நீதம் முதல் - நீர்ச்சுண்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நீதம் தகுதியானது ; நீதி ; தானியம் ; நற்பேறு .
நீதம்பாதம் நீதி .
நீதவான் நியாயநெறி நிற்போன் ; நீதிபதி .
நீதன் காண்க : நீதிமான் ; இகழ்ந்தோன் .
நீதி நியாயம் ; முறைமை ; மெய் ; உலகத்தோடு பொருந்துகை ; அறநூல் ; இயல்பு ; ஒழுக்கநெறி ; நடத்துவது ; வழிவகை ; பார்வதி .
நீதிக்கேடு நியாயத்தவறு ; ஒழுக்கத்தவறு .
நீதிகெட்டவன் நியாயந் தவறியவன் .
நீதிகேட்டல் வழக்கு விசாரித்தல் .
நீதிச்செல்வம் குழந்தைகளுக்கு முடிவாங்கும் சடங்கு செய்தல் .
நீதித்தலம் நீதிமன்றம் , வழக்கு விசாரிக்கும் சபை .
நீதிநியாயம் நீதிமுறை ; சட்டதிட்டங்கள் ; நீதிமன்ற ஒழுங்கு .
நீதிநூல் அறம் பொருள்களைப்பற்றிக் கூறும் நூல் ; சட்டக்கலை .
நீதிநெறி நல்லொழுக்கம் .
நீதிபரன் நீதியினின்றுந் தவறாதவன் ; கடவுள் .
நீதிமான் நியாயநெறி நிற்போன் .
நீதியதிபதி நீதிபதி .
நீதியறிந்தோன் நியாயம் தெரிந்தவன் ; அமைச்சன் .
நீதியொழுங்கு காண்க : நீதிநெறி .
நீதிவான் காண்க : நீதிமான் ; நீதிபதி .
நீதினி நியாயந் தவறாதவள் .
நீந்து கடல் .
நீந்துதல் நீரில் மிதந்து செல்லுதல் ; கடத்தல் ; பெருகுதல் ; வெல்லுதல் ; கழித்தல் .
நீந்துபுனல் ஆழமுள்ள நீர் .
நீப்பு துறவு ; பிரிவு .
நீப்புரவு நீங்குகை .
நீபம் வெண்கடம்பு ; செங்கடம்பு ; உத்திரட்டாதிநாள் ; காண்க : நீர்க்கடம்பு ; காரணம் ; மரவகை .
நீம் முன்னிலைப் பன்மைப் பெயர் .
நீம்பல் பிளப்பு ; வெடியுப்பு .
நீமம் ஒளி .
நீயல் நீங்கல் ; விடுதல் .
நீயான் காண்க : நீகான் .
நீயிர் நீவிர் , முன்னிலைப் பன்மைப் பெயர் .
நீர் தண்ணீர் ; கடல் ; இரசம் ; பனிநீர் ; உடல் இரத்தம் ; பித்தநீர் முதலிய நீர்மப் பொருள் ; பூராடநாள் ; பூரட்டாதிநாள் ; ஈரம் ; மணியின் ஒளி ; குணம் ; நிலை .
நீர்க்கட்டி பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன் ; ஆலங்கட்டி ; சீழ்பிடித்த புண்கட்டி .
நீர்க்கட்டு சிறுநீர் தடைபட்டிருக்கும் நோய் ; நீரினால் உண்டாகும் வீக்கம் ; நீர்க்கோவை ; நீர்நோய்வகை ; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு .
நீர்க்கட்டுதல் புண் சீழ்பிடித்தல் .
நீர்க்கடம்பு கடப்பமரவகை .
நீர்க்கடவுள் வருணன் .
நீர்க்கடன் தென்புலத்தார்பொருட்டுச் செய்யும் தர்ப்பணம் ; எள்ளும் தண்ணீரும் இறைத்தல் ; காண்க : சந்தியாவந்தனம் .
நீர்க்கடுப்பு எரிச்சலோடு துளித்துளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை .
நீர்க்கண்டி பாசன வேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன் .
நீர்க்கணம் செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும் நேர்நிரைநிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் ; குழந்தைகளுக்கு வரும் கணைநோய்வகை .
நீர்க்கமல்லி அல்லிக்கொடி .
நீர்க்கரை ஆறு , குளம் முதலியவற்றின் கரை .
நீர்க்கழலை ஓர் இமைக்கட்டிவகை .
நீர்க்கழிவு காண்க : நீரிழிவு .
நீர்க்காக்கை காக்கைவகை .
நீர்க்கால் வாய்க்கால் .
நீர்க்காவி ஆடையில் பற்றும் இளஞ்செந்நிறம் ; கருங்குவளை மலர் .
நீர்க்கிழவன் வருணன் .
நீர்க்கீரி நீரில் வாழும் விலங்குவகை .
நீர்க்குடம் நீர் நிரம்பிய இடம் ; எண்வகை மங்கலத்துள் ஒன்றாகிய நிறைகுடம் , பூரணகும்பம் .
நீர்க்குண்டி வெண்ணொச்சிச்செடி .
நீர்க்குமிழி நீரில் எழும் கொப்புளம் .
நீர்க்குவை கடைக்கண்ணில் வளரும் வேண்டாத தசை .
நீர்க்குளரி செடிவகை ; சிறு செடிவகை .
நீர்க்குறிஞ்சா கழுதைப்பாலைச்செடி .
நீர்க்கைக்கதவு மதகு .
நீர்க்கொழுந்து நீரோட்டம் .
நீர்க்கொள்ளுதல் நீர்க்கோவை , சளிபிடித்தல் ; சீழ்பிடித்தல் .
நீர்க்கோத்தை ஒரு தண்ணீர்ப்பாம்புவகை .
நீர்க்கோப்பு நீர்க்கோவை .
நீர்க்கோலம் தண்ணீரால் இடப்படும் தீக்குறியான கோலம் ; நீர் விளையாட்டுக் காலத்தில் அணியும் சிறப்புடை ; நீரில் எழுதப்படும் எழுத்து .
நீர்க்கோலி தண்ணீர்ப்பாம்பு .
நீர்க்கோவை நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி ; நீர்ப்பிடிப்பு ; நீர்க்கொள்ளுதல் ; நீரால் உண்டாகும் உடம்புவீக்கம் ; கபவாதநோய் .
நீர்க்கோழி நீர்வாழ் பறவை .
நீர்க்கோன் காண்க : நீர்க்கிழவன் .
நீர்கட்டல் மூத்திரம் அடைபட்டிருக்கும் நோய் .
நீர்ச்சாய்வு நீர்க்கசிவுள்ள பகுதி .
நீர்ச்சால் தண்ணீர்மிடா ; நீர் இறைக்கும் சால் .
நீர்ச்சாவி மிகுநீரால் வரும் பதர் ; வெள்ளக் கெடுதியால் உண்டாகும் நெற்பதர் .
நீர்ச்சிக்கு காண்க : நீர்க்கடுப்பு .
நீர்ச்சிரங்கு சேற்றுப்புண் .
நீர்ச்சீலை கோவணம் .
நீர்ச்சுண்டி நீர்ப்பூண்டுவகை .