சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தலைகுனிதல் | தலையால் வணங்குதல் ; தலைகவிழ்தல் . |
| தலைகொடுத்தல் | செயலிலே முன்னிற்றல் ; செயலை ஆளுதல் ; பிறர் செயலில் வேண்டாது இடைப்புகுதல் ; ஆபத்தில் உதவிபுரிதல் . |
| தலைகொழுத்தல் | அகங்கரித்தல் . |
| தலைச்சன் | முதற்பிள்ளை . |
| தலைச்சாத்து | தலைப்பாகை . |
| தலைச்சாவகன் | முதல் மாணாக்கன் . |
| தலைச்சாவிவெட்டுதல் | பயிர் மதர்த்துப் போகாதபடி நுனியை வெட்டுதல் . |
| தலைச்சிரங்கு | தலையில்வரும் புண் . |
| தலைச்சிறத்தல் | மிகப் பெருகுதல் ; மேன்மையுறுதல் . |
| தலைச்சீரா | தலைக்கவசம் . |
| தலைச்சுமடு | கனம் ; தலைப்பாரம் ; பொறுப்பு . |
| தலைச்சுமை | கனம் ; தலைப்பாரம் ; பொறுப்பு . |
| தலைச்சுருளி | ஈசுரமூலிப்பூடு . |
| தலைச்சுழற்சி | தலைக் கிறுகிறுப்பு ; ஆட்டு நோய்வகை . |
| தலைச்சுற்றல் | தலைக் கிறுகிறுப்பு ; ஆட்டு நோய்வகை . |
| தலைச்சுற்று | காண்க : தலைச்சுற்றல் ; மரத்தின் அடிச்சுற்று . |
| தலைச்சூல் | முதன்முதலிற் கொள்ளும் கருப்பம் . |
| தலைச்சோடு | காண்க : தலைச்சீரா . |
| தலைச்சோழகம் | தென்மேல்காற்று வீசத்தொடங்குதல் . |
| தலைசாய்த்தல் | நாணுதல் ; இறத்தல் ; வணங்குதல் ; கீழே படுத்தல் ; கேட்டற்கு விரும்புதல் . |
| தலைசாய்தல் | இறத்தல் ; நாணுதல் . |
| தலைசிறத்தல் | காண்க : தலைச்சிறத்தல் . |
| தலைசீய்த்தல் | முற்றுந்துடைத்தல் ; துன்பமுறுதல் . |
| தலைசீவுதல் | தலைமயிர் வாருதல் ; கழுத்தையறுத்தல் ; ஒன்றன் மேற்பகுதியை நீக்குதல் . |
| தலைசுற்றியாடுதல் | இறுமாப்புக்கொள்ளுதல் . |
| தலைசெய்தல் | தலைமை தாங்குதல் ; தலைவைத்துப் படுத்தல் ; தலையெடுத்தல் . |
| தலைத்தரம் | முதல்தரம் . |
| தலைத்தருதல் | தலைமையான அன்பினைக் கையால் தழுவிக் காட்டுதல் . |
| தலைத்தலை | ஒவ்வொருவரும் ; இடந்தோறும் ; மேலும்மேலும் . |
| தலைத்தாழ்வு | தலை கவிழ்க்கச் செய்யும் மானக்கேடு . |
| தலைத்தாள் | பெரியவன்(ள்) ; முன்னிலையில் . |
| தலைத்திமிர் | தலைக்கனம் ; கொழுப்பு . |
| தலைத்திராணம் | காண்க : தலைச்சீரா . |
| தலைத்திவசம் | இறந்தவர்பொருட்டு முதலாமாண்டு முடிவில் நடத்துஞ் சிராத்தம் . |
| தலைத்தீபாவளி | கலியாணத்தின்பின் மணமகள் வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை . |
| தலைத்தோற்றம் | வீரன் ஒருவன் பகைவரின் ஆநிரையைக் கைப்பற்றி வருதல் அறிந்து அவன் உறவினர் மகிழ்தலைக் கூறும் புறத்துறை . |
| தலைதகர்தல் | முனைமுரிதல் . |
| தலைதட்டுதல் | அளவுப்படியின் தலைமீதாகவுள்ள தானியத்தை வழித்தல் ; அடக்குதல் . |
