சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சொறிகொள்ளிநாய் | பைத்தியம் பிடித்த நாய் . |
| சொறிசிரங்கு | கடுந்தினவை உண்டாக்கக்கூடிய சொறிவகை . |
| சொறிதல் | தினவு நீங்க நகத்தால் தேய்த்தல் ; கெஞ்சிக்கேட்டல் ; தினவுண்டாதல் . |
| சொறிதேய்த்தல் | தினவுக்காக உரைசுதல் ; இழிவாய்க் கருதுதல் ; கோபமூட்டுதல் . |
| சொறிந்துகொடுத்தல் | தூண்டுதல் ; வாழ்வு கருதி ஒருவனை அணுகி இச்சகமாகத் தொழில் செய்தல் . |
| சொறிபுண் | சிறு பிள்ளைகட்கு உண்டாகும் கட்டுக்கரப்பான் . |
| சொறியன் | சொறியுள்ளவன் ; ஒருவகைத் தவளை ; காண்க : சிறுகாஞ்சொறி . |
| சொறிவு | தினவு . |
| சொறுண்டுதல் | சொறிதல் . |
| சொன்ஞானம் | அறிவுடைமொழி . |
| சொன்மகள் | சொல்மடந்தையாகிய கலைமகள் . |
| சொன்மடந்தை | சொல்மடந்தையாகிய கலைமகள் . |
| சொன்மாரி | சொல்லாலாகிய மழை ; இடையறாத பெரும்பேச்சு . |
| சொன்மாலை | புகழ்ச்சி ; புகழ்மாலை . |
| சொன்மிக்கணி | காண்க : சொற்பின்வருநிலையணி . |
| சொன்முதல் | நாதத்துக்குக் காரணமான மாயை . |
| சொன்றி | சோறு ; சுக்கு . |
| சொன்னகாரன் | தட்டான் . |
| சொன்னசீரம் | கரும்பு . |
| சொன்னம் | பொன் ; சோளம் ; கால்வாய் . |
| சொன்னல் | சோளம் ; இரும்பு . |
| சொன்னி | மணம் . |
| சொனகு | பெரும்புல்வகை . |
| சொனாகம் | வேலிப்பருத்தி , உத்தாமணிக்கொடி . |
|
|