செய்யுள்வழக்கு முதல் - செல்கை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செய்யுள்வழக்கு செய்யுளில் வழங்குஞ் சொல் .
செய்யுள்வழு யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம் .
செய்யுள்விகாரம் வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் , விரித்தல் , தொகுத்தல் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை , எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு .
செய்யுளுறுப்பு எழுத்து , அசை , சீர் , தளை , அடி , தொடை என்னும் செய்யுளின் உறுப்புகள் .
செய்யோள் திருமகள் ; சிவந்த நிறத்தினள் .
செய்யோன் செந்நிறமுடையோன் ; செவ்வாய் ; அருகன் ; சூரியன் .
செய்வது செய்யத்தக்கது ; கருத்தா .
செய்வினை வினைமுதல் வினை ; முற்பிறப்பில் செய்த கருமம் ; பில்லிசூனியம் ; செய்யுந்தொழில் .
செய்வினைமடிதல் உரிய தொழிலிற் சோம்புதல் .
செய்சேதி உப்பு .
செய அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு ; வெற்றிக் குறிப்பான சொல் .
செயத்தம்பம் வெற்றித்தூண் .
செயநீர் சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் .
செயநீர்க்கருத்தன் நவச்சாரம் .
செயப்படுபொருள் வினைமுதலது தொழிலின் பயனை அடைவது ; நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள் .
செயப்படுபொருள் குன்றாதவினை செயப்படு பொருளைப் பெறவல்ல வினைச்சொல் .
செயப்படுபொருள் குன்றுயவினை செயப்படு பொருளைப் பெறமாட்டாத வினைச்சொல் .
செயப்பாட்டுவினை படுவிகுதி புணர்ந்த முதனிலைகளையுடையதாய்ச் செயப்படு பொருளை எழுவாயாகக்கொண்ட வினை ; பழவினை .
செயபரம் காண்க : மரமஞ்சள் .
செயம் வெற்றி ; பிறந்த நாளிலிருந்து 360 ஆம் நாளாகிய நன்னாள் .
செயர் வீட்டுவரி , சந்தைவரி முதலிய பலவகை வருவாய் .
செயல் தொழில் ; பொருள் தேடுகை ; இழைப்பு வேலை ; வேலைப்பாடு ; காவல் ; ஒழுக்கம் ; வலிமை ; செல்வாக்கு ; செய்யல் நிலைமை ; சேறு .
செயலழிதல் வலியழிதல் .
செயலறவு வலியின்மை .
செயலறுதல் வலியழிதல் ; அழகு அழிதல் ; ஒழுக்கம் கெடுதல் .
செயலை அசோகமரம் .
செயற்கை இயற்கைக்கு மாறானது ; காண்க : செயற்கைப்பொருள் ; தொழில் ; தன்மை .
செயற்கைச்சாக்காடு பொய்ச் சாவு .
செயற்கைப்பொருள் காரணத்தால் தன்மைதிரிந்த பொருள் ; உண்டாக்கப்பட்ட பொருள் .
செயற்கையழகு புனைந்துண்டாகிய எழில் .
செயற்கையளபெடை செய்யுளின் ஒசை நிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை .
செயற்கைவாசனை உண்டாக்கப்பட்ட மணம் ; சேர்க்ககைக் குணம் .
செயித்தல் வெற்றியடைதல் ; செயல் கைகூடுதல் .
செயிர் குற்றம் ; கோபம் ; போர் ; வருத்துகை ; நோய் .
செயிர்த்தல் வெகுளுதல் ; வருத்துதல் ; குற்றஞ் செய்தல் .
செயிர்ப்பு குற்றம் ; சினம் .
செயிரியர் பாணர் .
செரித்தல் சீரணமாதல் ; நிலையாகப் பெறுதல் .
செரிப்பித்தல் சீரணிக்கச்செய்தல் ; தொல்லையை நீக்குதல் ; நிலைநிறுத்துதல் ; நிலையாகப் பெறுதல் .
செரு போர் ; ஊடல் .
செருக்கடுத்தல் அகந்தைகொள்ளுதல் .
செருக்கம் கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் .
செருக்கல் கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் .
செருக்களம் போர்க்களம் .
செருக்களவஞ்சி போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் நூல்வகை .
செருக்கு அகந்தை ; மகிழ்ச்சி ; ஆண்மை ; மயக்கம் ; செல்வம் ; செல்லம் .
செருக்குதல் ஆணவங்கொள்ளுதல் ; பெருமிதமுறுதல் ; களித்தல் ; மிகுத்தல் ; நன்கு நுகர்தல் ; மதர்த்தல் ; பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக்கொள்ளுதல் ; மயங்குதல் .
செருக்கொடுத்தல் எதிர்த்துப் போர்செய்தல் .
செருகுகொண்டை முடிக்குங்கொண்டைவகை .
செருகுதல் இடைநுழைத்தல் ; அடைசுதல் ; சிக்குதல் ; கண் முதலியன செருகுதல் ; செரிக்காமல் உணவு வயிற்றில் சிக்கிக் கொள்ளுதல் .
செருகுபூ இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ .
செருத்தணி திருத்தணிகை .
செருத்தல் மாட்டுமடி .
செருத்தி வெற்றிக்கொடி .
செருத்தொழிலோர் படைவீரர் .
செருந்தி வாட்கோரைப்புல் ; சிலந்திமரம் ; மணித்தக்காளிச்செடி ; குறிஞ்சி யாழ்த்திறவகை .
செருந்து பூவிதழ் ; சிலந்திமரம் .
செருநர் படைவீரர் ; பகைவர் .
செருப்படி ஒரு படர்கொடிவகை .
செருப்படை ஒரு படர்கொடிவகை ; சிறந்த போர்வீரர்களைக்கொண்ட சேனை .
செருப்பு மிதியடி ; பூழிநாட்டில் உள்ளவொரு மலை .
செருப்புக்கடி செருப்பு அழுத்துதலால் உண்டாகும் புண் .
செருப்புத்தின்னி தோற்செருப்பைத் தின்னும் நாய் .
செருமகள் போர்க்குரிய பெண்தெய்வமாகிய கொற்றவை .
செருமல் தொண்டையைத் தூய்மை செய்யக் கனைத்தல் .
செருமுதல் நிரம்புதல் ; நெருக்கமாயிருத்தல் ; பதிதல் ; விக்குதல் ; அடைத்தல் ; கனைத்தல் .
செருமுனை போர்க்களம் ; போர்புரியும்படை .
செருவஞ்செய்தல் மாறுபடுதல் .
செருவிடைவீழ்தல் அகழினையும் காவற்காட்டையும் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை .
செருவிளை வெள்ளைக்காக்கணம் .
செருவுறுதல் ஊடுதல் .
செல் போகை ; வாங்கிய கடனுக்குச் செலுத்தியதொகை ; கடன் ; கடன் செலுத்தியதற்கு பத்திர மெழுதுங் குறிப்பு ; கையொப்பம் ; சென்ற காலவளவு ; மேகம் ; வானம் ; குடி ; வேல் ; கறையான் .
செல்கதி புகல் ; உய்வு .
செல்காலம் செல்வாக்குள்ள காலம் ; இறந்த காலம் .
செல்கை காண்க : செல்வாக்கு .