தானவீரன் முதல் - தானையம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தானவீரன் பெருங்கொடையாளி .
தானாக தனியாக ; தன் விருப்பம்போல் .
தானாகரன் தானத்திற்கு இருப்பிடமான பெருங்கொடையாளி .
தாஅனாட்டித் தனாதுநிறுப்பு தானாக ஒன்றனைக் கூறி அதனை நிலைநிறுத்துதல் .
தானாதல் சுதந்தரனாதல் ; ஒன்றுபடுதல் .
தானாதிகாரி கொடைக்குரிய அதிகாரி .
தானாதிபதி படைத்தலைவன் ; தூதன் ; நடு நிலையாளன் .
தானாபத்தியம் தூது ; நடுவுநிலைமை ; ஆசாரியபதவி .
தானாபதி படைத்தலைவன் ; தூதன் ; அந்தப்புரத் தூதி .
தானி தானத்திலுள்ளது ; இடத்திலிருப்பது ; இருப்பிடம் ; பண்டசாலை ; கொடுப்போன் .
தானிகம் கோயிலுக்குப் பரம்பரையாயுள்ள உரிமை ; கோயில் செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் ; கொத்துமல்லி .
தானிகன் கோயில் செயல்களைக் கண்காணிப்பவன் .
தானிகை கொத்துமல்லி .
தானியகோட்டகம் தானியக் களஞ்சியம் .
தானியசாரம் தூற்றின நெற்பொலி .
தானியதவசம் தானியமாகிய செல்வம் .
தானிப்பொட்டு பதர் ; அந்துப்பூச்சி ; பயிர் நோய்வகை .
தானியம் நெல் முதலியன ; கொத்துமல்லி .
தானியராசன் கோதுமை ; கொத்துமல்லி .
தானியலட்சுமி தானியமாகிய செல்வத்துக்குரிய திருமகள் .
தானியாகுபெயர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆவது .
தானீகம் கோயில் ; செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் .
தானு காற்று ; கொடையாளன் ; வெற்றியாளன் .
தானூரம் சுழல்காற்று .
தானெடுத்துமொழிதல் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றாகிய முன்னோர் மொழியை எடுத்தாளுதல் .
தானை படை ; ஆயுதப்பொது ; ஆடை ; மேடைத் திரைச்சீலை ; முசுண்டி என்னும் ஆயுதம் .
தானைநிலை பகைவர் அஞ்சுதற்குரிய காலாட்படையின் நிலைமை கூறும் புறத்துறை ; இருபக்கத்துப் படையும் புகழும்படி போர் செய்த வீரனது திறத்தைக் கூறும் புறத்துறை .
தானைமறம் போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை ; சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை ; உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை .
தானைமாலை அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை .
தானையம் காண்க : தாணையம் ; கால்நடைகளின் மந்தை .