ஞானத்தில்யோகம் முதல் - ஞானோபதேயம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஞானத்தில்யோகம் ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை .
ஞானத்திறைவி அறிவிற்குரிய பெண்தெய்வமான கலைமகள் .
ஞானதிட்டி ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் .
ஞானதிருட்டி ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் .
ஞானதீட்சை ஞானவுபதேசவகை ; ஞான ஸ்நானக்கிரியை .
ஞானநாயகன் கடவுள் ; மெய்யறிவால் சிறந்தவன் .
ஞானநிட்டை இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை .
ஞானநிலை காண்க : ஞானமார்க்கம் ; ஆத்தும ஞான நிச்சயம் .
ஞானப்பல் கடைசிக் கடைவாய்ப்பல் .
ஞானப்புதல்வன் மாணாக்கன் .
ஞானப்பூங்கோதை திருக்காளத்தியில் உள்ள உமாதேவி .
ஞானப்பைத்தியம் ஞானத்தால் உண்டாகும் அறிவுமயக்கம் .
ஞானபரன் ஞானத்தால் சிறந்த கடவுள் .
ஞானபாதம் சிவாகமம் நாற்பாதங்களுள் பதி , பசு , பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி ; காண்க : ஞானமார்க்கம் ; அருகக் கடவுளது திருமொழி .
ஞானபாரகன் ஞானவறிவிலே தெளிவடைந்தவன் .
ஞானபுத்திரன் காண்க : ஞானப்புதல்வன் .
ஞானபூசை அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ; ஓதுவித்தல் முதலிய பூசனை .
ஞானபூரணன் அறிவு நிறைந்தவன் .
ஞானம் அறிவு ; கல்வி ; பரஞானம் ; பூமி ; தத்துவநூல் ; தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை ; மதிஞானம் , சுருதஞானம் , அவதிஞானம் , மனப்பரியய ஞானம் , கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள் ; சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை ; பூசையில் சிவலிங்கம் அமைவதற்குரிய சலாசனங்களுள் ஒன்று .
ஞானமார்க்கம் ஞானநெறி , முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் .
ஞானமூர்த்தி அறிவு உருவமான கடவுள் ; சிவன் ; அறிவுக்கு இறைவியாம் கலைமகள் .
ஞானவல்லியம் பார்வதி ; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் .
ஞானவான் காண்க : ஞானி .
ஞானவிரல் மோதிரவிரல் .
ஞானவிருத்தன் அறிவால் முதிர்ந்தவன் .
ஞானவீரன் பரஞானத்தில் வீரனாயுள்ளவன் .
ஞானன் அறிவு முதிர்ந்தவனான பிரமன் .
ஞானாகரன் அறிவிற்கு இருப்பிடமானவன் .
ஞானாகாசம் ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி .
ஞானாசாரம் முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் .
ஞானாசாரியன் மெய்யறிவு கொளுத்தும் ஆசிரியன் .
ஞானார்த்தம் மெய்ப்பொருள் .
ஞானாரணியம் அறிவை மறைப்பதான கருமம் .
ஞானானந்தம் பேரின்பம் .
ஞானானந்தன் கடவுள் .
ஞானி ஞானமுள்ளவன் ; நாலாம் பாதத்தோன் ; பேரறிவுடையவன் ; அருகன் ; நான்முகன் ; கேது ; சேவல் .
ஞானேந்திரியம் உணர்தற்குரிய மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்பன .
ஞானோதயம் மெய்யறிவு தோன்றுகை .
ஞானோபதேசம் ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை .
ஞானோபதேயம் ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை .