தாதுகலிதம் முதல் - தாம்பிரசூடம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாதுகலிதம் காண்க : தாதுநட்டம் .
தாதுகி செங்கல் .
தாதுசேகரம் துரிசு .
தாதுண்பறவை வண்டு .
தாதுநட்டம் வீரியச்சிதைவு .
தாதுபரீட்சை நோயறியுமாறு நாடிபிடித்து ஆய்தல் .
தாதுபார்த்தல் கைந்நாடி யறிதல் .
தாதுபுஷ்டி இந்திரியம் மிகுகை .
தாதுமாதுளை பூமாதுளை .
தாதுராசகம் இந்திரியம் , சுக்கிலம் .
தாதுவாதம் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை ; கபடம் ; பொய் ; உலோகப் பரிசோதனை .
தாதுவாதி உலோகங்கள் பரிசோதிப்போன் .
தாதுவிருந்தி சுக்கிலப்பெருக்கு .
தாதுவிழுதல் நாடி ஒடுங்குதல் .
தாதுவைரி கந்தகம் ; காண்க : கடுக்காய் .
தாதெருமன்றம் எருக்கள் நிறைந்த மரத்தடிப் பொதுவிடம் ; இடையர் குரவை முதலியன நிகழ்த்துவதற்குரிய இடம் .
தாதை தந்தை ; பாட்டன் ; பிரமன் ; காண்க : பேய்க்கொம்மட்டி .
தாதைதன்றாதை பாட்டன் .
தாதைதாதை பாட்டன் .
தாந்தன் ஐம்பொறிகளையும் வென்றவன் .
தாந்தாமெனல் மத்தளம் அடிக்கும் ஒலிக்குறிப்பு .
தாந்தி மன அடக்கம் .
தாந்திரம் ஆகம சம்பந்தமானது ; தந்திரம் .
தாந்திரிகம் ஆகம சம்பந்தமானது ; தந்திரம் .
தாந்திரிகன் ஆகமநூல் வல்லோன் .
தாந்தீமெனல் இசையொலிக் குறிப்பு ; கண்டபடி செலவிடற் குறிப்பு .
தாந்துவீகன் தையற்காரன் .
தாந்தோமெனல் காண்க : தாந்தீமெனல் .
தாநகம் கொத்துமல்லி .
தாப்பணிவார் கலணைக்கச்சை ; கசை .
தாப்பிசை செய்யுளில் நடுவிலுள்ள மொழியை ஏனை ஈரிடத்துங்கூட்டிப் பொருள் கொள்வது .
தாப்பிசைப் பொருள்கோள் செய்யுளில் நடுவிலுள்ள மொழியை ஏனை ஈரிடத்துங்கூட்டிப் பொருள் கொள்வது .
தாப்பு குறித்து சமயம் ; ஏந்து , வசதி .
தாப்புக்கொள்ளுதல் சமயம் பார்த்திருத்தல் .
தாப்புலி வலிமிக்க புலி ; ஒரு பழைய பாவகை .
தாபகம் நிலைநிறுத்துவகை .
தாபகன் நிலைநிறுத்துபவன் .
தாபச்சுரம் கடுஞ்சுரம் .
தாபசப்பிரியை காண்க : கொடிமுந்திரி .
தாபசன் துறவி .
தாபசி துறவி ; காண்க : ஆயா .
தாபசுரம் காண்க : தாபச்சுரம் .
தாபசோபம் மிகு துன்பம் .
தாபத்திரயம் ஆதியான்மிகம் , ஆதிதெய்வீகம் , ஆதி பௌதிகம் என்னும் மூவகைத் துன்பங்கள் .
தாபதநிலை தவ ஒழுக்கம் ; கைம்மை நோன்பு .
தாபதப்பக்கம் நீராடல் , நிலக்கிடைகோடல் , தோலுடுத்தல் , எரியோம்பல் , உரையாடாமை , சடைபுனைதல் , காட்டிலுணவு , கடவுள் பூசை என்னும் தாபதற்குரிய எட்டுவகை ஒழுக்கத்தைக் கூறும் புறத்துறை .
தாபதப்பள்ளி முனிவர் வாழிடம் .
தாபதம் முனிவர் வாழிடம் .
தாபதன் முனிவன் ; சமணமுனிவன் .
தாபந்தம் சங்கடம் ; இரக்கம் ; ஆத்திரம் .
தாபந்திரியம் சங்கடம் ; இரக்கம் ; ஆத்திரம் .
தாபம் வெப்பம் ; துன்பம் ; தாகம் ; காடு ; முத்திராதாரணம் .
தாபமாறி காண்க : தான்றி .
தாபமானி தட்பவெப்பங்களின் அளவுகாட்டும் கருவி .
தாபரம் மலை ; உடம்பு ; நிலைத்திணைப் பொருள் ; மரப்பொது ; இடம் ; ஆதாரம் ; பற்றுக்கோடு ; பூமி ; கோயில் ; இலிங்கம் ; உறுதி .
தாபரன் எல்லாவற்றுக்கும் ஆதாரமான கடவுள் .
தாபரித்தல் நிலைபெற்றிருத்தல் ; ஆதரித்தல் .
தாபவாகினி வெப்பத்தைப் பரப்புங் கருவி .
தாபனம் நிலைநிறுத்துகை ; நிலையிடப் பெற்றது ; பிரதிட்டைசெய்கை ; நிறுவனம் .
தாபனன் சூரியன் .
தாபி புத்தன் ; யமுனையாறு ; வறிஞன் .
தாபிஞ்சம் ஆமணக்கஞ்செடி ; பச்சிலைமரம் .
தாபித்தல் நிலைபெறச்செய்தல் ; பிரதிட்டை செய்தல் ; மெய்ப்பித்தல் .
தாபிதம் நிலைநிறுத்தப்பட்டது ; சூடு ; நிலை நிறுத்துகை ; பிரதிட்டைசெய்கை .
தாபே சார்ந்தவன் ; வசம் .
தாம் அவர்கள் ; மரியாதை குறிக்கும் முன்னிலைச் சொல் ; ஓரசைச்சொல் ; ஒரு சாரியை ; தாகம் ; விலை .
தாம்பணி மாடுகளை வரிசையாகப் பிணைக்கும் நீண்ட கயிறு .
தாம்பத்தியம் குடும்பவாழ்க்கை .
தாம்பாளம் ஒரு தட்டுவகை .
தாம்பிகம் பகட்டு .
தாம்பிகன் பகட்டன் .
தாம்பிரகம் செம்பு .
தாம்பிரகருப்பம் துரிசு .
தாம்பிரகாரன் செம்பு கொட்டியாகிய கன்னான் .
தாம்பிரசூடம் சேவல் ; நடுவிரலும் சுட்டு விரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிரும் இணையாவினைக்கைவகை .