| தலைதடவுதல் | வஞ்சித்துக் கெடுத்தல் . |
| தலைதடுமாற்றம் | பெருங்குழப்பம் . |
| தலைதடுமாறு | மயங்குகை . |
| தலைதடுமாறுதல் | கலங்குதல் ; ஒழுங்கு தவறுதல் ; சீர்கேடு அடைதல் . |
| தலைதருதல் | முதன்மை அளித்தல் ; காண்க : தலைகொடுத்தல் . |
| தலைதல் | மேன்மையாதல் ; கூடுதல் ; மழைபெய்தல் ; மிகக் கொடுத்தல் ; பரத்தல் . |
| தலைதாழ்தல் | வணங்குதல் ; நாணுதல் ; நிலைகெடுதல் . |
| தலைதுவட்டுதல் | தலைமயிரின் ஈரந் துடைத்தல் . |
| தலைதெறிக்க | பொறிகலங்கும்படி . |
| தலைதொட்டபிள்ளை | தத்துப்பிள்ளை . |
| தலைதொடுதல் | தலையைத் தொட்டு ஆணையிடுதல் ; ஞானஸ்நானத்தில் தலையில் தொட்டு அருள்புரிந்து ஞானத் தந்தையாதல் . |
| தலைதோய்தல் | நீரில் தலைமுழுகுதல் . |
| தலைநகரம் | முதன்மையான நகரம் . |
| தலைநடுக்கம் | தலையாட்டம் ; தலைச்சுற்று ; அச்சம் . |
| தலைநடுக்குவாதம் | தலையாட்டம் ; தலைச்சுற்று ; அச்சம் . |
| தலைநடுங்குதல் | மயக்கமுறுதல் ; தலையாட்டமடைதல் ; அச்சமுறுதல் . |
| தலைநறுக்கு | ஓலையின் முன்பாகம் . |
| தலைநாள் | அசுவதி நட்சத்திரம் ; முதல்நாள் ; முந்திய நாள் ; முற்காலம் ; முற்பிறவி . |
| தலைநிம்பம் | சிவனார்வேம்பு . |
| தலைநிமிர்ச்சி | நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை ; பருவமடைகை ; விருத்தியடைகை ; செருக்கு . |
| தலைநிமிர்த்துதல் | தலையை உயர்த்துதல் ; நிலையைப் பெருக்குதல் ; பருவம் வரும்வரை வளர்த்தல் ; நிலைபெறச்செய்தல் . |
| தலைநிமிர்தல் | தலையை உயர்த்துதல் ; நிலைமேம்படுதல் . |
| தலைநிலம் | முதலிடம் . |
| தலைநீங்குதல் | விட்டொழிதல் . |
| தலைநீட்டுதல் | காண்க : தலைகாட்டுதல் . |
| தலைநீர்ப்பாடு | கிளைக் கால்வாய்கள் பிரியும் முதல் மடை . |
| தலைநீர்ப்பெருந்தளி | காண்க : தண்ணீர்ப்பந்தர்(ல்) . |
| தலைநோய் | தலைவலி ; தலைநோய்வகை . |
| தலைநோவு | தலைவலி ; தலைநோய்வகை . |
| தலைப்படுத்துதல் | கூட்டுதல் . |
| தலைப்படுதல் | ஒன்றுகூடுதல் ; எதிர்ப்படுதல் ; மேற்கொள்ளுதல் ; பெறுதல் ; முன்னேறுதல் ; தலைமையாதல் ; புகுதல் ; வழிப்படுதல் ; தொடங்குதல் . |
| தலைப்படுதானம் | அறத்தால் ஈட்டிய பொருளை முக்குற்றமற்ற நற்றவத்தோர்க்கு மனமுவந்து ஈதல் . |
| தலைப்பணி | இடப்பக்கம் மதிப்பிறை போலவும் , வலப்பக்கம் சூரியன்போலவும் நடுக்கோடு வகிர்மேல் செல்வதுமான மகளிர் தலையணி வகை . |
| தலைப்பணிலம் | வலம்புரிச்சங்கு . |
| தலைப்பந்தி | பந்தியின் முதலிடம் . |
| தலைப்பறை | யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை . |
| தலைப்பா | தலையிற் கட்டும் துணி . |
|
|
|