நின்றை முதல் - நினைவோடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நின்றை அசைநிலை ; திருநின்றவூர் .
நின்னாமன் பெயரில்லாத அருகன் ; சிவன் .
நினதம் காண்க : நினாதம் .
நினவ உன்னுடையன .
நினாதம் ஒலி .
நினைத்தல் கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் .
நினைதல் கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் .
நினைப்பணி ஒரு பொருள் ஒப்புமையாற் பிறிதொன்றனை ஞாபகப்படுத்துவதாகக் கூறும் அணிவகை .
நினைப்பாயிருத்தல் கவனமாயிருத்தல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் .
நினைப்பாளி நினைவாற்றலுள்ளோன் .
நினைப்பிடுதல் ஆணையிடுதல் .
நினைப்பு எண்ணம் ; அறிவுரை ; நினைவு ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; மனவுறுதி .
நினைப்பூட்டுதல் ஞாபகப்படுத்துதல் ; அறிவுறுத்துதல் .
நினைவு எண்ணம் ; ஆலோசனை ; ஞாபகம் ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; வருத்தம் ; ஞாபகக் குறிப்பு ; அரசர் கட்டளை .
நினைவுகூர்தல் ஞாபகங்கொள்ளுதல் .
நினைவுகேடு காண்க : நினைவுத்தப்பு .
நினைவுத்தடுமாற்றம் காண்க : நினைவுத்தப்பு ; மயக்கம் ; பைத்தியம் .
நினைவுத்தப்பு ஞாபகத்தவறு ; அறிவு அழிந்து போகை .
நினைவுவைத்தல் மனம்வைத்தல் ; நினைத்தல் ; நன்றியின்பொருட்டேனும் அன்பினாலேனும் ஞாபகம்வைத்தல் ; விரும்புதல் .
நினைவோடுதல் ஞாபகம் வருதல் .