சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தோலோதோல் | உடம்படாமைக் குறிப்பு ; எவ்விதமும் . |
தோவத்தி | ஆண்மக்களின் அரையாடை . |
தோவம் | ஒரு கால அளவு . |
தோவாளம் | கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர் . |
தோழ் | மாட்டுத்தொழுவம் . |
தோழம் | மாட்டுக்கொட்டில் ; கடல் ; பேரெண் . |
தோழமை | நட்பு . |
தோழன் | நண்பன் . |
தோழி | பாங்கி ; பணிசெய்பவள் ; செவிலித்தாயின் மகள் ; தேவி ; அரக்கு . |
தோழிச்சி | பாங்கி ; செவிலித்தாயின் மகள் ; தேவி . |
தோள் | புயம் ; கை ; தொளை . |
தோள்கொட்டுதல் | வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல் . |
தோள்கொடுத்தல் | உதவுதல் ; சுமையைத் தாங்குதல் . |
தோள்சேர்தல் | தழுவுதல் . |
தோள்தட்டுதல் | காண்க : தோள்கொட்டுதல் . |
தோள்படிகொள்ளுதல் | ஒன்றைப் பற்றாகக் கொள்ளுதல் . |
தோள்மாற்றுதல் | காண்க : தோண்மாற்றுதல் . |
தோள்மாறுதல் | தோளை மாறிக்கொடுத்தல் ; மனம் வேறுபடுதல் . |
தோள்வந்தி | தோளில் அணியும் வளைவகை . |
தோள்வலி | புசபலம் ; தோள்நோவு . |
தோள்வளை | தோளில் அணியும் அணிவகை . |
தோளணி | தோளில் அணியப்படும் அணிகலவகை . |
தோளாமணி | தொளையிடப்படாத இரத்தினம் . |
தோளி | அவுரிப்பூண்டு ; அரக்கு ; நன்னீர் மீன்வகை . |
தோளிற்கொள்ளுதல் | திருமணஞ் செய்துகொள்ளுதல் . |
தோளுதல் | துளைத்தல் ; தோண்டுதல் ; நீக்குதல் . |
தோளோச்சல் | தோளையெடுத்தல் ; கையை உயர்த்துதல் . |
தோற்கட்டு | முன்கைத் தோற்கவசம் . |
தோற்கடித்தல் | தோற்றோடப்பண்ணல் . |
தோற்கருவி | தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை . |
தோற்கருவியாளர் | வாச்சியம் இசைப்போர் . |
தோற்கவசம் | தோலால் அமைந்த சட்டை . |
தோற்காது | காண்க : தோற்செவி . |
தோற்காற்பறவை | காண்க : தோலடிப்பறவை . |
தோற்கிடங்கு | தோல் பதனிடும் இடம் . |
தோற்கைத்தாளம் | முன்கையில் அணியும் தோற்கவசம் . |
தோற்சித்தை | எண்ணெய் வைக்க உதவும் தோலாலான பாத்திரவகை . |
தோற்செருப்பு | செருப்புவகை . |
தோற்செவி | புறச்செவி ; புறச்செவியுடைய உயிரினங்கள் . |
தோற்பரம் | கேடகம் ; நெடுஞ்செருப்பு . |
தோற்பாடி | வேசி ; இழிஞன் . |
தோற்பாய் | தோலால் அமைந்த தவிசு . |
தோற்பாவை | தோலால் செய்யப்பட்ட பொம்மை ; காண்க : தோற்பாவைக்கூத்து . |
தோற்பாவைக்கூத்து | தோற்பாவையைக் கொண்டு ஆட்டும் கூத்து . |
தோற்பு | தோல்வி . |
தோற்புரை | தோலின்துளை ; மேற்றோல் ; சவ்வுள்ள உடலிடம் . |
தோற்பை | தோலால் செயயப்பட்ட பை ; உடம்பு ; துளையுள்ள தோல்குல்லா . |
தோற்றம் | காட்சி ; விளக்கம் ; சாதி ; படைப்பு ; சாயை ; புகழ் ; பார்வை ; உயர்ச்சி ; உற்பத்தி ; பிறப்பு ; உருவம் ; தன்மை ; வலிமை ; சொல்மாலை ; உறுப்பு ; உத்தேசம் ; நாடகப் பிரதேசம் ; எண்ணம் ; மாயை ; இருவகைத் திணை ; காண்க : உயிர்த்தோற்றம் . |
தோற்றரவு | காட்சி ; உற்பத்தி ; வெளிப்படல் ; உயர்பிறப்பு ; ஆவேசம் . |
தோற்றல் | தோன்றுகை ; வலிமை ; புகழ் ; தோல்வி ; வீண் எண்ணம் . |
தோற்றவொடுக்கம் | பிறப்பிறப்பு . |
தோற்றனம் | சுணைக்கேடு . |
தோற்றாங்கொள்ளி | அஞ்சிப் புறங்கொடுத்தோடுபவன் . |
தோற்று | தோன்றுகை . |
தோற்றுதல் | காண்க : தோன்றுதல் ; தோன்றச் செய்தல் ; பிறப்பித்தல் . |
தோற்றுருத்தி | உலைத்துருத்தி ; உடம்பு . |
தோற்றுவாய் | தொடக்கம் ; தொடங்குமிடம் ; பாயிரம் ; பின்வருவதை முன்னர்க் கூறும் குறிப்பு . |
தோற்றுவித்தல் | தோன்றச் செய்தல் ; உண்டாக்கல் ; பிறப்பித்தல் . |
தோற்றுன்னர் | சக்கிலியர் ; செம்மார் . |
தோறு | ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் . |
தோறும் | ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் . |
தோன்றக்கொடுத்தல் | போதுமானபடி கொடுத்தல் . |
தோன்றல் | தோற்றம் ; தலைமை ; உயர்ச்சி ; விளக்கம் ; தலைவன் ; முல்லைநிலத்தலைவன் ; தமையன் ; அரசன் ; மகன் ; மொழிப்புணர்ச்சியில் வரும் தோன்றல் விகாரம் . |
தோன்றல்விகாரம் | மொழிப்புணர்ச்சியில் எழுத்து , சாரியை முதலியன தோன்றுகை . |
தோன்றாத்துணை | பிறரறியாமல் உதவுவோனாகிய கடவுள் . |
தோன்றாவெழுவாய் | ஒரு தொடரில் வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய் . |
தோன்றி | இரத்தம் ; காந்தள் ; ஒரு மலை . |
தோன்றிகர் | வணிகர் ; செல்வர் . |
தோன்றுதல் | கண்காண வெளிப்படல் ; அறியப்படுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; விளங்குதல் ; நிலைகொள்ளுதல் ; வருதல் ; சாரியை முதலியன சொற்களிடையே வருதல் ; உண்டாதல் . |
![]() |
![]() |