செண்ணுதல் முதல் - செந்துரசம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செண்ணுதல் அலங்கரித்தல் .
செண்பகம் வண்டுண்ணாத மலர் ; செம்போத்துப் பறவை ; சண்பகமரம் .
செண்பகவருக்கை ஒரு பலாமரவகை .
செத்தல் சாதல் ; தேங்காய் நெற்று ; உலர்ந்து சுருங்கிய பனம்பழம் , மிளகாய் , வாழை முதலியன ; மெலிந்தது ; அறக்காய்ந்தது , பசுமையற்றது .
செத்து செதுக்குகை ; கருதி ; ஐயம் ; ஒத்து .
செத்துதல் செதுக்குதல் .
செத்தை வைக்கோல் ; துரும்பு ; குப்பை ; உலர்ந்த சருகு முதலியன ; ஒலைவேலி ; அழுகின தசை ; கடல்மீன்வகை .
செத்தைகுத்துதல் மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல் .
செத்தோர்ப்புணர்த்தல் இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்தல் .
செதில் மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை .
செதிள் மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை .
செதிளெடுத்தல் தோலையுரித்தல் ; முற்றும் போக்குதல் .
செதுக்கடவேலை காண்க : செதுக்குவேலை .
செதுக்கணார்தல் கைம்மிஞ்சுதல் .
செதுக்கி காண்க : செதுக்குப்பாரை .
செதுக்கு செதுக்குகை ; பூ முதலியன வாடல் ; சேறு ; பூதம் ; மந்தி .
செதுக்குதல் புல் முதலியன செதுக்குதல் ; மரம் முதலியன செதுக்குதல் ; வற்றியொடுங்குதல் .
செதுக்குப்பாரை புல் , மண் முதலியன செதுக்குங் கருவி .
செதுக்குவேலை அணிகலன்களில் மணிபதிக்கும் தொழில் .
செதுக்குளி தச்சனின் உளிவகையுள் ஒன்று ; மணி பதித்தற்குரிய தட்டான் கருவி .
செதுக்கை தழும்பு .
செதுகு கூளம் ; சருகு ; தீங்கு .
செதுகுதல் தவறுதல் .
செதுகை தீமை .
செதுத்தல் ஒளிமழுங்குதல் ; சோர்தல் ; வற்றி யொடுங்குதல் .
செதும்பல் காண்க : செதும்புதல் .
செதும்பு சேறு ; சிறிதளவு ஒடும் நீர் .
செதும்புதல் ஈரம் உறைத்தல் .
செதுமகவு இறந்து பிறக்கும் பிள்ளை .
செதுமொழி பொல்லாச் சொல் .
செதுவல் பட்டுப்போதல் .
செந்தட்டு தன்மீது படும் அடியைத் தடுத்தல் ; செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை .
செந்தண்டு செந்தண்டுக்கீரை ; நோயாற் சிவந்த கதிர் ; பவளம் .
செந்தண்மை அருள் .
செந்தணக்கு காண்க : தணக்கு ; தணக்குவகை ; வெண்டாளி .
செந்தணல் காண்க : செந்தீ .
செந்தணற்கொடி பவளக்கொடி .
செந்தமிழ் கலப்பற்ற தூய தமிழ் .
செந்தமிழ்நாடு வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .
செந்தமிழ்நிலம் வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் .
செந்தயிர் செந்நிறமுள்ள தயிர்க்கட்டி .
செந்தரா கசப்புள்ள மருந்துக்கொடிவகை .
செந்தருப்பை நச்சுப்புல்வகை .
செந்தலித்தல் செழிப்பாதல் .
செந்தலிப்பு செழிப்பு .
செந்தலை அரைக்கால் .
செந்தழல் பொங்கி எரியும் தீ ; செந்தணல் : கேட்டைநாள் .
செந்தழற்கொடி பவளக்கொடி .
செந்தளித்தல் செழிப்பாதல் ; செவ்வியுறுதல் .
செந்தளிர் செந்நிறமுள்ள இளந்தளிர் .
செந்தளிர்ப்பு மகிழ்ச்சி ; செழிப்பு ; இளமைவளம் .
செந்தாது பொன் .
செந்தாமரை சிவந்த தாமரை .
செந்தார் ஆண்கிளியின் சுழுத்திலுள்ள செங்கோடு .
செந்தாழை செந்நிறமுள்ள தாழைவகை ; தணக்குவகை ; பார்வையை மறைக்கும் கண்ணோய் ; உதட்டில் புண் உண்டாக்கி வாயில் தீநாற்றம் அடைவிக்கும் நோய்வகை ; பயிரைச் செந்நிறமாக்கும் நோய்வகை ; நெல்வகை .
செந்தாள் நோயால் செந்நிறமான கதிர் .
செந்தாளி ஒரு தாளிச்செடிவகை .
செந்தி காண்க : திருச்செந்தூர் .
செந்திரிக்கம் ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .
செந்திருக்கம் ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .
செந்திரு திருமகள் ; தாளகம் .
செந்திருக்கை ஒரு மஞ்சள்வகை .
செந்தில் முருகக்கடவுள் தலமாகிய திருச்செந்தூர் .
செந்திறம் சிவப்பு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; தெளிவு .
செந்தினை கம்புப்பயிர் ; சிவந்த தினை .
செந்தீ சொழுந்துவிட்டெரியும் தீ .
செந்தீக்கரப்பான் கரப்பான் சட்டிவகை .
செந்தீவண்ணன் நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன் ; செவ்வாய் .
செந்தீவளர்ப்போர் வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர் .
செந்தீவேட்டல் வேள்விசெய்தல் .
செந்து அணு ; நரி ; உயிரினம் ; ஊர்வன முதலிய உயிரி ; ஏழு நரகத்துள் ஒன்று ; பெரும் பண்ணுள் ஒன்று ; காண்க : சடாமாஞ்சில் ; பெருங்காயம் .
செந்துத்தி சிறுதுத்திச்செடி .
செந்துத்தீ பெருங்காயம் ; காண்க : சடாமாஞ்சில் .
செந்தும்பை ஒரு தும்பைப்பூண்டுவகை .
செந்துரசம் ஒரு பிசின்வகை .