நிருபவல்லபை முதல் - நிலத்தாமரை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிருபவல்லபை அரசி .
நிருபர் தாளிகைக்குச் செய்தி திரட்டுபவர் .
நிருபன் அரசன் .
நிருபாதானம் முதற்காரணமின்மை .
நிருபாதி துன்பமின்மை ; காரணமின்மை ; தடையின்மை .
நிருபாதிகம் தடையற்றது ; காரணமற்றது .
நிருமதம் யானை ; மதமொழிந்த யானை .
நிருமலதானம் ஞானிகட்கு உதவுங் கொடை .
நிருமலம் மாசின்மை .
நிருமலன் குற்றமற்றவன் ; கடவுள் .
நிருமலி பார்வதி .
நிருமாலியம் பூசித்துக் கழித்த பொருள் ; வில்வம் ; பெரிய மாவிலங்கமரம் .
நிருமித்தல் படைத்தல் ; தீர்மானித்தல் ; ஆராய்தல் ; ஏற்படுத்துதல் ; பொய்யாகக் கற்பித்தல் .
நிருமிதம் உண்டாக்கப்பட்டது ; பொய்யாகக் கற்பித்தது .
நிருமிதி படைப்பு .
நிருமூடம் முழுதும் அறிவின்மை .
நிருவகித்தல் காண்க : நிர்வகித்தல் .
நிருவாகசபை செயல்களைச் செய்துமுடிக்கும் சங்கம் .
நிருவாகம் ஆளுகை ; பொறுப்பு ; மேற்பார்வை ; ஓம்புகை ; நடப்பித்தல் ; பொறுக்கை ; பொருள் கொள்ளும் முறை ; முடிவு ; உறுதி ; நிலைமை .
நிருவாணதீட்சை சிவதீட்சையில் மூன்றாவது .
நிருவிகற்பசமாதி தான் வேறு கடவுள் வேறென்ற விகற்ப உணர்வற்ற யோகநிலை .
நிருவிடயானந்தம் உணர்ச்சிக்கு எட்டாத இன்பம் .
நிரூபணம் ஆராய்ச்சி ; மெய்ப்பித்தல் .
நிரூபம் உருவமின்மை .
நிரூபன் உருவமற்ற கடவுள் .
நிரூபித்தல் மெய்ப்பித்தல் ; ஆராய்தல் .
நிரூபிதம் நிச்சயிக்கப்பட்டது ; தீர்மானிக்கப் பட்டது .
நிரேதுகம் ஏதுவற்றது .
நிரை வரிசை ; ஒழுங்கு ; கொடிப்படை ; படை வகுப்பு ; காண்க : கிரமம் ; கோபுரம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; பசு ; நிரையசை ; ஒரு விளையாட்டுவகை .
நிரைக்கழு மதிற் கதவுகட்குக் காவலாக அமைக்கப்படும் முட்கழு .
நிரைகவர்தல் பகைவர்களின் பசுக்கூட்டங்களைப் பிடித்தல் .
நிரைகிளம்பி சினையாடு .
நிரைகோட்பறை நிரை கவரும்போது அடிக்கும் பாலைப்பறைவகை .
நிரைகோடல் போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
நிரைகோள் போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
நிரைச்சம் காண்க : நிரைசல் ; இரவல் .
நிரைச்சல் காண்க : நிரைசல் ; இரவல் ; சூது விளையாட்டுவகை ; படைவகுப்பு .
நிரைசல் ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு .
நிரைத்தல் ஒழுங்காய் நிறுத்தல் ; நிரப்புதல் ; பரப்புதல் ; கோத்தல் ; நிறைவேற்றுதல் ; தனித்தனியாய்ச் சொல்லுதல் ; திரளுதல் ; சபை கூட்டுதல் ; தொடர்ந்துவருதல் .
நிரைத்தாலி ஒரு தாலிவகை .
நிரைதல் நிரப்புதல் ; ஒழுங்காக்குதல் ; முடைதல் ; ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல் ; வரிசையாதல் ; முறைப்படுதல் ; திரளாதல் .
நிரைந்துகாட்டுதல் விரித்தல் ; விளக்குதல் .
நிரைபு முற்றியலுகரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை .
நிரைபெயர்த்தல் எதிரிகள் கைக்கொண்ட பசுக் கூட்டங்களைத் திரும்பக் கைப்பற்றல் .
நிரைமீட்சி பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை .
நிரைமீட்டல் பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை .
நிரையம் நரகம் .
நிரையொன்றாசிரியத்தளை ஆசிரியப்பாவில் நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் இயற்சீர் வந்து ஒன்றுந் தளை .
நிரோசாதம் காண்க : நிரோதி .
நிரோட்டகம் இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .
நிரோட்டம் இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .
நிரோட்டியம் இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .
நிரோட்டியவோட்டியம் செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் கவி .
நிரோதம் தடை ; அடக்கம் .
நிரோதனை புலனடக்கம் .
நிரோதி பதினாறு கலைகயுள் ஒன்று .
நிரோதினி பதினாறு கலைகயுள் ஒன்று .
நில்லாமை நிலைத்திராமை ; அழிவது ; உறுதிப்படாமை .
நிலக்கடம்பு ஒரு பூண்டுவகை .
நிலக்கடலை வேர்க்கடலை ; மணிலாக்கொட்டை .
நிலக்கணம் மூன்று நிரையசையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை எனப்படுவதுமான சொல் .
நிலக்கரி பூமியிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரிவகை .
நிலக்கன்று சிறுபயிர் .
நிலக்காரை ஒரு முட்செடிவகை .
நிலக்கிழார் நிலத்துக்கு உரியவர் .
நிலக்குமிழ் ஒரு செடிவகை .
நிலக்குழி உரக்குழி ; எழுத்துக்குழி .
நிலக்கூந்தல் எலிச்செவிப்பூடு .
நிலக்கொடி காண்க : நிலமகள்
நிலக்கொதி சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் .
நிலக்கொதிப்பு சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் .
நிலச்சாந்து சுண்ணாக்காரை ; மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியில் இடும் பொட்டு .
நிலச்சார்பு பூமியின் தன்மை ; நிலவளம் .
நிலத்தழல் காண்க : நிலக்கொதிப்பு
நிலத்தாமரை ரோசாமலர் .