சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தங்கலர் | பகைவர் . |
தங்கள் | உங்களுடைய ; படர்க்கைப் பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை ; கடிதத்தில் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி . |
தங்காள் | தங்கை ; அம்மா . |
தங்கான் | அரை என்னும் எண்ணின் குழூஉக்குறி ; கொள்முதல் . |
தங்கு | தங்குதல் . |
தங்குடிச்சுற்றம் | தாயத்தார் ; ஞாதியர் . |
தங்குடித்தமர் | தாயத்தார் ; ஞாதியர் . |
தங்குதடை | தடங்கல் ; தடுமாற்றம் . |
தங்குதரிப்பு | காண்க : தங்குதடை ; அடக்கம் . |
தங்குதல் | வைகுதல் ; உளதாதல் ; அடக்குதல் ; நிலைபெறுதல் ; தணிதல் ; தாமதப்படுதல் ; தடைப்படுதல் ; இருப்பாயிருத்தல் ; அடியிற்படுதல் ; சார்ந்திருத்தல் . |
தங்குதுறை | கப்பல் தங்கிச்செல்லுமிடம் . |
தங்குதேர்ப்படுதல் | இடையே தாமதித்தல் ; தேரிழுப்பில் நிலையை அடையாது ஓரிடத்தில் தங்குதல் . |
தங்குநடை | தங்கித்தங்கி செல்லும் பயணம் . |
தங்குபடி | மீதி . |
தங்குபிண்டம் | மாதவிடாய் வெளிப்படத் தேய்ந்து தங்கியிருக்கும் கருப்பிண்டம் . |
தங்குமூச்சு | இறக்குங் காலத்தில் நின்றுநின்று வரும் மூச்சு . |
தங்கூசு | தூண்டிலில் கட்டுங் கயிறு . |
தங்கை | இளையசகோதரி ; தங்கை முறையாள் ; இளையாள் . |
தங்கைச்சி | காண்க : தங்கை ; கருங்குவளை . |
தங்கையைக்கொல்லி | ஒரு பூடுவகை . |
தச்சக்கோல் | 33 அங்குலமுள்ள தச்சுமுழம் . |
தச்சகன் | குடும்பத் தலைவன் . |
தச்சவாடி | தச்சுவேலை செய்யுமிடம் . |
தச்சவேலை | தச்சருக்குரிய தொழில் ; மரவேலை . |
தச்சன் | மரவேலை செய்பவன் ; தச்சுவேலை செய்யும் சாதியான் ; விசுவகர்மாவுக்குரிய சித்திரைநாள் . |
தச்சன்குருவி | காண்க : மரங்கொத்தி . |
தச்சாசாரி | மரவேலை செய்பவன் . |
தச்சி | தயிர் ; தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம் . |
தச்சிச்சி | தச்சச் சாதிப்பெண் . |
தச்சு | தச்சன் தொழில் ; தச்சனது ஒரு நாள் வேலை அளவு . |
தச்சுக்கழித்தல் | புதுவீட்டில் குடியிருப்பதற்கு முன் பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யும் சடங்கு . |
தச்சுக்கோல் | காண்க : தச்சக்கோல் . |
தச்சுவாடி | தச்சுவேலை செய்யுமிடம் ; வாடகை வண்டிகள் நிற்கும் இடம் ; விறகுகடை . |
தச்சுவினைமாக்கள் | தச்சர் . |
தச்சுவேலை | தச்சருக்குரிய தொழில் . |
தச | பத்து . |
தசக்கிரீவன் | பத்துக் கழுத்துடைய இராவணன் . |
தசகண்டன் | பத்துக் கழத்துடைய இராவணன் . |
தசகம் | பத்துச் செய்யுள் கொண்ட பிரபந்தம் . |
தசகூலி | பயிர் செய்வதற்கு ஏற்ற உழவு முதலிய பத்துவகைக் கூலி . |
தசசீலம் | பௌத்தத்துறவியருக்குரிய பத்துவகையான ஒழுக்கவிதிகள் . |
தசதானம் | விழாக்காலங்களில் பார்ப்பனர்க்கு உப்பு , எள் , நெய் , நெல் , பசு , பூமி , பொன் , ஆடை , வெல்லம் , வெள்ளி ஆகியவற்றைக் கொடுக்கும் பத்துவகைக் கொடைப்பொருள்கள் . |
