துசகம் முதல் - துடைகாலன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
துசகம் மாதுளைமரம் ; கொம்மட்டிமாதுளை .
துசம் கொடி ; பல் ; உமி ; குங்கிலியம் ; முட்டையில் பிறப்பது .
துசன் பார்ப்பான் .
துஞ்சர் அசுரர் .
துஞ்சரித்தல் கண்விழித்தல் .
துஞ்சற முழுமையும் .
துஞ்சு ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை .
துஞ்சுகுழல் ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை .
துஞ்சுதல் தூங்குதல் ; துயிலுதல் ; சோம்புதல் ; தொழிலின்றி இருத்தல் ; சோர்தல் ; இறத்தல் ; வலியழிதல் ; குறைதல் ; தொங்குதல் ; தங்குதல் ; நிலைபெறுதல் .
துஞ்சுநிலை கட்டில் .
துஞ்சுமரம் மதில் வாயிலில் இடும் கணையமரம் ; கழுக்கோல் .
துஞ்சுமன் சோம்பலுள்ளவன் .
துஞ்சை காண்க : துஞ்சுகுழல் .
துட்கரம் வருந்தி முடித்தற்குரியது .
துட்கிரமம் ஒழுங்கற்றது ; எட்டாதது .
துட்கு அச்சம் .
துட்குதல் அச்சங்கொள்ளுதல் .
துட்கெனல் அச்சக்குறிப்பு .
துட்சணத்துவம் குறும்புத்தனம் .
துட்சணம் குறும்புத்தனம் ; அவையில் கூறத்தகாத சொல் .
துட்டக்கிளவி தீய சொல் .
துட்டகண்டகன் மிகக் கொடியவன் ; பிறரை வருத்தி வேலைவாங்குவோன் .
துட்டகம் பொல்லாங்கு .
துட்டகன் தீமைபுரிவோன் .
துட்டத்தனம் தீக்குணம் .
துட்டதேவதை மாடன் , காட்டேறி முதலிய கொடுந்தெய்வங்கள் .
துட்டநிக்கிரகம் தீயோரையழித்தல் .
துட்டம் தீமை ; கொடுமை ; மரகதக் குற்றங்களுள் ஒன்றாகிய நீலோற்பலநிறம் .
துட்டரி (வி) தொடரிச்செடி .
துட்டன் தீயோன் ; தேள் .
துட்டாட்டம் முருட்டுதனம் ; தீய வாழ்வு .
துட்டாப்பு சிட்டைமரத்திடையே கட்டிய பாரம் சுமத்தல் ; செரியாமை .
துட்டி மனநிறைவு ; கெட்டவள் ; சாவுத்தீட்டு ; சாதுயர் ; சம்பளம் பிடிக்கை .
துட்டு பணம் ; இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட செப்புநாணயம் ; தீமை .
துட்டுக்கட்டை குறுந்தடி .
துட்டுத்தடி குறுந்தடி .
துட்டுத்துக்காணி பணம் ; சில்லறைப்பணம் ; செல்வம் .
துட்டுவம் சிறுமை ; புன்மை .
துட்டை கட்டுக்கடங்காதவள் ; கற்பில்லாதவள் .
துட்பதம் பாசாங்கு .
துடக்கம் காண்க : தொடக்கம் .
துடக்கறுப்பான் காண்க : முடக்கொற்றான் ; கொற்றான்கொடி .
துடக்கு சம்பந்தம் ; தன்னகப்படுத்துவது ; மாதவிலக்கு ; உறவினர்களின் பிறப்பிறப்புகளில் காக்கும் தீட்டு .
துடக்குதல் கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தொடங்குதல் ; சம்பந்தப்படுத்துதல் .
துடங்குதல் காண்க : தொடங்குதல் .
துடப்பம் துடைப்பம் .
துடர் சங்கிலி .
துடர்தல் காண்க : தொடர்தல் .
துடராமுறி விடுதலை ஆவணம் .
துடரி தொடரிச்செடி ; புலிதொடக்கி ; திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு மலை .
துடவர் நீலகிரி மலைச்சாதியார் .
துடவை தோட்டம் ; சோலை ; விளைநிலம் .
துடி சலிப்பு ; காலநுட்பம் ; வேகம் ; சுறுசுறுப்பு ; அறிவுநுட்பம் ; மேன்மை ; வலி ; அகில்மரம் ; காண்க : தூதுளை , கூதாளிச்செடி ; சங்கஞ்செடி ; ஏலச்செடி ; மயிர்ச்சாந்து ; உடுக்கை ; காண்க : துடிக்கூத்து ; துடிகொட்டுபவன் ; சிறுமை ; திரியணுகம் .
துடிகம் தும்பைச்செடி .
துடித்தல் படபடவெனச் சலித்தல் ; மனம்பதைத்தல் ; பரபரத்தல் ; மின்னுதல் ; பசி முதலியவற்றால் வருந்துதல் ; துடுக்காதல் .
துடிதலோகம் பௌத்தமத நூல்களில் கண்ட தேவலோகம் .
துடிதுடித்தல் மனம் பதைபதைத்தல் ; கடுகடுத்தல் .
துடிநிலை போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை ; வழிவழியாய் துடிகொட்டி வருபவனது குணங்களைப் புகழும் புறத்துறை .
துடிநூல் உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல் .
துடிப்பு நாடியடிக்கை ; நடுக்கம் ; பரபரப்பு ; சினம் ; பிரம்பு முதலியவற்றின் வீச்சு ; செருக்கு ; விலை முதலியவற்றின் ஏற்றம் ; ஊற்றம் .
துடியடி துடிபோன்ற காலையுடைய யானைக் கன்று .
துடியன் துடிகொட்டுபவன் ; சுறுசுறுப்புள்ளவன் ; சினமுள்ளவன் ; தீயன் .
துடியாஞ்சி காண்க : சங்கஞ்செடி .
துடியாடல் காண்க : துடிக்கூத்து .
துடுக்கன் செருக்குள்ளவன் .
துடுக்கு குறும்புத்தனம் ; சுறுசுறுப்பு ; தீச்செயல் .
துடுக்குக்காரன் செருக்குள்ளவன் ; தீயவன் .
துடுப்பாற்றி ஒரு கடல்மீன்வகை .
துடுப்பு சட்டுவம் ; அகப்பை ; வலிதண்டு ; பூங்கொத்து ; அகப்பைபோன்ற காந்தள்மடல் .
துடும்புதல் ததும்புதல் ; கூடுதல் .
துடுமெனல் ஒலிக்குறிப்பு ; நீரில் விழுதற்குறிப்பு .
துடுமை ஒரு தோற்றக்கருவிவகை .
துடுவை நெய்த்துடுப்பு .
துடை தொடை என்னும் உறுப்பு ; சுவர்க்கட்டை ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; அரசமரம் ; காண்க : விடமூங்கில் .
துடைகாலன் தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையோன் .