சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தேயுடலி | காண்க : தேவாங்கு . |
தேயுலிங்கம் | அக்கினி வடிவமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம் . |
தேர் | இரதம் ; சிறுதேர் ; காண்க : கொல்லாவண்டி ; உரோகிணிநாள் ; கானல் ; பௌத்த முனிவர் . |
தேர்க்கவி | காண்க : இரதபந்தம் . |
தேர்க்கால் | தேர்ச்சக்கரம் ; குயவனின் சக்கரம் . |
தேர்க்குடம் | காண்க : தேர்க்குழிசி ; தேர்முடி ; தேரின் அலங்காரக்குடம் . |
தேர்க்குழிசி | தேரின் சக்கரக்குடம் . |
தேர்க்கூம்பு | கொடிஞ்சிமரம் ; தேரின் முடி . |
தேர்க்கொடி | தேரில் கட்டிய கொடி . |
தேர்க்கொடிஞ்சி | கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்பட்ட உறுப்பு ; தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம் ; கொடிஞ்சி மரம் ; இரதத்தின் சிகரம் . |
தோக்கொடுங்கை | தேரின் வெளிப்பக்கத்து வளைவு . |
தேர்க்கொற்றன் | தேரோட்டுவோன் . |
தேர்ச்சி | ஆராய்ச்சி ; கல்வி ; தெளிவு ; பயிற்சி ; தேர்வில் வெற்றிபெறுகை ; ஆலோசனை . |
தேர்ச்சித்துணைவர் | மந்திரத்தலைவர் ; அமைச்சர் ; நட்பினர் . |
தேர்ச்சில் | தேர்ச்சக்கரம் . |
தேர்ச்சிவரி | உறவினர்க்குத் தன் துன்பங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை . |
தேர்ச்சினை | தேர்மொட்டு . |
தேர்த்தட்டு | தேரின் உட்பரப்பு . |
தேர்த்தல் | கலத்தல் . |
தேர்த்தானை | தேர்ப்படை . |
தேர்த்திருநாள் | கோயில் தேர்த்திருவிழா . |
தேர்தல் | ஆராய்தல் ; சிந்தித்தல் ; அறிதல் ; தெளிதல் ; தெரிந்தெடுத்தல் ; தேடுதல் ; உறுதி செய்தல் ; கொள்ளல் ; பயிற்சியடைதல் ; ஐயுறுதல் . |
தேர்ந்தவன் | அறிஞன் ; கற்றவன் ; புலவன் . |
தேர்ந்துசெயல் | செயல் கைகூடும் வகையறிந்து செயல்புரிகை . |
தேர்நிலை | தேர் நிலையாக நிற்குமிடம் . |
தேர்ப்பாகன் | தேரோட்டி ; வலவன் ; சாரதி ; புதன் . |
தேர்ப்பார் | தேரின் உட்பரப்பு . |
தேர்மரச்சுற்று | தேர்த்தட்டைச் சுற்றிவர அமைக்கும் பலகை . |
தேர்மறம் | அரசனது போர்த்தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை . |
தேர்முட்டி | கோயில்தேர் நிற்கும் இடம் . |
தேர்மொட்டு | கொடிஞ்சிமரம் ; தேர்க்கூம்பு ; பூவரசின் முதிர்ந்த மொட்டு . |
தேர்வடம் | தேரிழுக்கும் பெரிய கயிறு . |
தேர்வலவன் | தேர்ப்பாகன் . |
தேர்வலான் | தேர்ப்பாகன் . |
தேர்வீரர் | தேர்நடத்திப் போர்புரியும் வீரர் . |
தேர்வு | ஆராய்ச்சி ; தேர்ந்தெடுத்தல் ; பயிற்சி ; சுவை . |
தேரகன் | தேரோட்டி . |
தேரடி | தேர்ச்சக்கரம் ; திருமாலின் சக்கரப் படை ; காண்க : தேர்முட்டி . |
தேரர் | பௌத்தமுனிவர் ; சித்தருள் ஒருவர் . |
தேரலர் | பகைவர் . |
தேரறேர் | உண்மைத் தேர் அல்லாத தேரான கானல் நீர் . |
தேரன் | பௌத்தன் ; தமிழ் மருத்துவநூல்கள் பல இயற்றிய சித்தரான தேரையர் . |
தேராணி | தேரின் அச்சாணி . |
தேராதுதெளிதல் | ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதிசெய்தல் . |
தேரார் | கல்லாதார் ; கீழோர் ; பகைவர் . |
தேரி | மணல்தரை ; மணற்குன்று . |
தேரிடக்கியம் | காண்க : தேர்க்கொடி . |
தேரை | தவளைவகை ; தூண்டிலில் உணவு ; தேங்காய்நோய் ; கல்லின் குற்றம் . |
தேரைபாய்தல் | பிறக்கும் குழந்தை இளைக்கும் படி கருப்பிணிமீது தேரை விழுகை ; நோய்ப்பட்டு உடல் தேய்தல் . |
தேரோர் | தேர்வீரர் ; ஏர்க்களம் போர்க்களம் இவற்றை இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர் . |
தேரோன் | தேருடையவனான சூரியன் ; தேர்ப்படைவீரன் . |
தேலிக்கை | எளியது . |
தேலுதல் | தப்புதல் ; காண்க : தேறுதல் . |
தேவக்கிரியை | ஒரு பண்வகை ; தெய்வச்செயல் . |
தேவகங்கை | ஆகாயகங்கை . |
தேவகடாட்சம் | இறைவனருள் . |
தேவகண்ணி | மலைவேப்பமரம் . |
தேவகணம் | தேவர்களின் கூட்டம் ; அசுவினி , மிருகசீரிடம் , புனர்பூசம் , பூசம் , அத்தம் , சுவாதி , அனுடம் , திருவோணம் , இரேவதி என்னும் ஒன்பது நட்சத்திரங்கள் . |
தேவகணிகை | காண்க : தேவதாசி . |
தேவகதி | நால்வகைப் பிறப்புகளுள் ஒன்று , தெய்வப்பிறப்பு . |
தேவகந்தம் | குங்கிலியம் ; நெய்ச்சிட்டிப்பூண்டு . |
தேவகன்மி | கோயில் கடவுள் காரியம் பார்ப்பவன் . |
தேவகாந்தாரி | ஒரு பண்வகை . |
தேவகானம் | தேவர்கள் பாடும் இசை . |
தேவகுசுமம் | கிராம்பு . |
தேவகுஞ்சரி | தெய்வயானை . |
தேவகுண்டம் | தானாக உண்டான ஊற்று . |
தேவகுமாரன் | கடவுளின் புதல்வனான இயேசு கிறிஸ்து . |
தேவகுரு | தேவர்க்கு ஆசானான வியாழன் ; காண்க : தேவகுருவம் . |
தேவகுருவம் | அறுவகைப் போகபூமிகளுள் ஒன்று . |
தேவகுலம் | கோயில் . |
தேவகோட்டம் | கோயில் . |
தேவகோடி | ஒரு பேரெண் . |
தேவசடங்கு | சங்கநிதி . |
தேவசபை | இந்திரசபை . |
![]() |
![]() |
![]() |