சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தெய்வீகமாதல் | இறத்தல் . |
தெய்வோபாசனை | கடவுள் வழிபாடு . |
தெரிக்கல் | விரித்துக் கூறுதல் . |
தெரிகடை | நல்லவை தெரிந்தெடுத்தபின் எஞ்சியது . |
தெரிகவி | தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள் திரட்டு . |
தெரிகோல் | பொருள்களை ஆராயும் துலாக்கோல் . |
தெரிசம் | அமாவாசை . |
தெரிசி | குதிரை . |
தெரிசித்தல் | காண்க : தரிசித்தல் . |
தெரிசியம் | காட்சி . |
தெரிசொல் | சத்தியம் ; தெரிந்த காரணம் ; அருஞ்சொல் விளக்கம் . |
தெரித்தல் | வெளிப்படுத்துதல் ; காலங்கழித்தல் ; சொல்லுதல் ; குறிப்பிட்டு விளக்குதல் ; எழுதுதல் ; தெரிந்தெடுத்தல் ; கொழித்தல் ; பங்கிடுதல் ; மாறுபடுதல் . |
தெரிதரல் | அறிதல் ; தோற்றுதல் . |
தெரிதருதேற்றவுவமை | ஐயுற்றதனைத் தெரிந்து துணிவதை விளக்கும் உவமையணி . |
தெரிதல் | தோன்றுதல் ; விளக்கமாதல் ; அறிதல் ; ஆராய்தல் ; தெரிந்தெடுத்தல் ; அரித்தெடுத்தல் ; காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல் ; மனமறிதல் ; கேட்டல் . |
தெரிந்தவன் | அறிவுடையோன் . |
தெரிந்துசெயல்வகை | ஒருவன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம் . |
தெரிந்துணர்ச்சி | அறிந்துணரும் உணர்வு . |
தெரிந்துணர்வு | அறிந்துணரும் உணர்வு . |
தெரிந்துதெளிதல் | அமைச்சர் முதலாயினாரைப் பலவகையானும் ஆராயந்து தெளிகை . |
தெரிந்துவினையாடல் | அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின்கண்ணே அவரை ஆளும் திறம் . |
தெரிநிலை | தெளிவுபட அறிவிக்கும் நிலை ; விளங்கிநிற்பது ; ஆராய்ந்து அறியும் நிலை ; எல்லா விரலும் விரிந்து குவிந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தெரிநிலை வினை . |
தெரிநிலைவினை | காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைச்சொல் . |
தெரிப்பு | அறிவிப்பு ; சொல்லுகை ; ஆராய்வு ; எழுதுகை ; கொழிப்பு ; சீட்டு ; கொழிக்கப்பட்டவை . |
தெரிபடுதல் | தெரிந்தெடுக்கப்படுதல் ; தோன்றுதல் . |
தெரிபொருள் | அறிபவனான ஆன்மா . |
தெரிமா | அரிமா , சிங்கம் . |
தெரியக்காட்டுதல் | வெளிப்படுத்துதல் . |
தெரியத்தெரிதல் | தெளிவாயறிதல் . |
தெரியப்படுத்துதல் | அறிவித்தல் . |
தெரியல் | தெரிந்துகொள்ளுதல் ; பூமாலை . |
தெரியலர் | அறிவில்லார் ; பகைவர் . |
தெரியவுணர்தல் | தெளியவறிதல் . |
தெரியாத்தனம் | அறியாமை . |
தெரியுமோர் | தெரிவோர் . |
தெரிவித்தல் | அறிவித்தல் ; வெளிப்படுத்தல் . |
தெரிவு | அறிவு ; தெரிந்தெடுக்கை ; தெரிந்தெடுக்கப்பட்டது ; தோற்றம் ; அறியப்பட்டது . |
தெரிவை | பெண் ; இருபத்தைந்து முதல் முப்பத்தொரு வயதிற்குட்பட்ட பெண் ; கன்னியாராசி . |
தெரு | வீதி ; வழி . |
தெருக்கூத்து | தெருவெளியில் நடக்கும் நாடகம் ; எல்லோரும் நகைக்கத்தக்கது . |
தெருட்சி | அறிவு ; தெளிவு ; முதற்பூப்பு . |
தெருட்டல் | தெளியச்செய்தல் ; யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை . |
தெருட்டு | அறிவிப்பு ; தேற்றுகை ; பூப்படைதல் . |
தெருட்டுக்கலியாணம் | இருதுசாந்தி ; கலியாணமாதற்குரிய பருவத்தில் செய்யும் சடங்கு . |
தெருட்டுதல் | அறிவுறுத்துதல் ; மனத்தைத் தெளிவித்தல் ; ஊடல் தீர்த்தல் ; யாழ்நரம்பு திருத்துதல் . |
தெருண்டபெண் | பூப்படைந்த பெண் . |
தெருணை | ஒரு மரவகை . |
தெருமரல் | மனச்சுழற்சி ; அச்சம் . |
தெருமருதல் | மனம் சுழலுதல் . |
தெருவம் | காண்க : தெரு . |
தெருவாசல் | வெளிவாசல் ; வெளிவாசலின் பக்கத்திலுள்ள திண்ணை . |
தெருவிலழகி | காண்க : குப்பைமேனி . |
தெருவு | காண்க : தெரு . |
தெருவுபாடு | வீட்டின் முன்புறம் . |
தெருள் | அறிவின் தெளிவு . |
தெருள்வு | அறிவின் தெளிவு . |
தெருளான் | அறிவிலி . |
தெருளுதல் | உணர்வுறுதல் ; தெளிதல் ; விளங்குதல் ; பூப்படைதல் . |
தெல் | தெல்லுக்காய் . |
தெல்லாட்டம் | ஒரு விளையாட்டுவகை ; வஞ்சனை . |
தெல்லு | தெல்லுக்காய் ; ஒரு விளையாட்டுவகை ; பல்லக்குப்போகிகள் தோள்மாற்றும் அஞ்சலிடம் ; நீண்ட பாத்தி ; நெடுங்கிடங்கு . |
தெல்லுக்கட்டுதல் | இழுபறிப்படுதல் ; பாத்திகட்டுதல் . |
தெல்லுக்காரர் | தோள்மாற்றும் பல்லக்குப் போகிகள் ; அஞ்சற்காரர் . |
தெல்லுப்பு | வளையலுப்பு . |
தெல்லோட்டு | ஓய்வில்லாத அலைக்கழிப்பு . |
தெலிங்கம் | காண்க : தெலுங்கம் . |
தெலுகு | ஒரு நாடு ; தெலுங்குமொழி . |
தெலுங்கம் | ஒரு நாடு ; தெலுங்குமொழி . |
தெலுங்கு | ஒரு நாடு ; தெலுங்குமொழி . |
தெவ் | பகை ; பகைவன் ; போர் ; கொள்ளுகை . |
தெவ்வம் | பகைவன் . |
தெவ்வர்முனைப்பதி | பாசறை . |
தெவ்வன் | பகைவன் . |
தெவ்வினை | போர் . |
தெவ்வு | பகை ; சந்திரன் ; கொள்ளுகை . |
![]() |
![]() |
![]() |