சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| துராய் | அறுகம்புல்லால் திரித்த பழுதை ; தலையணிவகை ; செடிவகை . |
| துராய்க்கட்டை | தரா என்னும் உலோகத்தாற் செய்த பாத்திரம் . |
| துராரம்பலம் | தீச்செயல் . |
| துரால் | செத்தை ; துன்பம் . |
| துராலபம் | சிறுகாஞ்சொறிக்செடி ; அடைதற்கு அரியது . |
| துராலோசனை | தீய யோசனை . |
| துராலோபம் | சிறுகாஞ்சொறிக்செடி . |
| துரி | எழுதுகோல் ; பாரம் ; பாவாற்றி . |
| துரிசு | துன்பம் ; குற்றம் ; குறும்பு ; மயில் துத்தம் . |
| துரிஞ்சில் | வௌவால்வகை ; சீக்கிரிமரம் . |
| துரிதம் | விரைவு , வேகம் , ஆடல்பாடல்களில் தாள விரைவு ; பாவம் ; கலக்கம் ; கேடு . |
| துரியசிவன் | மும்மூர்த்திகட்கும் மேலான சிவன் . |
| துரியத்தானம் | ஆன்மா துரியநிலையில் அடங்குவதற்குரிய உந்திப்பகுதி . |
| துரியம் | நான்காவது ; நான்காம் அவத்தை ; யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ; பொதியெருது ; சுமத்தல் . |
| துரியன் | சுத்தான்மா ; கடவுள் . |
| துரியாதீதம் | துரியம் என்னும் நான்காம் நிலைக்கும் மேம்பட்ட ஐந்தாம் நிலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| துரீ | நெசவுப் பாவாற்றி . |
| துரீயம் | பொதியெருது ; சுமக்கை . |
| துரீலெனல் | எதிர்பாராது விரைந்துவருதற்குறிப்பு . |
| துரு | இருப்புக்கறை ; களிம்பு ; குற்றம் ; செம்மறியாடு ; வேதம் முதலியன ஓதும் சந்தவகை ; மரவகை . |
| துருக்கம் | செல்லுதற்கு அரிய இடம் ; ஒடுக்க வழி ; மலையரண் ; மதில் ; குறிஞ்சிநிலம் ; காடு ; கலக்கம் ; கத்தூரி ; காண்க : குங்குமம் , குங்குமமரம் ; காண்க : குந்துருக்கம் ; கத்தூரிமான் . |
| துருக்கல் | செம்புறைக்கல் ; இரும்புக்கிட்டம் . |
| துருக்கன் | துருக்கிநாட்டான் ; முகமதியன் . |
| துருக்கு | துருக்கருக்கு உரியது ; துருக்கர் மொழி ; துருக்கி நாட்டான் . |
| துருகம் | மதில் . |
| துருசி | காண்க : துருசு . |
| துருசிகுரு | நவச்சாரம் . |
| துருசு | மயில்துத்தம் ; களிம்பு ; மாசு ; விரைவு ; ஆத்திரம் . |
| துருஞ்சில் | காண்க : துரிஞ்சில் . |
| துருணன் | சிவபிரான் . |
| துருத்தி | ஆற்றிடைக்குறை ; தோல் ; ஊதுந்துருத்தி ; உலைத்துருத்தி ; உலையூதுகருவி ; தோற்பை ; நீர்வீசுங் கருவி ; தோலால் அமைந்த ஓர் இசைக்கருவி ; காண்க : ஒத்து ; வயிறு ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; துட்டப்பெண் . |
| துருத்துதல் | வெளித்தோன்றுதல் ; வெளித்தள்ளுதல் . |
| துருத்தூரம் | ஊமத்தை . |
| துருதம் | விரைவு . |
| துருதுருத்தல் | ஆத்திரப்படல் ; அமைதியின்றியிருத்தல் ; துடிதுடித்தல் . |
