திருவாட்சி முதல் - திரைப்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
திருவாட்சி வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .
திருவாட்டி செல்வி , செல்வமுடையவள் .
திருவாடுதண்டு கோயில் ஊர்தியைச் சுமக்க உதவும் தண்டு ; ஒரு பல்லக்குவகை .
திருவாணை அரசாணை .
திருவாத்தான் காண்க : திருவளத்தான் .
திருவாத்தி ஒரு பூமரவகை .
திருவாதிரை இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது நட்சத்திரம் ; காண்க : ஆருத்திரா தரிசனம் ; சடங்குவகை .
திருவாபரணம் கடவுளர்க்கு அணியும் அணிகலன் .
திருவாய்க்கேள்வி அரசனது ஆணை ; இராசவிசாரணை .
திருவாய்மலர்தல் கூறியருளுதல் ; பெரியார் சொல்லுதல் .
திருவாய்மொழி தெய்வவாக்கு ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய தமிழ்நூல் .
திருவாராதனம் கடவுட்பூசை ; இறைவனது ஐயாற்றலுள் ஒன்று .
திருவாலி புரட்டன் .
திருவாழ்த்தான் காண்க : திருவளத்தான் .
திருவாழி திருமாலின் சக்கரம் ; மோதிரம் .
திருவாழிக்கல் முத்திரையிடப்பெற்ற எல்லைக்கல் .
திருவாளர் ஒருவர் பெயருக்குமுன் வழங்கும் மரியாதைச் சொல் .
திருவாளன் விகடன் ; தெய்வத் திருவருள் பெற்றவன் .
திருவாறாட்டு தெய்வத் திருமேனியை நீராட்டுகை .
திருவாறாடல் தெய்வத் திருமேனியை நீராட்டுகை .
திருவி செல்வம் உள்ளவள் .
திருவிடையாட்டம் கோயில்தொண்டு ; தேவதான மானியம் .
திருவிருந்து திவ்விய விருந்து ; நல்லருள் .
திருவிருப்பு கோயில் அமைந்த இடம் .
திருவில் அழகிய வில்லான வானவில் .
திருவிலி தாலியற்ற கைம்பெண் .
திருவிழா கோயிலில் நிகழும் திருநாள் .
திருவிழாப்புறம் திருவிழா நடத்துவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம் .
திருவிளக்கு கோயில் விளக்கு ; மங்கலமாக வைக்கும் விளக்கு .
திருவிளக்குநாச்சியார் விளக்குத் தெய்வம் ; கையில் விளக்கு ஏந்திய பதுமை .
திருவிளம் காண்க : திராய் ; சிவதை .
திருவிளையாட்டு தெய்வ விளையாட்டு .
திருவிளையாடல் தெய்வல¦லை ; திருவிளையாடற் புராணம் ; சிற்றின்பக் களியாட்டம் .
திருவினாள் திருமகள் .
திருவினை நல்வினை .
திருவீதியலங்கரித்தல் கோயில்மூர்த்தி தெருவில் உலாவரல் .
திருவுடம்பு தெய்வக்களை பொருந்திய உடம்பு ; தெய்வத்திருமேனி .
திருவுண்ணாழி கருவறை .
திருவுண்ணாழிகை கருவறை .
திருவுரு தெய்வ வடிவம் ; தெய்வத்திருமேனி .
திருவுள்ளம் தெய்வசித்தம் ; பெரியோர் உள்ளக்கருத்து .
திருவுளக்குறிப்பு தெய்வசித்தம் ; பெரியோர் உள்ளக்கருத்து .
திருவுளச்சீட்டு தெய்வசித்தமறியுஞ் சீட்டு .
திருவுளச்செயல் தெய்வச்செயல் .
திருவுளத்தடைத்தல் மனத்திற்கொள்ளுதல் .
திருவுளம்பற்றுதல் ஏற்றுக்கொள்ளுதல் ; கேட்கமனங் கொள்ளுதல் ; அருள்புரிதல் ; கருதுதல் .
திருவுளம்வைத்தல் அருள்புரிதல் ; விருப்பங் கொள்ளுதல் .
திருவுளமடுத்தல் எண்ணுதல் .
திருவுளமறிய தெய்வசாட்சியாய் .
திருவுறுப்பு மகளிர் நெற்றியில் அணியும் சீதேவி என்னும் அணி .
திருவூசல் கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊஞ்சல் .
திருவூறல் ஊற்றுநீர் ; வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா .
திருவெம்பாவை மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாசகப் பகுதி .
திருவெழுச்சி திருவிழா .
திருவெழுத்து அரசன் கையெழுத்து ; கொச்சி , திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை ; ஐந்தெழுத்து மந்திரம் .
திருவேகம்பம் காஞ்சிபுரத்தில் விளங்கும் சிவன் திருக்கோயில் .
திருவேங்கடம் திருப்பதி என்று வழங்கும் திருத்தலம் .
திருவேடம் திருநீறு , கண்டிகை முதலிய சைவக்கோலம் ; சைவ மடங்களில் உள்ள துறவியர் அணியும் காதணிவகை .
திருவொற்றாடை திருமுழுக்குச் செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றி உபசரிக்கும் ஆடை .
திருவோடு பரதேசிகளின் பிச்சைப்பாத்திரம் .
திருவோணம் இருபத்தேழு நாள்களுள் இருபத்திரண்டாவது நாள் ; திருவோணத் திருவிழா .
திருவோலக்கம் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை ; தெய்வ சன்னிதானம் .
திருவோலை காண்க : திருமுகம் .
திரேக்காணம் இராசியின் மூன்றில் ஒரு பாகம் .
திரேதம் காண்க : திரேதாயுகம் .
திரேதாக்கினி காண்க : முத்தீ .
திரேதாயுகம் நான்கு யுகங்களுள் இரண்டாவது .
திரேதை நான்கு யுகங்களுள் இரண்டாவது .
திரை அலை ; ஆறு ; பூமி ; கடல் ; ஏழு என்னும் குழூஉக்குறி ; திரைச்சீலை ; தோற்சுருக்கம் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் ; வைக்கோற் புரி ; பஞ்சுச்சுருள் .
திரைச்சீலை இடுதிரை .
திரைத்தல் சுருக்குதல் ; சுருட்டுதல் , தன்னுள் அடக்குதல் ; ஒதுக்குதல் ; ஆடைகொய்தல் ; அலையெழுதல் ; அணைத்தல் ; தோல் சுருங்குதல் .
திரைத்தவிர்தல் விட்டுவிட்டு ஒளிவிடல் .
திரைத்துப்பாடுதல் திரும்பத்திரும்ப நீட்டிப் பாடுதல் .
திரைதல் சுருங்குதல் ; வயது முதிர்ச்சியால் தோல் சுருங்குதல் ; அலையெழுதல் ; மிதந்து ஆடுதல் ; திரிதல் ; திரளுதல் ; இழை விலகுதல் .
திரைப்பு சுருங்குகை ; அலையெழுகை ; திரையால் மறைத்த இடம் .