சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நகுடம் | மூக்கு . |
நகுத்தம் | புன்கமரம் ; காட்டுப்பச்சிலைவகை . |
நகுதல் | சிரித்தல் ; மகிழ்தல் ; மலர்தல் ; கட்டவிழ்தல் ; ஒளிவிடுதல் ; புள்ளிசைத்தல் ; அவமதித்தல் ; தாழ்த்துதல் . |
நகுதா | மாலுமி ; காக்காய்ச்சரிகைநூல் . |
நகுநயமறைத்தல் | களவுக் கூட்டத்தின்முன் தலைவி நாணத்தால் உள்ளடங்கிய தன் மகிழச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை . |
நகுநலம் | கீரிப்பிள்ளை . |
நகுலன் | பரிமாவுகைப்போன் ; சிவன் ; அறிஞன் ; புதல்வன் ; பஞ்சபாண்டவருள் ஒருவன் . |
நகேசன் | மலைகட்குத் தலைவனான இமயமலை . |
நகேசனங்கை | இமயமலையின்பெண்ணான பார்வதி . |
நகை | சிரிப்பு ; மகிழ்ச்சி ; இன்பம் ; மதிப்பு ; இனிப்பு ; இகழ்ச்சி ; நட்பு ; நயச்சொல் ; விளையாட்டு ; மலர் ; பூவின்மலர்ச்சி ; பல் ; பல்ல¦று ; முத்து ; முத்துமாலை ; அணிகலன் ; ஒப்பு . |
நகை | (வி) சிரி ; பழி . |
நகைகொட்டுதல் | மிகச் சிரித்தல் . |
நகைச்சொல் | வேடிக்கைப்பேச்சு ; இகழ்மொழி . |
நகைத்தல் | சிரித்தல் ; நிந்தித்தல் . |
நகைத்திறச்சுவை | விதூடகக் கூத்து . |
நகைநட்டு | நகை முதலிய பொருள்கள் . |
நகைநாணயம் | நகை முதலிய பொருள்கள் . |
நகைப்பு | சிரிப்பு ; ஏளனம் . |
நகைப்புலவாணர் | நட்புக்குரியரானவர் . |
நகைமுகம் | சிரித்தமுகம் ; உடன்பட்டமை தோற்றம் முகப்பொலிவு . |
நகையாடுதல் | சிரித்தல் ; எள்ளுதல் . |
நகையால் | பகன்றைச்செடி . |
நகைவர் | நட்பினர் . |
நகைவேழம்பர் | விகடஞ்செய்வோர் . |
நங்கணவாய்ச்சி | ஒரு பறவைவகை . |
நங்கள் | நாங்கள் என்பது வேற்றுமையுருபை ஏற்கும்போது அடையும் உருவம் . |
நங்கனை | அரைப்பட்டிகையின் உறுப்பு . |
நங்கு | ஏளனம் , பரிகாசம் . |
நங்குகாட்டுதல் | எள்ளிநகையாடுதல் . |
நங்குதல் | எள்ளிநகையாடுதல் . |
நங்குரம் | காண்க : நங்கூரம் . |
நங்கூரந்தூக்குதல் | நங்கூரத்தைக் கடலிலிருந்து மேலேயெடுத்தல் ; கப்பல் புறப்படுதல் . |
நங்கூரம் | கப்பலை நிறுத்திவைக்கும் கருவி . |
நங்கை | பெண்ணிற் சிறந்தவள் ; மருமகள் . |
நங்கைநாச்சி | தலைவி . |
நச்சறுப்பாய்ஞ்சான் | காண்க : நஞ்சறப்பாய்ஞ்சான் . |
நச்சறுப்பான் | காண்க : நஞ்சறப்பாய்ஞ்சான் . |
நச்சறை | நஞ்சுக்கிருப்பிடம் . |
நச்சி | வீண்வார்த்தை பேசி துன்புறுத்துபவள் . |
நச்சினி | கேழ்வரகு ; நாலாமாதம் என்று பொருள்கொண்ட மருத்துவக் குழூஉக்குறி . |
