சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாற்றடி | காண்க : நாற்றங்கால் . |
| நாற்றம் | மணம் ; மூக்கால் அறியும் புலனறிவு ; தீநாற்றம் ; கள் ; தொடர்பு ; தோற்றம் . |
| நாற்றம்வீசுதல் | தீயநாற்றமடித்தல் . |
| நாற்றமெடுத்தல் | தீயநாற்றமடித்தல் . |
| நாற்றவுணவு | அவியாகிய உணவு . |
| நாற்றி | நான்கு மடங்கு . |
| நாற்றிசை | நான்கு திக்குகளான கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு . |
| நாற்று | பிடுங்கிநடும் பயிர் . |
| நாற்றுதல் | தொங்கவிடுதல் ; தூக்குப்போடுதல் . |
| நாற்றுநடவு | நாற்று நடுகை . |
| நாறுப்பாக்கு | விதைக்குரிய பாக்கு . |
| நாற்றுப்பாத்தி | நாற்று உண்டாக்கும் இடம் . |
| நாற்றுப்பாவுதல் | விதை தெளித்தல் ; தானியம் முதலியன பதிபோடுதல் ; இளஞ்செடிப் பதியம் வைத்தல் . |
| நாற்றுமரம் | நாற்றுவிட்டுப் பிறகு எடுத்து நட்டு வளர்க்கும் மரம் . |
| நாற்றுமுடி | ஒருசேரக்கட்டிய நாற்றின் முடிப்பு . |
| நாற்றுவிடுதல் | நாற்று உண்டாக்க விதை விதைத்தல் . |
| நாறல் | நாறுதல் ; தீநாற்றம் ; நாற்றமுடையது . |
| நாறனா | கிடேச்சு ; நெட்டி . |
| நாறி | நன்னாரிக்கொடி ; கற்றாழைச்செடி . |
| நாறு | காண்க : நாற்று ; பயிர்முளை . |
| நாறுகட்டி | பெருங்காயம் . |
| நாறுகரந்தை | ஒரு பூண்டுவகை . |
| நாறுதல் | மணத்தல் ; தோன்றுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; மோத்தல் ; தீநாற்றம் வீசுதல் . |
| நான்காம்வேதம் | வேதத்துள் நான்காவதான அதர்வணம் . |
| நான்கு | மூன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண் ; நாலில் ஒரு பங்கு ; வட்டிக்காகச் சேர்த்து அறுவடையானதும் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறும் தானியக் கடன் . |
| நான்மருப்பியானை | நான்கு கொம்புடைய யானையாகிய ஐராவதம் . |
| நான்மருப்பியானையூர்தி | ஐராவதத்தை ஊர்தியாக உடையவனான இந்திரன் . |
| நான்மலத்தர் | ஆணவம் , கன்மம் , சுத்தமாயை , திரோதாயி என்னும் நான்கு மலமுடைய பிரளயாகலர் . |
| நான்மறை | காண்க : நால்வேதம் . |
| நான்மறைமுதல்வன் | அந்தணன் . |
| நான்மறையாளன் | நான்கு வேதங்களில் வல்லவனான பார்ப்பனன் . |
| நான்மறையோன் | பிரமன் ; நான்கு வேதங்களில் வல்லவனான பார்ப்பனன் |
| நான்மாடக்கூடல் | மதுரைநகர் . |
| நான்முகத்தோன் | நான்கு முகமுடைய பிரமன் . |
| நான்முகப்புல் | காண்க : நாணல் . |
| நான்முகன் | பிரமன் ; அருகன் . |
| நான்முகன்கிழத்தி | பிரமன் மனைவியாகிய கலைமகள் . |
| நான்முகன்தேவி | கலைமகள் ; காண்க : மனோசிலை . |
| நான்மூலையாயம் | பசுக்கூட்டம் . |
| நான்று | காலம் . |
| நான்றுகொண்டுநிற்றல் | கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு சாதல் . |
| நான்றுகொள்ளுதல் | கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு சாதல் . |
| நானச்செப்பு | புழுகுசெப்பு . |
| நானம் | மணப்பண்டம் ; கத்தூரி ; கத்தூரி விலங்கு : புழுகு ; பூசுவன ; மணப்பொடி ; கவரிமான் ; ஞானம் ; சுத்தி செய்தற்கு நீரில் மூழ்குகை . |
| நானமா | காத்தூரிவிலங்கு . |
| நானவெண்ணெய் | நீராடும்போது தேய்த்துக் கொள்ளும் மணஎண்ணெய் . |
| நானா | பல . |
| நானார்த்தபதம் | பலபொருள் ஒருசொல் . |
| நானாவிகாரி | பலவிதமாகப் பரிணமிக்கும் ஒரு பொருள் . |
| நானாவிதம் | அநேகவகை , பலவிதம் . |
| நானாளைமாறன் | நான்கு நாளைக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் . |
| நானாற்றிசை | பல திசை . |
| நானிலம் | குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் என்னும் நால்வகை நிலம் . |
| நானூல் | மார்பில் தொங்கும் நூலாகிய பூணூல் . |
| நானூறு | நான்கு நூறுகொண்ட எண் . |
|
|