சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாமசேடம் | பெயர்மட்டும் மிஞ்சும் சாவு . |
| நாமஞ்சாத்துதல் | பெயரிடுதல் ; நெற்றியில் நாமம் இடுதல் ; ஏமாற்றுதல் . |
| நாமஞ்செய்தல் | பெயரிடுதல் . |
| நாமடந்தை | காண்க : நாமகள் . |
| நாமடிக்கொள்ளுதல் | நாவை மடித்தல் . |
| நாமத்தாலி | கார்காத்த வேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்தில் அணியும் தாலிவகை . |
| நாமதாது | பெயரடியாகப் பிறந்த வினை . |
| நாமதாரணம் | பெயர் தரிக்கை ; திருமண் தரிக்கை . |
| நாமதாரி | நாமந்தரிப்பவனான வைணவன் ; மூங்கில்வகை ; சீலைவகை . |
| நாமதேயம் | பெயர் ; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கியவகை . |
| நாமநீர் | அச்சத்தைத் தரும் கடல் . |
| நாமம் | திருமண் கட்டி ; அச்சம் ; நிறைவு ; புகழ் ; திருமாலின் பன்னிரண்டு பெயர்களைக் கூறி உடலில் இடும் திருமண் காப்பு ; பேர் ; தும்பைச் செடி ; முள்தராசின் நடு ; காண்க : நாரத்தை ; பாசி . |
| நாமமிடுதல் | காண்க : நாமஞ்சாத்துதல் . |
| நாமமோதிரம் | பெயர் எழுதிய மோதிரம் . |
| நாமயம் | தற்போதம் . |
| நாமராசி | பெயர்ப் பொருத்தம் ; இராசிப் பொருத்தம் . |
| நாமவந்தம் | காண்க : யானைநெருஞ்சி . |
| நாமவெகுண்டம் | தும்பைப்பூடு . |
| நாமவைகுண்டம் | தும்பைப்பூடு . |
| நாமறுதல் | பேருமில்லாதபடி முற்றும் அழிந்து போதல் . |
| நாமனூரலைவாய் | திருச்செந்தூர் . |
| நாமாது | காண்க : நாமகள் . |
| நாமாவளி | திருப்பெயர் வரிசை . |
| நாமிதம் | வளைவு . |
| நாமுடி | நாநுனி . |
| நாமோச்சாரணம் | திருப்பெயரைச் சொல்லுதல் . |
| நாய் | ஒரு விலங்கு ; சூதாடுகருவி . |
| நாய்க்கடி | நாயின் கடிப்பு ; நாய்க்கடியால் உண்டாகும் சன்னி நோய் . |
| நாய்க்கடுகு | நாய்வேளைப்பூடு . |
| நாய்க்கரந்தை | குன்றிக்கொடி . |
| நாய்க்குட்டி | குட்டிநாய் ; ஒரு பணிவுமொழி . |
| நாய்க்குணம் | இழிகுணம் ; முருட்டுத்தனம் . |
| நாய்க்கெரித்தல் | நாய்க்குச் சோறு சமைத்தலான இழிதொழில் செய்தல் . |
| நாய்க்கெரிப்போன் | நாய்க்குச் சோறு சமைப்பவனான சண்டாளன் . |
| நாய்கன் | வணிகன் ; தலைவன் ; கணவன் ; தந்தை . |
| நாய்ச்சீரகம் | ஒரு பூண்டுவகை . |
| நாய்த்திசை | தென்மேற்குத் திசை . |
| நாய்த்தீற்றி | நாய்க்குரிய இழிவான உணவு . |
| நாய்த்துளசி | கஞ்சாங்கோரைப் பூண்டு . |
| நாய்நாக்கி | இலைக்கள்ளிமரம் . |
| நாய்நாக்கு | இலைக்கள்ளிமரம் . |
| நாய்ப்புடல் | ஒரு கொடிவகை . |
| நாய்ப்புடடோல் | ஒரு கொடிவகை . |
| நாய்வேட்டம் | நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை ; நாய்கள் வேட்டையில் உயிர்களை வருத்துவதுபோன்ற தொல்லை . |
| நாய்வேளை | ஒரு பூடுவகை . |
| நாயக்கன் | படைத்தலைவன் ; வடுகருள் ஒரு சாராரின் சாதிப் பெயர் ; வன்னியர் , வேடர் , இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பட்டப் பெயர் . |
| நாயகத்தி | காண்க : நாயகி . |
| நாயகப்பத்தி | நாடகமாடும் தலைமையிடம் . |
| நாயகப்பானை | கோயிலில் பொங்கலிடும் பெரியபானை . |
| நாயகம் | தலைமை ; மேம்பாடு ; சிறப்பின் மிக்கது ; வேலைக்காரரின் தலைவன் ; காண்க : நாயகமணி ; கிரந்திநாயகச்செடி . |
| நாயகம்பண்ணுதல் | முதன்மை செலுத்தல் . |
| நாயகமணி | மணிமாலை நடுவிலே கோத்திருக்கும் பெருமணி ; அணிகலன்களின் நடுவில் அமைக்கும் இரத்தினம் . |
| நாயகமுத்து | மாலையின் நடுவிலே அமைந்த பெருமுத்து . |
| நாயகமேனி | மரகதப்பச்சை . |
| நாயகன் | தலைவன் ; கணவன் ; அரசன் ; கடவுள் ; நடத்துவோன் ; கதைத் தலைவன் . |
| நாயகாதிபன் | அரசன் . |
| நாயகி | மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை . |
| நாயரஞ்சி | நாயுருவிச்செடி . |
| நாயன் | கடவுள் ; அரசன் ; தலைவன் . |
| நாயன்தே | சுவாமி என்ற பொருள்படும் தொடர் . |
| நாயன்மார் | தலைவர் ; பெரியபுராணத்தில் கூறப்பெறும் சிவனடியார்கள் ; கடவுளர் . |
| நயானகாரன் | நாகசுரம் வாசிப்போன் . |
| நாயனம் | நாகசுரம் . |
| நாயனாய்ச்சியர் | உமையும் சிவனும் ; தலைவனும் தலைவியும் . |
| நாயனார் | தலைவர் ; கடவுள் ; சிவன் ; சிவனடியார் ; தந்தை ; திருவள்ளுவர் ; சில சாதியாரின் பட்டப்பெயர் . |
| நாயாட்டம் | உளைச்சல் ; பேயாட்டம் . |
| நாயாடி | வேட்டையாடுவோன் ; திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார் . |
| நாயிகை | தலைவி . |
| நாயில் | காண்க : ஞாயில் . |
| நாயிறு | காண்க : ஞாயிறு . |
| நாயிறுதிரும்பி | காண்க : ஞாயிறுவணங்கி . |
| நாயிறுவணங்கி | காண்க : ஞாயிறுவணங்கி . |
| நாயுருவி | ஒரு பூண்டுவகை . |
| நாயுள்ளி | நரிவெண்காயம் . |
| நாயுறக்கம் | பொய்யுறக்கம் . |
|
|
|