | இந்திரன் . |
| சுனாசு | இந்திரன் . |
| சுனாயாசமாய் | வருத்தமின்றி . |
| சுனாவணி | விண்ணப்பம் வாசிக்கை . |
| சுனி | பெண்நாய் . |
| சுனிசனம் | புளியாரை . |
| சுனுக்கு | காண்க : சுனக்குடம் . |
| சுனுகி | காண்க : சுனக்குடம் . |
| சுனை | மலையூற்று ; குகையிலுள்ள நீர்நிலை ; நீர்நிலையும் நிழல்மரமும் உள்ள பசும்புற்றரை ; தினவு ; சுரணை ; சுரசுரப்பு . |
| சுனைக்கரந்தை | திருநீற்றுப்பச்சை . |
| சுனைத்தண்ணீர் | சுனையிலுள்ளநீர் ; புண்ணீர் . |
| சுனைத்தல் | தினவெடுத்தல் . |
| சுனைதல் | குழைதல் ; வாடுதல் . |
| சுனைவு | சுனைநீர் ; பேய்க்கடலை . |
|
|