நச்சு | ஆசை ;' விரும்பப்படும் பொருள் ; தொந்தரவு ; அலப்பல் ; தாமதம் ; சிறிய . |
நச்சுக்கண் | பொடும்பார்வை . |
நச்சுக்கத்தி | நஞ்சூட்டிய கத்தி ; மிகக் கெட்டவர் . |
நச்சுக்குழல் | தொலைநோக்கி ; காண்க : சுங்குத்தான்குழல் . |
நச்சுக்கொடி | காண்க : நஞ்சுக்கொடி . |
நச்சுச்சொல் | செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல் ; கொடுஞ்சொல் . |
நச்சுதல் | விரும்புதல் ; அலப்புதல் ; தொந்தரவு செய்தல் . |
நச்சுநச்செனல் | தொந்தரவுசெய்தற் குறிப்பு ; அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற் குறிப்பு ; ஓசையிடுதற் குறிப்பு . |
நச்சுப்படைக்கலம் | நஞ்சு தோய்க்கப்பட்ட ஆயுதம் . |
நச்சுப்பல் | பாம்பின் நச்சுப்பல் ; தீப்பயன் விளைக்கும் பல் . |
நச்சுப்பார்வை | மோகப்பார்வை ; கோபப்பார்வை ; கண்ணூறு . |
நச்சுப்பால் | கள்ளிப்பால் , சீம்பால் ; குழந்தைகளின் உடம்பிற்கு ஏலாதபால் . |
நச்சுப்பிச்சு | ஓயாத் தொந்தரவு ; அலப்புகை . |
நச்சுப்புல் | உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் . |
நச்சுப்பொய்கை | நச்சுநீர் நிறைந்த நீர்நிலை . |
நச்சுமரம் | எட்டி முதலிய நஞ்சுள்ள மரம் . |
நச்சுமழை | விடாத சிறுதூறல் ; காலம் தப்பிப் பெய்து கேடு விளைக்கும் மழை . |
நச்சுவாக்கு | தீச்சொல் . |
நச்சுவாய் | கேடு விளைவிக்கும் வாய் . |
நச்சுவாயன் | ஓயாமற் பிதற்றுபவன் . |
நச்சுவிறகு | கள்ளி , எருக்கு முதலிய நஞ்சாரமுள்ள விறகுகள் . |
நச்சுவேலை | தொந்தரவை உண்டாக்கும் வேலை ; எளிதில் செய்யலாகாத சிக்கலான பணி . |
நச்செலி | சுண்டெலி ; மூஞ்சூறு ; நஞ்சுள்ள எலிவகை . |
நச்செழுத்து | நூலின் முதற் செய்யுளில் முதலெழுத்தாக அமைக்கத்தகாத எழுத்துகள் . |
நசல் | நோய் . |
நசலாளி | நோயாளி . |
நசற்காரன் | நோயாளி . |
நசனை | மாணிக்கக் குற்றத்துள் ஒன்று . |
நசாரி | எட்டிமரம் . |
நசித்தல் | அழிதல் ; குறைதல் ; சாதல் ; அழித்தல் ; அரைத்தல் ; கசக்குதல் ; அடக்கிப் பேசுதல் ; எளிதாக்குதல் . |
நசிதல் | அழிதல் ; நசுங்குதல் ; குறைதல் ; அடக்கிப் பேசப்படுதல் ; நிலைமை சுருங்குதல் ; திரைதல் . |
நசிந்துகொடுத்தல் | பழுத்து மெதுவாயிருத்தல் ; இணங்குதல் . |
நசிப்பு | அழிவு . |
நசியம் | மூக்கிலிடும் மருந்து ; மூக்குப்பொடி . |
நசியல் | நெரிந்தது ; தட்டையானது ; வளைந்து கொடுப்பது . |
![]() |
![]() |
![]() |