சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாகரிகர் | கண்ணோட்டமுடையவர் ; நகரத்தார் ; பல்கலை வல்லோர் ; காமுகர் ; சதுரர் ; சுவைஞர் . |
| நாகரிகி | செப்பமான நடையுடையவள் . |
| நாகரையன் | காண்க : ஆதிசேடன் . |
| நாகல் | நாவல் . |
| நாகலதை | ஆண்குறி . |
| நாகலிங்கம் | நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம்போன்ற உருவத்தைக்கொண்ட பூவுள்ள மரவகை . |
| நாகலோகம் | தேவலோகம் ; கீழேழுலகுள் ஒன்று , பாதலம் . |
| நாகவடம் | காண்க : நாகபடம் . |
| நாகவராளி | ஒரு பண்வகை . |
| நாகவல்லி | வெற்றிலைக்கொடி ; திருமணநிறைவுச் சடங்கில் ஒன்று . |
| நாகவள்ளி | வள்ளிக்கிழங்கு ; வெற்றிலைக்கொடி . |
| நாகவாய் | கடைசற் கருவிவகை . |
| நாகவாயு | தசவாயுக்களில் ஒன்றான விக்கல் முதலியவற்றை உண்டாக்கும் காற்று . |
| நாகவாரிகம் | மயில் ; கருடன் ; அரசர் ஏறுதற்குரிய யானை . |
| நாவாரிகன் | யானைப்பாகன் . |
| நாகவீதி | பால்வீதி மண்டலம் . |
| நாகவீதியர் | துறக்கலோகத்திற்குச் செல்லும் வழியில் வாழும் தேவசாதியார் . |
| நாகன் | காண்க : நாகவாயு . |
| நாகாசனன் | பாம்பை உணவாகவுடையவனான கருடன் . |
| நாகாத்திரம் | காண்க : நாகபாசம் . |
| நாகாதிபன் | இந்திரன் ; ஐராவதம் ; ஆதிசேடன் ; இமயமலை ; மேருமலை ; குறிஞ்சித்தலைவன் . |
| நாகாந்தகன் | நாகங்களைக் கொல்பவனான கருடன் . |
| நாகாபரணன் | நாகங்களை அணிகலனாக உடைய சிவபிரான் . |
| நாகாயுதம் | ஒரு படைக்கலவகை . |
| நாகாரி | கருடன் ; தேவேந்திரன் . |
| நாகாலயம் | பாதலம் ; தேவர்களிருப்பிடம் . |
| நாகியர் | தேவமாதர் . |
| நாகினி | காண்க : வஞ்சிக்கொடி ; வெற்றிலை . |
| நாகு | இளமை ; பெண்மை ; எருமை ; மரை , பெற்றம் , நந்து என்பவற்றின் பெண் ; நத்தை ; பசு ; கிடாரிக்கன்று ; சங்கு ; இளமரம் ; பெண்மீன் ; புற்று ; மலை . |
| நாகுகன்று | கிடாரிக்கன்று . |
| நாகேசுரம் | சிறுநாகப்பூ . |
| நாகேசுவரன் | பாம்புகளை அணிந்த சிவபிரான் . |
| நாகேந்திரன் | காண்க : ஆதிசேடன் . |
| நாகை | சோழநாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம் ; காண்க : நாவல் ; பாம்பு . |
| நாங்கு | மரவகை ; தானியமாகச் செலுத்தும் வட்டி . |
| நாங்குதல் | ஆற்றல் குறைதல் . |
| நாங்குழு | காண்க : நாக்குப்பூச்சி . |
| நாங்கூழ் | காண்க : நாக்குப்பூச்சி . |
| நாச்சி | தலைவி . |
| நாச்சிமார் | திருமாலின் தேவிமார் ; ஏழுதேவியார் . |
| நாச்சியார் | அரசி அல்லது தலைவி ; பெண் துய்வம் ; ஆண்டாள் . |
| நாச்செறு | வசை . |
| நாசகாரி | கேடுசெய்பவன்(ள்) . |
| நாசகாலம் | அழிவுகாலம் . |
| நாகசலன் | பொருளை அழிப்பவன் ; கொடியோன் . |
| நாகநட்சத்திரம் | சுக்கிரன் நின்ற நாளுக்குப் பத்தாம் நாள் . |
| நாசம் | அழிவு ; சாவு ; காண்க : நாசநட்சத்திரம் . |
| நாசமிலி | கேடற்ற சிவபிரான் . |
| நாசமோசம் | கேடு ; அபாயம் . |
| நாசயோகம் | கேடு விளைக்கும் வார நட்சத்திரங்களின் சேர்க்கை . |
| நாசன் | அழிப்போன் ; யமன் . |
| நாசனம் | காண்க : நாசம் . |
| நாசனன் | அழிப்பவன் . |
| நாசனி | அழிப்பவள் . |
| நாசாக்கிரம் | காண்க : நாசிகாக்கிரம் . |
| நாசி | மூக்கு ; மூக்குத்துளை ; சலதாரையின் வாய் ; கதவுநிலையின் மேற்சட்டம் ; மாளிகை மேனிலையுறுப்பு ; இசைக்குற்றவகை . |
| நாசிகாக்கிரம் | நுனிமூக்கு . |
| நாசிகாபரணம் | மூக்குத்தி . |
| நாசிகாபீடம் | மூக்குள் வளரும் சதைவகை . |
| நாசிகாமலம் | மூக்குச்சளி , மூக்குப்பீ . |
| நாசிகேது | அக்கினி . |
| நாசிகை | மூக்கு ; மாளிகையின் மேனிலையில் உள்ள உறுப்பு ; காண்க : நாசிதாரு . |
| நாசித்துவாரம் | மூக்குத்துளை . |
| நாசிதாரு | கதவுநிலையின் மேற்சட்டம் . |
| நாசியம் | மூக்கணாங்கயிறு . |
| நாசுக்கு | அழகு . |
| நாசுவன் | அம்பட்டன் . |
| நாசோற்பத்தி | உலகம் மாறிமாறி அழிந்து பிறப்பது . |
| நாஞ்சில் | கலப்பை ; மதிலுறுப்பு ; வள்ளுவன் என்ற ஒரு தலைவனின் மலை ; நாஞ்சில்நாடு . |
| நாஞ்சிலான் | கலப்பைப் படையுடையோனாகிய பலராமன் . |
| நாஞ்சிற்படையோன் | கலப்பைப் படையுடையோனாகிய பலராமன் . |
| நாட்கடத்துதல் | நாட்கழித்தல் ; நாள் தள்ளி வைத்தல் . |
| நாட்கடன் | காலைக் கடமை . |
| நாட்கணக்கன் | வாழ்நாளுக்குக் கணக்கு வைத்திருப்பவனான யமன் . |
| நாட்கணக்கு | அன்றாடக் கணக்கு ; அன்றாடவேலை ; வாழ்நாளின் எல்லை . |
|
|
|