சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சேணோன் | மலையில் வாழ்பவன் ; பரணிலிருந்து பயிர்களை யழிக்கவரும் விலங்குகளை விரட்டுபவன் . |
சேத்திரக்கிஞன் | உடலையறிபவனான ஆன்மா . |
சேத்திரபாலன் | காக்கும் கடவுள் ; பைரவர் . |
சேத்திரம் | பன்னிரண்டு சாளக்கிராமம் கொண்ட தொகுதி ; புண்ணிய தலம் ; கருப்பை ; மனைவி . |
சேத்து | சிவப்பு ; ஒப்பு ; கருத்து ; உறுப்பு ; நிலம் ; ஐயம் ; அசைச்சொல் ; நெருக்கம் . |
சேதகம் | சிவப்பு ; சேறு . |
சேதம் | கேடு ; இழப்பு ; பிரிப்பு ; வெட்டு ; துண்டு ; கீழ்வாயிலக்கம் ; கூத்தின் ஓர் உறுப்பு . |
சேதனம் | அறிவுப்பொருள் ; அறிவு ; காண்க : விருத்தசேதனம் ; பிளவுசெய்கை . |
சேதனன் | அறிவுடையோன் ; உயிர் . |
சேதனை | அறிவு ; பிளவுசெய்கை . |
சேதா | சிவப்புப் பசு . |
சேதாம்பல் | காண்க : செவ்வாம்பல் . |
சேதாரம் | தேமாமரம் ; தேய்மானம் ; நகை செய்யும்போது ஏற்படும் இழப்பு ; வெட்சி மரம் . |
சேதி | செய்தி ; தன்மை ; சேதிநாடு ; ஓர் அரச மரபு . |
சேதித்தல் | வெட்டுதல் ; அழித்தல் . |
சேதிமம் | சமணபௌத்தப்பள்ளி ; தேவாலயம் . |
சேதியம் | சமணபௌத்தப்பள்ளி ; தேவாலயம் . |
சேது | செய்கரை ; சேதுவணை ; இராமேசுவரம் ; தனுக்கோடி முதலிய தீர்த்தக் கட்டம் ; சிவப்பு . |
சேதுபந்தனம் | அணைக்கட்டு . |
சேந்தன் | முருகன் ; திவாகரஞ் செய்வித்தோன் ; சேந்தனார் என்னும் சிவனடியார் . |
சேந்தி | களஞ்சியம் ; பரண் ; கள் ; துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும்படி இடைவெளியில்லாமலிடும் பலகை . |
சேந்து | சிவப்பு ; தீ ; அசோகமரம் . |
சேந்துதல் | இறைத்தல் . |
சேந்துபந்தம் | அரக்கு . |
சேந்தை | கட்டிலின் மேற்கட்டி . |
சேப்பு | சிவப்பு ; தாமரைக்கிழங்கு ; சிவப்புக்கல் ; சட்டைப்பை . |
சேப்புதல் | தங்குதல் . |
சேபம் | ஆண்குறி . |
சேபாலம் | காண்க : சேங்கொட்டை . |
சேம்பு | ஒரு செடிவகை ; வறட்சேம்பு . |
சேமக்கலம் | கோல்கொண்டு அடிக்கும் வட்ட மணி . |
சேமங்கலம் | கோல்கொண்டு அடிக்கும் வட்ட மணி . |
சேமக்காரன் | நம்பிக்கையுள்ளவன் ; சிக்கனமுள்ளவன் ; காவற்காரன் ; முன்னெச்சரிக்கையுள்ளோன் . |
சேமகாலம் | செழிப்புக்காலம் . |
சேமஞ்செய்தல் | மூடிவைத்தல் . |
சேமணன் | தந்தையற்றவன் . |
சேமணி | மாட்டுக் கழுத்திற் கட்டும் மணி ; காண்க : சேமக்கலம் , சேமங்கலம் . |
சேமத்தேர் | வைப்புத்தேர் . |
சேமநிதி | வைப்புப்பொருள் ; தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி . |
சேமப்படை | வைப்புப்படை . |
சேமப்பொருள் | காண்க : சேமநிதி . |
சேமம் | நல்வாழ்வு ; இன்பம் ; காவல் ; அரணானவிடம் ; சிறைச்சாலை ; புதைபொருள் ; ஓலைச்சுவடியின் கட்டு ; பகைவரது அம்பு தன்மேற் படாமல் காக்குஞ் செயல் ; சவச்சேமம் . |
சேமரம் | அழிஞ்சில்மரம் ; சேங்கொட்டைமரம் . |
சேமவில் | உற்ற காலத்து உதவும்படி துணையாகக் கொள்ளும் வில் . |
சேமவைப்பு | காண்க : சேமநிதி . |
சேமறி | மாட்டின் புணர்ச்சி . |
சேமன் | போக்கிரி . |
சேமா | எருது . |
சேமாறி | விதையடிப்போன் . |
சேமாறுதல் | எருதுக்கு விதையடித்தல் . |
சேமித்தல் | போற்றிவைத்தல் ; புதைத்துவதைத்தல் ; பாதுகாத்தல் . |
சேமை | காண்க : சேம்பு(பை) . |
சேய் | மகவு ; சிவப்பு ; இளமை ; செவ்வாய் ; முருகன் ; மகன் ; தலைவன் ; தொலைவு ; நீளம் ; பெருமை ; மனையிடம் ; மூஙகில் . |
சேய்குன்றம் | முருகக்கடவுள் வாழ்விடமாகிய திருப்பரங்குன்றம் . |
சேய்த்து | தொலைவானது ; நீளமானது ; செந்நிறமுடையது . |
சேய்நீர் | சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் . |
சேய்மரபு | இளமைப்பருவம் . |
சேய்மை | தொலைவு ; நீளம் . |
சேய்மைவிளி | தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளி . |
சேயம் | கரை ; ஓட்டம் ; கூட்டப்பட்டது ; வெற்றி . |
சேயா | காண்க : கடுக்காய் . |
சேயார் | தொலைவிலுள்ளோர் ; பகைவர் . |
சேயான் | செந்நிறமுடையவன் . |
சேயிலம் | இலுப்பைமரம் . |
சேயேபசம் | காண்க : மரமஞ்சள் . |
சேயோன் | முருகக்கடவுள் ; சிவன் ; தொலைவிலிருப்பவன் . |
சேர் | திரட்சி ; வைக்கோற்புரியா லமைந்த நெற்குதிர் ; களஞ்சியம் ; மாட்டின் இரண்டு முன்னங்கால்களையும் சேர்த்துக் கட்டுந்தளை ; ஓர்ஏர் மாடு ; நிறுத்தலளவை ; ஒரு முகத்தலளவை ; சேங்கொட்டைமரம் . |
சேர்க்கை | திரளுகை ; கூடுகை ; கலப்புப் பொருள் ; கூட்டுறவு ; ஒன்றுதல் ; புணர்ச்சி ; வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு . |
சேர்க்கைப்பல்லி | நிலைப்பல்லி . |
சேர்க்கைமூலை | சந்துமூலை . |
சேர்க்கைவாசனை | செயற்கைக் குணம் . |
சேர்கட்டுதல் | தானியத்தை அளந்து நெற்கூட்டிலிடுதல் . |
சேர்கால் | தளைகால் . |
சேர்காலிடுதல் | கால் தளைதல் . |
சேர்கொடுத்தல் | காட்டிக்கொடுத்தல் . |
![]() |
![]() |
![]() |