தூவானம் முதல் - தூனனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தூவானம் சிதறுமழை ; அருவிவீழ் இடம் .
தூவி பறவை இறகு ; மயிற்றோகை ; அன்னத்தினிறகு ; அன்னப்பறவை ; சூட்டு ; எழுதுகோல் ; தூள் ; மீன்சிறகு .
தூவிப்பொன் கிளிச்சிறை என்னும் பொன் .
தூவியளத்தல் எளிதாகப் பெய்து அளத்தல் .
தூவு ஊன் .
தூவு (வி) தூவுஎன் ஏவல் ; சிதறு ; தெளி .
தூவுதல் தெளிதல் ; இறைத்தல் ; அளக்கும் போது எளிதாக மேலே பெய்தல் ; அருச்சித்தல் ; மிகச் சொரிதல் ; ஒழிதல் ; மழைபெய்தல் .
தூவுரை நல்லுரை .
தூவெள்ளறுவை அழுக்கற்ற வெண்ணிறமுள்ள ஆடை .
தூவெளி அறிவுவெளி , சிதாகாசம் .
தூவையர் புலாலுண்போர் .
தூள் துகள் ; புழுதி ; பூந்தாது ; மருந்துப்பொடி ; திருநீறு ; கறிப்பொடி ; மூக்குத்தூள் ; சிறியவை ; சிறுமுத்து .
தூள்படுத்துதல் முற்றம் அழித்தல் ; அட்டகாசம் செய்தல் .
தூள்படுதல் கடுமையாகச் செயல்புரிதல் .
தூளம் தூள் ; திருநீற்றை நீரில் குழையாது பூசுதல் .
தூளனம் தூள் ; திருநீற்றை நீரில் குழையாது பூசுதல் .
தூளி புழுதி ; பூந்தாது ; குதிரை ; குதிரையின் ஆர்ப்பு ; ஏணை ; குழந்தைத் தொட்டில் .
தூளிசாலம் அருகன் கோயிலின் முதல் மதில் .
தூளித்தல் பருத்தல் ; திருநீற்றால் உத்தூளனஞ் செய்தல் .
தூளித்துவசன் காற்று .
தூளிதம் பொடிக்கப்பட்டது ; திருநீறு .
தூளிமட்டம் தரைமட்டம் .
தூற்றல் பழிச்சொல் ; சிறுமழை .
தூற்றாப்பொலி தூற்றாத நெற்குவியல் .
தூற்றி புறங்கூறுவோன் ; பெருக்குவோன் .
தூற்றிக்கொள்ளுதல் தெரிந்துகொள்ளுதல் .
தூற்று பொலிதூற்றுகை ; பழிப்பு .
தூற்றுக்காடு சிறுதூறு .
தூற்றுக்கூடை பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை ; பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் .
தூற்றுகூடை பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை ; பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் .
தூற்றுத்தலையன் பிராய்மரம் .
தூற்றுதல் சிதறுதல் ; தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் ; புழுதி முதலியவற்றை இறைத்தல் ; பரப்புதல் ; அறிவித்தல் ; பழிகூறுதல் ; வீண்செலவு செய்தல் .
தூற்றுமுறம் நெற்பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் .
தூறல் காண்க : தூற்றல் .
தூறன் அவதூறு சொல்பவன் ; காமுகன் ; குடிக்குப் பழியாயுள்ளவன் .
தூறாக்குதல் பழித்தல் .
தூறு புதர் ; குவியல் ; குறுங்காடு ; சுடுகாடு ; காண்க : திராய் ; மஞ்சள் ; பழிச்சொல் ; தீங்கு .
தூறுகுணம் காண்க : கடம்பு .
தூறுதல் மழை தூவுதல் ; கிளைத்தல் ; செய்தி பரவுதல் ; சடைபற்றுதல் ; நிந்தித்தல் .
தூறுதலை சிலும்பலான மயிர்த்தலை .
தூறுதலையன் பற்றைத் தலையன் ; காண்க : பிராய் .
தூறுபடுதல் சிதறிப்போதல் ; சடைபற்றுதல் ; பழிமொழி கூறப்படல் .
தூறுபுட்பம் சீந்திற்கொடி ; சிலந்தி .
தூறுமாறு தீநெறி .
தூறுவாதி தீம்பாலைமரம் .
தூனம் வருத்தம் ; அசைவு .
தூனனம் அகற்றல் ; அசைதல் .