தொடைக்கயிறு முதல் - தொந்திப்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தொடைக்கயிறு எருதைக்கலப்பை நுகத்தோடு பிணிக்கும் சிறுகயிறு , பூட்டாந்தளை .
தொடைதட்டிவேளாளர் தொடையில் சவரக்கத்தியைத் தட்டித் தீட்டும் நாவிதர் .
தொடைதட்டுதல் தொடையில் அடித்துக் கொண்டு வீரவாதம் செய்தல் ; சண்டைக் கழைத்தல் .
தொடைமுரண் சொல்லாலும் பொருளாலும் மாறுபட அமைக்கும் முரண்தொடை என்னும் செய்யுளின் தொடை அமைப்பு .
தொடையகராதி சதுரகராதிப் பகுதியுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி .
தொடையல் தொடர்ச்சி ; கட்டுகை ; பூமாலை ; தோளணிமாலை ; தேன்கூடு ; அழிவு .
தொடைவாழை மருந்துச் செடிவகை ; அடித்தொடையில் புறப்படும் மேகக்கட்டி ; வீக்கக்கால் .
தொடைவில்லை சிறிய வட்டத் தலையணை .
தொண்டகம் குறிஞ்சிநிலப் பறை ; ஆகோட்பறை .
தொண்டச்சி பணிப்பெண் ; தேவடியாள் .
தொண்டர் அடியார் ; அடிமைகள் ; உலகப்பற்றில் ஈடுபட்டவர் .
தொண்டர்சீர்பரவுவார் அடியார் பெருமைகளை வெளிப்படுத்தியவரான பெரியபுராணம் பாடிய சேக்கிழாரது பட்டப்பெயர் .
தொண்டரடிப்பொடி தெய்வஅடியார்களின் காலில் ஒட்டிய தூசி ; தொண்டரடிப்பொடியாழ்வார் .
தொண்டலம் யானைத்துதிக்கை ; கள் .
தொண்டன் அடியான் .
தொண்டாடுதல் பணிசெய்தல் .
தொண்டி சோழர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; சேரர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் கட்டை ; தொண்டுசெய்பவள் ; சிறு தோட்டம் ; துளை ; நெல்லாக்கின கள் ; மரவகை ; காண்க : கலப்பைக்கிழங்கு .
தொண்டிக்கள் நெல்லாற் சமைத்த கள் .
தொண்டிச்சி அடிமைச்சி ; தேவடியாள் .
தொண்டியோர் சோழகுலத்தோர் ; சேரர் .
தொண்டீரன் தொண்டைமண்டல அரசன் .
தொண்டு அடிமைத்தனம் ; அடிமையாள் ; கடவுள் வழிபாடு ; ஒடுக்கவழி ; அணிவகை ; பழைமை ; ஒன்பது ; ஒரு பூண்டு ; கோழியுள்ளான் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் தொங்கவிடும் கட்டை ; தேங்காய் ; பலா முதலியவற்றின் மேற்றோல் .
தொண்டுகிழவன் முதிர்ந்த கிழவன் .
தொண்டுதுரவு பணிவிடை ; உளவு .
தொண்டை குரல்வளை ; கழுத்து ; குரல் ; யானைத் துதிக்கை ; ஆதொண்டைக்கொடி ; சிறு கடல்மீன்வகை ; தொண்டைமண்டலம் .
தொண்டைக்கட்டு கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுகை ; உண்ணவும் பேசவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை ; தொண்டைநோய்வகை .
தொண்டைக்கதிர் கதிர் வெளிப்படுதற்குரிய பருவம் .
தொண்டைக்குழி குரல்வளைக் குழி .
தொண்டைகத்துதல் பெருங்குரலிடுதல் .
தொண்டைகம்முதல் கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுதல் .
தொண்டைகாட்டல் உரத்துப் பேசல் .
தொண்டைத்தூரு உள்நாக்கு வளரும் நோய் .
தொண்டைதிறத்தல் இசைக்குரல் சுத்தப் படுகை ; உரக்கக் கத்துகை .
