தினசரிக்குறிப்பு முதல் - தினையளவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தினசரிக்குறிப்பு நாட்குறிப்பு .
தினத்திரயம் மூன்று நட்சத்திரங்கள் வரும் நாள் .
தினந்தினம் ஒவ்வொரு நாளும் .
தினந்தோறும் ஒவ்வொரு நாளும் .
தினநாதன் நாளுக்குத் தலைவனான சூரியன் .
தினப்படி நாள்தோறும் ; நாட்படித்தரம் .
தினப்பாடு தின்னுகை ; நாள்தோறும் .
தினப்பொருத்தம் காண்க : நட்சத்திரப் பொருத்தம் .
தினம் நாள் ; பகல் ; நட்சத்திரம் ; நாள்தோறும் .
தினம்பார்த்தல் நல்ல நாள் பார்த்தல் .
தினமணி சூரியன் .
தினமானம் காண்க : நாள்தோறும் ; கலியுகம் தொடக்கமாகக் கணிக்கப்பட்ட நாட்கணக்கு .
தினமுகம் நாளின் முகமான விடியற்காலை .
தினவர்த்தமானம் நாட்செய்தி .
தினவர்த்தமானி செய்தித்தாள் .
தினவாரி நாள்தோறும் .
தினவிருத்தி காண்க : தினவாரி ; நாள்வேலை .
தினவு சொறி .
தினவுதென்றல் அரிப்புண்டாதல் .
தினவெடுத்தல் அரிப்புண்டாதல் .
தினாமிகம் நாளின் பகுதி .
தினாரம்பம் விடியற்காலம் .
தினிகை நாட்கூலி .
தினிசு பொருளின் தரம் .
தினிசுவாரி தரந்தரமாய் , வகைவகையாய் .
தினை சிறுதானியவகை ; தினைவகை ; ஒரு புல்வகை ; காண்க : சாமை ; தினையளவு .
தினைக்குருவி ஒரு சிறுகுருவிவகை .
தினைச்சாமை காண்க : சாமை .
தினைப்புனம் தினை விளையும் புலம் .
தினையளவு மிகச் சிறிய அளவு .