சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சோறூட்டல் | குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு . |
| சோன்மதன் | பித்தன் . |
| சோனகம் | ஒரு நாடு ; ஒரு மொழி . |
| சோனகன் | யவன நாட்டான் . |
| சோனம் | மேகம் ; காண்க : சோனகம் . |
| சோனாமாரி | விடாமழை . |
| சோனாவாரி | விடாமழை . |
| சோனாமேகம் | பெருமழை பொழியும் முகில் . |
| சோனி | வளர்ச்சியற்றது ; மெலிந்தவன்(ள்) . |
| சோனை | கார்மேகம் ; விடாமழை ; விடாமழைப் பாட்டம் ; மழைச்சாரல் ; திருவோணநாள் ; கைப்பிடிச் சுவர் . |
| சோனைகட்டுதல் | மழைபெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் கூடியிருக்கை . |
| சோனைப்புல் | ஒருவகைப் புல்வகை . |
| சோனைமாரி | காண்க : சோனாமாரி , சோனாவாரி . |
| சோனைமேகம் | காண்க : சோனாமேகம் . |
|
|