நிச்சயம் முதல் - நிசூதனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிச்சயம் உறுதி ; மெய் .
நிச்சயார்த்தம் மெய்ப்பொருள் ; காண்க : நிச்சயதாம்பூலம் .
நிச்சயித்தல் உறுதிப்படுத்தல் ; தீர்மானித்தல் .
நிச்சல் எப்பொழுதும் .
நிச்சலபுத்தி திரியாத மனம் .
நிச்சலம் அசைவின்மை ; நித்தியத்துவம் ; இலக்கு நால்வகையுள் அசைவற்றிருப்பது .
நிச்சலன் அசைவற்றவன் ; கடவுள் .
நிச்சலும் காண்க : நிச்சல் .
நிச்சலை சத்தி விசேடம் ; பூமி .
நிச்சாயகம் உறுதிப்படுத்துவது .
நிச்சாரகம் காற்று .
நிச்சாலங்கம் மலை .
நிச்சித்தம் மனோலயம் ; கவலையின்மை .
நிச்சிதம் காண்க : நிச்சயம்
நிச்சிதார்த்தம் காண்க : நிச்சயதாம்பூலம் .
நிச்சிந்தன் கவலையற்றவன் ; அருகன் ; ஈசன் .
நிச்சிந்தை கவலையின்மை .
நிச்சியம் வெள்ளுள்ளிப்பூண்டு .
நிச்சிரேணி ஏணி .
நிச்சிரேயசம் வீடுபேறு .
நிச்சுவசனம் பெருமூச்சு ; சினம் .
நிச்சுவாசம் மூச்சு வெளிவிடுகை ; மூச்சினை அடக்குகை ; மூச்சு ; சிவாகமத்துள் ஒன்று .
நிச்சேட்டை செயலற்றிருக்கை .
நிச்சேடம் மிச்சமின்மை .
நிசகரம் உறுதிபண்ணுகை .
நிசங்கம் அம்புக்கூடு ; இணக்கம் .
நிசதம் தவறாது ஒவ்வொரு நாளும் .
நிசதி தவறாது ஒவ்வொரு நாளும் .
நிசப்தம் ஒலியின்மை .
நிசம் உண்மை ; சத்தியம் ; இயல்பாகவுரியது .
நிசவான் உண்மையுள்ளவன் .
நிசா இரவு .
நிசாகசம் இரவில் மலரும் ஆம்பல் .
நிசாகம் மஞ்சள்
நிசாகரன் இரவைச் செய்வோனாகிய சந்திரன் ; சேவல் .
நிசாசரம் ஆந்தை ; பாம்பு .
நிசாசரன் இரவில் திரிவோன் ; அசுரன் ; சந்திரன் ; இராக்கதன் .
நிசாசரி கூகை ; அரக்கி ; விலைமகள் .
நிசாசலம் பனி .
நிசாடம் ஆந்தை .
நிசாடு மஞ்சள் .
நிசாதன் கீழ்மகன் ; வஞ்சகன் .
நிசாதனம் இடம் ; வீடு ; நகரம் ; உடல் .
நிசாதி மாலை வெளிச்சம் .
நிசாந்தம் விடியற்காலம் .
நிசாபதி சந்திரன் ; கருப்பூரம் .
நிசாமணி மின்மினி ; சந்திரன் .
நிசாமனம் கேள்வி ; பார்வை ; நிழல் .
நிசாமானம் இராக்கால அளவு .
நிசார் நீண்ட காற்சட்டை .
நிசார்த்தம் உண்மை .
நிசாரணம் கொலை .
நிசாரணன் கொலைஞன் .
நிசாரம் சத்தற்றது ; வருத்தம் .
நிசாரி இரவின் பகைவனான சூரியன் .
நிசாளம் ஒருகட்பறை .
நிசான் கொடி .
நிசி இரவு ; நள்ளிரவு ; இருள் ; மஞ்சள் . பொன் .
நிசிசரன் அசுரன் ; அரக்கன் ; சந்திரன் ; கள்வன் ; காவற்காரன் .
நிசித்தண்ணீர் காலையில் நீராகாரத்திற்குதவ இரவில் சோற்றுப் பானையில் ஊற்றிய நீர் ; நீராகாரம் .
நிசித்தம் இகழ்ச்சி ; விதிக்கு முரணானது .
நிசிதம் இகழ்ச்சி ; பொய் ; கூர்மை ; இரும்பு .
நிசிதன் அசுரன் ; இழிஞன் .
நிசிந்தன் ஈசன் .
நிசிமணி காண்க : நிசாமணி .
நிசீத்தியை இரவு .
நிசீதம் இரவு ; நள்ளிரவு ; கூர்மை ; புன்மை .
நிசீதிகை உண்ணாநோன்பால் உயிர்விடுதல் .
நிசும்பம் காண்க : நிசாரணம் .
நிசும்பன் காண்க : நிசாரணன் .
நிசும்பனம் காண்க : நிசாரணம் .
நிசுலகம் மார்புறை .
நிசுவாசம் காண்க : நிச்சுவாசம் .
நிசுளம் நீர்க்கடப்பமரம் .
நிசூதனம் அழிக்கை .