சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| துறைமுன்றில் | வீட்டின் முற்றம் . |
| துறைவன் | நெய்தல்நிலத் தலைவன் . |
| துன் | வளை . |
| துன்பம் | மனவருத்தம் ; மெய்வருத்தம் ; நோய் ; கெடுதி ; வறுமை . |
| துன்பன் | துன்பமுள்ளவன் . |
| துன்பு | காண்க : துன்பம் . |
| துன்புறுத்துதல் | வருத்துதல் . |
| துன்புறுதல் | வருந்துதல் . |
| துன்மதி | கெடுமதி ; தீயோன் ; மூடத்தன்மை , அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தைந்தாம் ஆண்டு . |
| துன்மந்திரி | தீயவுரை சொல்லும் அமைச்சன் . |
| துன்மரணம் | தற்கொலை முதலியவற்றால் நேரும் சாவு . |
| துன்மார்க்கம் | தீநெறி . |
| துன்மார்க்கன் | தீநெறியாளன் . |
| துன்முகி | அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு ; தீய முகத்தோற்றமுள்ளவன் . |
| துன்மை | தீமை . |
| துன்றுதல் | நெருங்குதல் ; கிட்டுதல் ; பொருந்துதல் . |
| துன்றுநர் | நண்பர் . |
| துன்னகாரர் | தையற்காரர் . |
| துன்னநாயகர் | தையற்காரர் . |
| துன்னபோத்து | உழவெருமை . |
| துன்னம் | தையல் ; ஊசித்துளை ; ஒரு மரவகை . |
| துன்னம்பெய்தல் | தைத்தலைக்கொள்ளுதல் . |
| துன்னர் | தையற்காரர் ; தோல்வினைஞர் . |
| துன்னல் | நெருங்கல் ; தைத்தல் ; சிறு திவலை . |
| துன்னலர் | பகைவர் . |
| துன்னாதார் | பகைவர் . |
| துன்னார் | பகைவர் . |
| துன்னிமித்தம் | தீய சகுனம் . |
| துன்னியார் | அடுத்தோர் ; நண்பர் . |
| துன்னீதி | தீயவழி . |
| துன்னீர் | எச்சில் ; கழிவுநீர் . |
| துன்னு | இறைச்சி ; முதுகு ; தசை . |
| துன்னு | (வி) நெருங்கு ; பொருந்து . |
| துன்னுதல் | பொருந்துதல் ; மேவுதல் ; அணுகுதல் ; செறிதல் ; செய்தல் ; அடைதல் ; ஆராய்தல் ; தைத்தல் ; உழுதல் . |
| துன்னுநர் | நண்பர் . |
| துன்னூசி | தையலூசி ; கலப்பையின் கொழு . |
| துன்னெறி | தீயவழி . |
| துனாவி | திப்பிலி . |
| துனி | வெறுப்பு ; சினம் ; புலவிநீட்டம் ; பிரிவு ; துன்பம் ; அச்சம் ; நோய் ; குற்றம் ; இடையூறு ; ஆறு ; வறுமை . |
| துனித்தல் | வெறுத்தல் ; சினத்தல் ; கலாய்த்தல் ; நெடிது புலத்தல் . |
| துனிநாதம் | கடல் . |
| துனிப்பு | வெறுப்பு . |
| துனைதல் | விரைதல் . |
| துனைவு | விரைவு . |
|
|