| துருதுருப்பு | அமைவின்மை ; சுறுசுறுப்பு ; விரைவு . |
| துருதுரும்பை | குழந்தை விளையாட்டுவகை . |
| துருதுருவெனல் | குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு . |
| துருதுரெனல் | குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு . |
| துருதை | தினவு ; ஆசைப்பாடு . |
| துருந்துதல் | துளை பெரிதாக்குதல் ; ஆராய்தல் . |
| துருநாமம் | மூலநோய் . |
| துருப்பணம் | காண்க : துறப்பணம் . |
| துருப்பிடித்தல் | இரும்பில் கறைபற்றுதல் ; குற்ற அடையாளம் கண்டுபிடித்தல் . |
| துருப்பு | படை ; சீட்டுத்துருப்பு . |
| துருப்புக்கூடு | தூற்றாப் பொலி . |
| துருபவருணி | காட்டாமணக்கஞ்செடி . |
| துரும்பன் | கீழ்ச்சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான் ; ஒன்றுக்கும் உதவாதவன் ; கீழ்த்தரச் சாதியான் . |
| துரும்பு | கூளம் ; சிராய் ; சக்கை ; கண்ணுக்கு மை இடும் கருவி ; ஒரு சாதி ; சீட்டுத்துருப்பு . |
| துரும்புமுறித்துபோடுதல் | தடையுண்டாக்குதல் ; பகையுண்டாக்குதல் . |
| துருமசிரேட்டம் | பனைமரம் . |
| துருமதி | கெடுமதி ; கெட்ட எண்ணமுடையவர் . |
| துருமநகம் | முள் . |
| துருமம் | கற்பகத்தரு ; மரம் ; மனக்கலக்கம் ; சாப்பிராமரம் . |
| துருமவருணி | காட்டாமணக்கஞ்செடி . |
| துருமவியாதி | கொம்பரக்கு . |
| துருமாரி | யானை . |
| துருமோற்பலம் | கோங்குமரம் . |
| துருவகம் | குற்றி . |
| துருவங்கட்டுதல் | சோதிடத்தில் கிரகணம் முதலியன அறிதற்கு முறையமைத்தல் ; வழிவகை தேடுதல் ; கணக்கு முதலியவற்றிற்குச் சூத்திரவிதி உண்டாக்குதல் . |
| துருவசக்கரம் | இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானவட்டம் ; சப்தவிருடி மண்டலம் . |
| துருவண்ணம் | வெள்ளி . |
| துருவதாளம் | தாளவகையுள் ஒன்று ; எழுவகைத் தாளத்துள் ஒன்று . |
| துருவம் | அசையாநிலை ; துருவமீன் ; ஒப்பு ; கோல்நடையின் தூரநிலை ; என்றுமிருப்பது ; நவதாளத்துள் ஒன்று ; யோகத்துள் ஒன்று ; உபாயம் ; ஒடுக்கவழி ; வீடுபேறு ; ஊழ் ; மலைக்கோட்டை ; உறுதி ; பூமியின் முனை ; கூத்து விகற்பம் . |
| துருவமண்டலம் | வானிடத்திலுள்ள துருவப் பகுதி . |
| துருவர்ணம் | காண்க : துருவவண்ணம் . |
| துருவல் | தேடல் ; துளைத்தல் ; துருவிய பொருள் ; தேங்காய் முதலியன துருவும் கருவி . |
| துருவல்மணை | தேங்காய் துருவும் கருவி . |
| துருவலகு | தேங்காய் துருவும் கருவி . |
| துருவலகுகுற்றி | தேங்காய் துருவும் கருவி . |
| துருவாக்கியம் | சோதிடத்தில் பயன்படுத்தும் கணக்கு வாய்பாட்டுவகை . |
| துருவாட்டி | ஏலம் . |
| துருவாடு | செம்மறியாடு . |
| துருவாதி | காட்டாமணக்கஞ்செடி . |
| துருவு | துருவல் ; தேடுகை ; தொளை . |
|
|
|