சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நீற்றமுது | வெற்றிலையில் தடவுஞ் சுண்ணாம்பு . |
| நீற்றறை | சுண்ணாம்புக் காளவாய் . |
| நீற்றுக்கோயில் | திருநீற்றுப் பை . |
| நீற்றுண்டை | திருநீற்றுக்காக உருட்டி வைக்குஞ் சாணவுருண்டை . |
| நீற்றுதல் | நீறாக்குதல் , பொடியாக்குதல் ; உலோகங்களைப் பொடியாக்குதல் . |
| நீற்றுப்பெட்டி | எண்ணெயூற்றுங் கூடை ; பிட்டுச் சுடும் பெட்டி . |
| நீற்றுமுண்டி | நெற்றியில் திருநீறு அணிந்தவர் . |
| நீறடித்தல் | சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல் . |
| நீறணிகடவுள் | காண்க : நீறாடி . |
| நீறணிந்தோன் | காண்க : நீறாடி . |
| நீறாகுதல் | சாம்பராய்ப் போதல் . |
| நீறாடி | திருநீறு அணிந்த சிவபெருமான் . |
| நீறாடுதல் | திருநீறுபூசுதல் ; புழுதிபடிதல் ; பொடியாக்குதல் . |
| நீறு | திருநீறு ; சாம்பல் ; புழுதி ; நீற்றின சுண்ணாம்பு . |
| நீறுதல் | நீறாதல் ; சுண்ணமாதல் ; பொடியாதல் ; அழிதல் . |
| நீறுபூசி | சிவபெருமான் ; சமணத்திலிருந்து சைவரான வேளாளர் . |
| நீறுபூத்தநெருப்பு | சாம்பல் படிந்த கட்டைத் தணல் ; கோபத்தை வெளிக்காட்டாதவன் . |
| நீறுபூத்தல் | நன்றாய் நீறுதல் ; சாம்பல்நிறம் பிடித்தல் ; உடலில் அழுக்குப் பிடித்தல் . |
| நீன்மை | நீலநிறம் . |
| நீனிறம் | நீலநிறம் . |
| நீனிறவியலகம் | நீலப்பரப்பான கடல் . |
| நீனிறவினை | பாவச்செயல் . |
|
|