தீட்டிப்பார்த்தல் முதல் - தீபதூபம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தீட்டிப்பார்த்தல் கல்வி முதலியவற்றைச் சோதித்தல் .
தீட்டு கூராக்குகை ; மாதவிடாய் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு ; தீண்டுகை ; சீட்டு ; பூச்சு ; அடி ; துப்புரவாக்குதல் .
தீட்டுக்கல் சாணைக்கல் .
தீட்டுக்கவி காண்க : சீட்டுக்கவி .
தீட்டுக்காரி மாதவிடாய் கொண்டவள் .
தீட்டுக்குற்றி ஆயுதம் தீட்டும் தடி .
தீட்டுகோல் எழுதுகோல் .
தீட்டுதல் கூராக்குதல் ; துலக்குதல் ; மினுக்குதல் ; அரிசி குற்றித் தூய்மைசெய்தல் ; கோதுதல் ; தூய்மைசெய்தல் ; பூசுதல் ; எழுதுதல் ; சித்திரித்தல் ; சொல்லுதல் ; அடித்தல் ; சாத்துதல் .
தீட்டுப்படுதல் தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் தூய்மை கெடுதல் .
தீட்டுப்பலகை கத்தி முதலியன தீட்டும் பலகை .
தீட்டுவீடு பிறப்பாலும் இறப்பாலும் தீட்டுள்ள வீடு .
தீட்பு இழிவு ; ஒழுக்கத் தவறுதலால் நேரும் குற்றம் .
தீண்டல் தீண்டுதல் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு ; மாதவிடாய் ; வயல் .
தீண்டியம் காண்க : பவளக்குறிஞ்சி .
தீண்டுதல் தொடுதல் ; பற்றுதல் ; பாம்பு முதலியன கடித்தல் ; அடித்தல் ; தீட்டுப்படுத்துதல் .
தீத்தகம் பொன் .
தீத்தட்டி காண்க : சிக்கிமுக்கிக்கல் .
தீத்தட்டிக்கல் காண்க : சிக்கிமுக்கிக்கல் .
தீத்தட்டிக்குடுக்கை காண்க : சிக்கிமுக்கிக்கல் .
தீத்தபிங்கலம் சிங்கம் .
தீத்தம் தீர்த்தம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .
தீத்தரசம் நாங்கூழ்ப் புழுவகை .
தீத்தருகோல் காண்க : தீக்கடைகோல் .
தீத்தல் சுடுதல் ; பயிர் முதலியன கருகச் செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் .
தீத்தலோகம் வெண்கலம் ; நிறம் ; மாந்தளிர்க்கல் .
தீத்தலோசனம் பூனை .
தீத்தாங்கம் மயில் .
தீத்தாங்கி தீயை மறைக்கும் பலகை ; அடுப்பின் மேலே அமைக்கப்பட்ட பரண் .
தீத்தாட்சம் பூனை ; மயில் .
தீத்தி ஒளி ; அழகு ; வெண்கலம் .
தீத்தியம் காண்க : அரத்தை .
தீத்திரள் தீக்கொழுந்தின் கூட்டம் ; ஊழித்தீ .
தீத்திறம் கொலை முதலிய கொடுஞ்செயல்கள் ; தீயில் செய்யும் வேள்வி வழிபாடு .
தீத்தீண்டல் திருமணச் சடங்குமுறை .
தீத்தீண்டுகையார் வேங்கைமரம் .
தீத்தெய்வம் அக்கினிதேவன் , தீக்கடவுள் .
தீத்தொழில் பாவச்செய்கை ; அக்கினிகாரியம் ; வேள்வி .
தீதல் எரிந்துபோதல் ; பயிர் முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; அழிதல் ; சினத்தல் .
தீது தீமை ; குற்றம் ; பாவச்செயல் ; துன்பம் ; இறப்பு ; கேடு ; உடம்பு ; இடையூறு .
தீதை கன்னிப்பெண் ; அறிவு .
தீந்தமிழ் இனிய தமிழ் .
தீந்தொடை யாழ்நரம்பு ; யாழ் ; தேனடை .
தீநா தீச்சுடர் ; கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு ; கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம் ; கலங்கரைவிளக்கம் .
தீநாக்கு தீயின் நாக்காகிய சுடர் ; கருநாக்கு .
தீநாய் சுடுகாட்டில் திரியும் ஒரு நாய்வகை .
தீநிமித்தம் கெட்ட குறி .
தீநீர் நன்னீர் ; மருந்துக்கு உதவும் வடிநீர் ; இனிய இளநீர் ; இனிய குடிநீர் ; திராவகம் .
தீநுரை கடல்நுரை .
தீப்தம் ஒளி ; சிங்கம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; பண்வகையுள் ஒன்று .
தீப்பசி கொடும்பசி .
தீப்படுதல் நெருப்புப்பற்றுதல் ; இறத்தல் .
தீப்படை தீக்கடவுளின் ஆயுதம் .
தீப்பறவை காண்க : தீக்கோழி .
தீப்பாய்தல் உடன்கட்டையேறுதல் .
தீப்பி நெருப்பு .
தீப்பிடித்தல் நெருப்புப்பற்றுதல் .
தீப்பிணி கொடிய நோய் ; காய்ச்சல் .
தீப்பியம் காண்க : ஓமம் ; தீச்சுடர் .
தீப்பிரகாசி காண்க : குங்கி(கு)லியம் .
திப்பிரயகம் காண்க : தீப்பியம் .
தீப்புட்பம் சண்பகப்பூ .
தீப்புண் தீயாற் சுட்ட புண் .
தீப்பொறி நெருப்புப்பொறி .
தீபக்கால் விளக்குத்தண்டு ; தீபாராதனைக் கருவி .
தீபக்கிட்டம் விளக்குப்புகை திரண்டமை .
தீபக்கொடிச்சி கருப்பூரவகை .
தீபகம் விளக்கு ; ஓரிடத்து நின்ற மொழி பலவிடத்தும் சென்று பொருள் விளக்கும் அணிவகை ; பார்வை விலங்கு .
தீபகாந்தி தீபவொளியுடைய வயிரக்கல் .
தீபகாந்தியோன் தீபவொளியுடைய வயிரக்கல் .
தீபகூபி விளக்குத்திரி .
தீபங்காட்டல் தீபார்ச்சனை செய்தல் .
தீபசாந்தி இந்திரவிழா .
தீபசாலம் காண்க : தீபமரம் .
தீபத்தம்பம் விளக்குத்தண்டு , கலங்கரை விளக்கம் .
தீபதூபம் விளக்கும் நறும்புகையும் .