சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| செற்று | நெருக்கம் . |
| செற்றுதல் | கொல்லுதல் ; செதுக்குதல் ; பதித்தல் ; அழுந்துதல் ; செறிதல் ; அழித்தல் . |
| செற்றை | சிறு தூறு ; கூட்டம் ; நன்னீர்மீன் . |
| செற்றோர் | பகைவர் . |
| செறல் | கோபம் ; கொல்லுகை . |
| செறி | நெருக்கம் . |
| செறிஞர் | உறவினர் . |
| செறித்தல் | சேர்த்தல் ; இறுக்குதல் ; அடைதல் ; அடக்குதல் ; வைத்தல் ; திணித்தல் ; பதித்தல் ; அணியாக இடுதல் ; அடைவித்தல் ; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; மூழ்குதல் ; திரட்டுதல் ; நெரித்தல் ; மூடுதல் . |
| செறிதல் | நெருங்குதல் ; திண்ணிதாதல் ; இறுகுதல் ; அடங்குதல் ; பொருந்துதல் ; எல்லை கடவாதிருத்தல் ; மறைதல் ; மிகுதல் ; திரளுதல் ; கலத்தல் ; குளித்தல் ; புணர்தல் . |
| செறிப்பு | நெருக்கம் ; அடக்கம் ; சேர்த்தல் ; செறிவு ; பாத்தி ; நீர்நிலை ; உப்பங்கழி ; உழுநிலம் ; பகை ; தலைவனைச் சந்திப்பதற்கு வாய்ப்பின்றிப் பெற்றோர் தலைவியை வீட்டினுள் இருத்துகை . |
| செறிமை | நெருக்கம் . |
| செறிவன் | அருகன் ; சலியாதவன் . |
| செறிவு | நெருக்கம் ; மிகுதி ; கூட்டம் ; உறவு ; பொந்து ; கலப்பு ; உள்ளீடு ; தன்னடக்கம் ; எல்லைகடவா நிலைமை ; நெகிழிசையின்மையாகிய செய்யுட்குணம் . |
| செறு | வயல் ; குளம் ; பாத்தி ; கோபம் . |
| செறுத்தல் | அடக்குதல் ; தடுத்தல் ; நெருக்குதல் ; உள்ளடங்கச் செய்தல் ; நீர் முதலியன அடைத்தல் ; தூர்த்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வெல்லுதல் ; கொல்லுதல் . |
| செறுதல் | அடக்குதல் ; தடுத்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வருத்துதல் ; வெல்லுதல் ; அழித்தல் ; வேறுபடுதல் . |
| செறுதொழில் | தீச்செயல் . |
| செறுநர் | பகைவர் . |
| செறுப்பு | கட்டுப்பாடு ; நெருக்கம் ; கொலை . |
| செறும்பு | சிறாய் ; பனஞ்சிறாம்பு ; மனவயிரம் . |
| செறும்புக்காரன் | மனத்திற் கறுவுகொண்டவன் . |
| செறுமுதல் | கனைத்தல் ; தேம்பியழுதல் . |
| செறுவர் | காண்க : செறுநர் . |
| செறுவு | வயல் . |
| சென்மசாபல்லியம் | பிறவிப்பயனை அடைகை . |
| சென்மப்பகை | பிறவிப்பகை ; கடும்பகை . |
| சென்மப்பத்திரிக்கை | பிறப்பியம் , சாதகம் . |
| சென்மபூமி | பிறந்த நாடு . |
| சென்மம் | பிறப்பு ; முழு உரிமை . |
| சென்மாந்திரம் | வேறுபிறவி . |
| சென்மித்தல் | பிறத்தல் . |
| சென்றஞான்றை | நேற்றைத்தினம் . |
| சென்றது | வினாவோடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை . |
| சென்றுதேய்ந்திறுதல் | நூற்குற்றம் பத்தனுள் வரவரச் சொல்நயம் பொருள்நயம் குறைந்து வருதலாகிய குற்றம் . |
| சென்றுபோதல் | இறத்தல் . |
| சென்னக்கூனி | சிறிய இறால்மீன் . |
| சென்னடை | அன்றாடப் படித்தரம் . |
| சென்னம் | நீர்ப்பறவைவகை ; வடிவு . |
| சென்னல் | தேன் ; கெண்டைமீன் ; சாளரம் . |
| சென்னாக்கூனி | காண்க : சென்னக்கூனி . |
| சென்னி | தலை ; உச்சி ; சிறப்பு ; சோழன் ; பாணன் ; அசுவினி ; கன்னம் . |
| சென்னியம் | உண்டுபண்ணப்பட்டது . |
| சென்னியர் | கூத்தர் . |
| சென்னை | கோயில்மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம் ; மீன்வகை ; கன்னம் ; சென்னைப்பட்டினம் . |
| செனகன் | பிறப்பு . |
| செனனி | தாய் ; உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி . |
| செனித்தல் | பிறத்தல் . |
| செனு | பிறப்பிடம் . |
|
|