தசநாடி | பத்து நாடிகள் ; அவை : அத்தி , அலம்புடை , இடை , காந்தாரி , குகு , சங்கினி , சிங்குவை , சுழுமுனை , பிங்கலை , புருடன் என்னும் பத்துவகைப்பட்டு உயிர்வளி இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள் . |
தசப்பொருத்தம் | பத்துவகையான கலியாணப்பொருத்தங்கள் ; அவை : தினம் , கணம் , மாகேந்திரம் , ஸ்திரிதீர்க்கம் , யோனி , ராசி , ராசியதிபதி , வசியம் , ரச்சு , வேதை என்பனவாம் . செய்யுட்பொருத்தம் பத்து ; அவை : மங்கலம் , சொல் , பால் , வருணம் , உண்டி , தானம் , எழுத்து , நாள் , கதி , கணம் என்பனவாம் . |
தசபலன் | தசபாரமிதையால் வன்மையுடைய புத்தன் . |
தசம் | சிவிகை ; பத்து . |
தசமம் | பத்தாவது ; பத்தில் ஒன்று . |
தசமி | பத்தாம் திதி ; தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம் . |
தசமுகன் | பத்துமுகமுடைய இராவணன் . |
தசமூலம் | கண்டங்கத்திரி , சிறுமல்லிகை , சிறுவழுதுணை , தழுதாழை , நெருஞ்சி , பாதிரி , பெருங்குமிழ் , பெருமல்லிகை , வாகை , வில்வம் என்னும் பத்து மருந்துவேர்கள் . |
தசரா | மாளய அமாவாசையை அடுத்துத் துர்க்கையை வணங்கி நிகழ்த்தப்படும் பத்து நாள் விழா . |
தசவவதாரன் | பத்து அவதாரங்கள் எடுத்த திருமால் . |
தசவாயு | உடலில் நிற்கும் பத்து வாயு ; அவை : அபானன் , உதானன் , கிருகரன் , கூர்மன் , சமானன் , தனஞ்சயன் , தேவதத்தன் , நாகன் , பிராணன் , வியாழன் என்பன . |
தசனப்பொடி | கருநிறமுள்ள பற்பொடிவகை . |
தசனம் | பல் , கவசம் ; மலைமுடி . |
தசாக்கரி | ஒரு பண்வகை . |
தசாங்கத்தயல் | ஆசிரியவிருத்தத்தால் அரசியல் உறுப்புகள் பத்தனையும் பாடும் நூல்வகை . |
தசாங்கம் | ஊர் , யானை , கொடி , செங்கோல் , நாடு , குதிரை , மலை , மாலை , முரசு , யாறு என்னும் பத்து அரசியல் உறுப்புகள் . |
தசாட்சரி | ஒரு பண்வகை . |
தசாமிசம் | பத்தில் ஒரு கூறு ; பத்தில் ஒன்று . |
தசாவதாரம் | மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனன் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துத் திருப்பிறப்புகள் . |
தசியு | ஆரியர் அல்லாத சாதிவகை ; திருடன் . |
தசிரம் | உட்டுளை ; மழைத்தூறல் . |
தசுகரம் | களவு . |
தசும்பர் | குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் . |
தசும்பு | குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் . |
தசுமன் | கள்வன் ; வேள்வி செய்விப்போன் . |
தசை | இறைச்சி , ஊன் , புலால் , மாமிசம் ; சதை , முடைநாற்றம் ; பழத்தின் சதை ; நிலைமை , கோளின் ஆட்சிக்காலம் ; திரி . |
தசைக்கனி | சதைப்பற்றுள்ள பழவகை . |
தசைத்தல் | சதைப்பிடித்தல் ; கொழுத்தல் . |
தசைதல் | சதைப்பற்றாதல் ; பூரித்தல் . |
தசைநரம்பு | அசைவுகொடுக்கும் நரம்பு . |
தசைநார் | அசைவுகொடுக்கும் நரம்பு . |
தசைப்பற்று | தசைபிடித்திருத்தல் ; சதை . |
தசைப்பு | கொழுப்பு ; சதைப்பிடித்திருத்தல் . |
![]() |
![]() |
![]() |