நிலையுடைக்கட்டை முதல் - நிறுத்தசொல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிலையுடைக்கட்டை முளையாணி .
நிலையுதல் நிலைபெறுகை .
நிலையுமல் தொம்பை , மூங்கிலாலான நெற்குதிர் ; கூடை .
நிலையுரல் நிலத்திற் புதைத்துவைக்கும் பெரிய உரல் .
நிலையூன்றுதல் மரம் முதலியன வேரூன்றல் ; உறுதிப்படுதல் .
நிலையெடுத்தல் பெருமைபெற்று விளங்குதல் .
நிலைவரம் நிலைபேறு ; உறுதி ; நிலைமை .
நிலைவரி இசைப்பாட்டுவகை .
நிலைவிடுதல் மனைக்கு வாயில்நிலை அமைத்தல் .
நிலைவிளக்கு குத்துவிளக்கு ; மணவிழாவில் ஏற்றும் விளக்கு ; நிலைச்சட்டத்தில் உள்ள விளக்கு .
நிவகம் கூட்டம் .
நிவசதி வீடு .
நிவசனம் ஆடை .
நிவத்தல் உயர்தல் ; படர்தல் ; வளர்தல் ; மேலாதல் ; மேல்வழிதல் ; தோன்றதல் .
நிவந்தக்காரர் கோயிற்றொண்டு செய்வோர் .
நிவந்தம் கோயிற்றொண்டு ; கோயிற்செலவு ; நிபந்தனை ; வேலைத்திட்டம் ; கடவுளை வழிபடும் இடம் ; சங்கிரகநூல் .
நிவப்பு உயரம் .
நிவப்புத்தூக்கு ஐஞ்சீருள்ள இசைப்பாட்டு .
நிவம் தோளின் மேலிடம் .
நிவர்த்தனம் திரும்புதல் ; போக்குதல் .
நிவர்த்தி காண்க : நிவிர்த்தி
நிவர்தல் ஓங்குதல் .
நிவறுதல் பொடியாதல் ; மொய்த்தல் .
நிவாசம் தெய்வம் அல்லது பெரியார் வாழிடம் .
நிவாதகவசர் காற்றுப்புகாத கவசத்தை உடையவர் .
நிவாதம் காற்றின்மை .
நிவாரணம் தடுக்கை ; தடை ; ஒழிப்பு ; அறுவகைப்பட்ட துன்பநீக்கம் .
நிவாரம் தடை .
நிவி மாமரம் .
நிவிர்த்தன் துறவி .
நிவிர்த்தி விடுதலை ; காண்க : நிவிர்த்திகலை ; துறவு ; ஒழிப்பு ; போக்கு .
நிவிர்த்திகலை ஐந்துவகைக் கலையுள் ஆன்மாக்களைத் தளையினின்று விடுவிப்பதாகிய கலை .
நிவேசம் வீடு .
நிவேசனம் இடம் ; வீடு ; ஊர் ; 2400 சதர அடி கொண்ட மனையளவு ;
நிவேத்தியம் தெய்வப் படையல் .
நிவேதனம் கடவுளுக்குப் படைக்கும் அமுது ; ஒப்புவிக்கை .
நிவேதித்தல் நைவேத்தியஞ் செய்தல் .
நிழத்துதல் முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல் ; தின்றழித்தல் ; இல்லையாக்குதல் .
நிழல் சாயை ; எதிரொளி ; அச்சு ; குளிர்ச்சி ; அருள் ; ஒளி ; நீதி ; புகலிடம் ; கொடை ; செல்வம் ; மரக்கொம்பு ; நோய் ; பேய் .
நிழல்காண்மண்டிலம் நிழலை உமிழும் கண்ணாடி .
நிழல்விழுதல் நிழல்வீசுதல் ; நிழல்படிதல் .
நிழலல் காண்க : நிழலுதல் .
நிழலாட்டம் ஓவியத்தில் மங்கின பக்கம் ; மாதிரி ; மெய்ம்மையற்றது ; தோற்பாவையாட்டம் .
நிழலாடுதல் எதிரொளித்தல் ; எதிருருத் தோன்றுமாறு இருத்தல் ; ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு ; நிழல்மாத்திரம் தெரியும்படி பார்வை குன்றுதல் .
நிழலி ஒளி ; நீதி ; காற்று ; நோய் .
நிழலிடுதல் நிழலைக் கொடுத்தல் ; எதிரொளி ; ஒளிவிடுதல் .
நிழலுதல் நிழல்செய்தல் ; காப்பமைதல் ; ஒளி செய்தல் ; எதிரொளித்தல் .
நிழலுலர்த்தல் நிழலில் மருந்து முதலியவற்றைக் காயவைத்தல் .
நிழலொதுக்கு இளைப்பாறுதற்குரிய நிழலிடம் .
நிழற்சரிவு நிழலின் சாய்வு ; சாயங்காலம் .
நிழற்சாய்வு காண்க : நிழலொதுக்கு .
நிழற்செய்தல் நிழல்தருதல் .
நிழற்பாடு நிழல்படுகை .
நிழற்பாவை திரைச்சீலைக்குள் வைத்து ஆட்டும் பாவை .
நிழற்றல் நிரம்பா மென்சொல் .
நிழற்றாங்கல் பந்தல் .
நிழற்றுதல் ஒளிவிடுதல் ; நிழல்செய்தல் ; மணி முதலியன அடித்தல் ; அடங்குதல் ; காத்து அளித்தல் .
நிழறுதல் ஒளிவிடுதல் .
நிளுதனம் அழிக்கை .
நிற்காரம் இகழ்ச்சி .
நிற்பத்தி இடம் .
நிற்பது நிலைத்திணைப்பொருள் , தாவரம் .
நிற்பாக்கியம் ஏதுமின்மை ; நற்பேறின்மை .
நிற்பாட்டுதல் நிறுத்துதல் ; நடுதல் .
நிற்புதம் பதினாயிரங்கோடி .
நிற்றல் நிற்கை .
நிற்றலும் எந்நாளும் .
நிறக்கேடு புகழ்க்குறைவு .
நிறங்குணம் இயல்பு .
நிறங்கொடுத்தல் நிறமூட்டுதல் ; மேனியாதல் ; நிறமுடைத்தாதல் ; ஒளிரச்செய்தல் .
நிறத்தல் நிறம்பிடித்தல் ; நிறம்முற்றுதல் ; ஒளிர்தல் ; பயனளித்தல் .
நிறம் வண்ணம் ; சாயம் ; இயல்பு ; ஒளி ; புகழ் ; இசை ; மார்பு ; நடுவிடம் ; உயர்நிலை ; உடல் ; தோல் .
நிறம்பெயர்தல் நன்னிறமாதல் ; நிறம் வேறுபடுதல் .
நிறவாளத்தி இசையின் ஆலாபனவகை .
நிறுத்தசொல் காண்க : நிலைமொழி .