தொண்டைநாடு தமிழ்நாட்டுப் பகுதிகளுள் ஒன்று .
தொண்டைப்புகைச்சல் தொண்டை புகைந்து இருமுதல் .
தொண்டைமணி குரல்வளை .
தொண்டையடைத்தல் பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை .
தொண்டையடைப்பு தொண்டைநோய்வகை .
தொண்டையுடைதல் பருவத்தாற் குரல் மாறுதல் .
தொண்டையோர் தொண்டைமண்டல அரசர் .
தொண்டைவிடுதல் தெளிவாய்க் குரலிடுதல் ; பெருங்குரலிடுதல் .
தொண்டைவைத்தல் கூவுதல் .
தொண்டொண்டொடெனல் பறையின் ஒலிக்குறிப்பு .
தொண்ணாத்தல் கெஞ்சிநிற்றல் .
தொண்ணூறு ஒர் எண் , ஒன்பது பத்து , நூறுக்குப் பத்துக் குறைந்த எண் .
தொணதொணப்பு வெறுப்புண்டாகும்படி ஒயாமல் பேசுகை .
தொத்தல் வலியற்றவர் ; வலுவில்லாதது .
தொத்தன் அடிமையாள் .
தொத்தா சிறிய தாய் .
தொத்தாள் அடிமை ; காண்க : தொத்தா .
தொத்திப்பிடித்தல் ஒட்டிக்கொள்ளுதல் ; ஆதாராமாகப் பற்றுதல் ; அடைக்கலம் புகுதல் .
தொத்தியேறுதல் கைகால்களால் பற்றியேறுதல் ; அதிகாரங்காட்டுதல் .
தொத்து பூங்கொத்து ; திரள் ; பற்று ; சார்பு ; அடிமை ; பழமையாய் வரும் நட்பு ; வைப்பாட்டி ; தொற்றுநோய்க்குணம் ; ஆதாரப்பொருள் .
தொத்துதல் ஒட்டுதல் ; பற்றுதல் ; படர்தல் ; தொங்குதல் ; தொடர்தல் ; நோயோட்டுதல் .
தொத்துநோய் காண்க : தொற்றுநோய் .
தொத்துவியாதி காண்க : தொற்றுநோய் .
தொத்துவேலை இணைக்கும் வேலைப்பாடு ; சரியாய் முடிக்காத வேலை .
தொத்துளிப்பாய் பாய்வகை .
தொத்தூன் தொங்குசதை .
தொந்தக்காரர் உறவினர் ; பழம்பகைவர் .
தொந்தப்படுதல் சம்பந்தப்படுதல் ; ஒட்டுநோய் பற்றுதல் .
தொந்தப்பழி தலைமுறை தலைமுறையாக வரும் பழிப்பு ; பரம்பரையாக வரும் பகை .
தொந்தப்பாடு தொடர்பு , சம்பந்தம் .
தொந்தம் இரட்டை ; புணர்ச்சி ; தொடர்பு ; பகை ; மரபுவழிநோய் ; ஆயுதவகை ; பழமை ; நெருங்கிய பழக்கம் .
தொந்தயுத்தம் இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் .
தொந்தரவு துன்பம் ; தொல்லை .
தொந்தரித்தல் வருத்துதல் .
தொந்தரை காண்க : தொந்தரவு .
தொந்தவினை முற்பிறப்பில் செய்த இருவினைப்பயன் .
தொந்தனை இணைவிழைச்சு ; பிணைப்பு .
தொந்தார்த்தம் இருபொருள்படுதல் ; முற்பிறப்பில் இருவினைப்பயன் .
தொந்தி வயிறு ; தொப்பை , பெருவயிறு ; தசைமடிப்பு ; நோய்வகை ; பரவமகளிர் அணியும் கைக்காப்பு .
தொந்தித்தல் பற்றுதல் ; கலத்தல் ; தாறுமாறாதல் ; தொடர்தல் .
தொந்திதள்ளுதல் வயிறு பருத்தல் ; வளைந்து போகை .
தொந்திப்பு நோய்க்கலப்பு ; நட்பு ; தீராப்பகை .