நுதம்புதல் முதல் - நுறுங்கு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நுதம்புதல் நனைந்திளகுதல் ; ஈரமாதல் .
நுதல் சொல் ; நெற்றி ; புருவம் ; தலை ; மேலிடம் .
நுதல (வி) கருது ; குறி .
நுதலணி நெற்றிச்சுட்டி .
நுதலிப்புகுதல் முப்பத்திரண்டு உத்தியுள் ஒன்று , சொல்லப் போகும் பொருளை முன்னர்ச் சுட்டிப் பின் விளக்குதல் .
நுதலுதல் கருதுதல் ; கூறுதல் ; தோற்றுவித்தல் .
நுதற்கண் நெற்றிக்கண் .
நுதற்கண்ணன் சிவன் .
நுதற்சுடிகை காண்க : நுதலணி .
நுதற்சூட்டு காண்க : நுதலணி .
நுதனாட்டன் காண்க : நுதற்கண்ணன் .
நுதனாட்டி நெற்றிக்கண்ணுடைய துர்க்கை .
நுதி நுனி ; அறிவுக்கூர்மை ; தலை ; முன்பு ; வாக்கியமுறைப்படி செய்த சந்திர கணனத்தில் ஏற்படும் வாக்கியப் பிழை .
நுதித்தல் அடைசுதல் .
நுதித்தோல் ஆண்குறியின் நுனித்தோல் .
நுதுத்தல் அவித்தல் ; அழித்தல் ; நீக்குதல் .
நுதுப்பு தணிப்பு .
நுந்தாவிளக்கு காண்க : நந்தாவிளக்கு .
நுந்துதல் தள்ளுதல் ; தூண்டுதல் .
நுந்தை உம் தந்தை .
நுபம் எருக்கஞ்செடி .
நும் நீயிர் என்பது வேற்றுமை உருபேற்கும் போது மாறும் வடிவம் ; எல்ல¦ரும் என்பது வேற்றுமையுருபு ஏற்கும்போது கொள்ளும் சாரியை .
நும்பி உம் தம்பி .
நும்முன் உம் முன்னோன் ; உம் தமையன் .
நும்மோர் உம்மவர் .
நுமள் உம்மவள் .
நுமன் உம்மைச் சார்ந்தவன் .
நுமையன் உம் தமையன் .
நுரம்பு சேறு .
நுரு அறுத்த தாளில் முளைக்குந் தளிர் .
நுரை நீர்க்குமிழித் தொகுதி ; குமிழி ; வெண்ணெய் ; வெள்ளை ; வயிரக்குற்றவகை .
நுரைகக்குதல் நுரையை வாயிலிருந்து வெளிவிடுதல் .
நுரைத்தல் நீர் முதலியன கொப்புளங்களாதல் .
நுரைதப்புதல் நுரை வாயிலிருந்து வெளிவருதல் .
நுரையீரல் மார்பின் இருபுறத்துள்ளதும் கெட்டகாற்றை வெளிவிட்டு நல்ல காற்றை உட்கொண்டு குருதியைத் தூய்மை செய்வதுமான உறுப்பு , மூச்சுப்பை .
நுலையிலி ஊமை .
நுவ்வை உன் தங்கை .
நுவணம் கல்விநூல் ; நுட்பம் ; இடித்த மா ; பஞ்சிநூல் ; பைந்தினை .
நுவணை கல்விநூல் ; நுட்பம் ; இடித்த மா ; பஞ்சிநூல் ; பைந்தினை .
நுவல் சொல் .
நுவல்வோன் ஆசிரியன் .
நுவலாச்சொல் ஒரு பொருளைப் பழித்தாற் போலப் புகழும் அணி .
நுவலாநுவற்சி காண்க : ஒட்டணி ; குறிப்பெச்சம் .
நுவலுதல் சொல்லுதல் ; விரும்புதல் .
நுவற்கரி கரகம் .
நுவற்சி சொல்லுகை .
நுவறுதல் அராவுதல் .
நுழாய்ப்பாக்கு முதிராப் பாக்கு .
நுழுதுதல் முடித்தல் .
நுழுந்தி பொறுப்பேலாகாது நழுவுவோன் .
நுழுந்துதல் நுழைத்தல் ; முடித்தல் ; கவர்தல் ; பதுங்குதல் ; நகர்தல் ; எளிதில் அறியக்கூடாத இடத்தில் வைத்தல் ; மறைதல்
நுழுவல் முதிராப் பாக்கு ; நழுவும் பொருள் .
நுழுவுதல் நகர்தல் .
நுழை சிறுவழி ; பலகணி ; குகை ; துளை ; நுண்மை ; புத்திநுட்பம் .
நுழைகடவை வேலி முதலியவற்றினை சிறுதிறப்பு .
நுழைச்சல் காண்க : நுழைகடவை ; ஏழு என்னும் எண்ணிற்கு வழங்கும் குழூஉக்குறி .
நுழைத்தல் புகுத்தல் .
நுழைதல் புகுதல் ; பதிதல் ; சேர்ந்துகொள்ளுதல் ; நுண்மையாதல் ; இடைச்செருகப் படுதல் ; கூரிதாதல் ; சாடை சொல்லுதல் ; கடத்தல் ; மட்டுக்கட்டுதல் .
நுழைநரி நரி ; நயவஞ்சகன் .
நுழைபுலம் நுண்ணறிவு .
நுழைவழி திட்டிவாசல் .
நுழைவாசல் திட்டிவாசல் .
நுழைவாயில் திட்டிவாசல் .
நுழைவு நுண்மை ; கூரிய புத்தி .
நுள்ளல் காண்க : நுளம்பு .
நுள்ளான் சிற்றெறும்பு .
நுள்ளு கிள்ளு ; சிறுதுண்டு .
நுள்ளுதல் கிள்ளுதல் .
நுளம்பு சிறுகொசு ; பெருங்கொசு .
நுளுப்புதல் கழப்புதல் .
நுளை வலையர்சாதி ; ஈனம் ; குருடு .
நுளைச்சி நுளைச்சாதிப் பெண் , நெய்தல்நிலப் பெண் .
நுளையன் இழிந்தோன் ; நெய்தல்நிலத்தான் .
நுறுக்குதல் பொடியாக்குதல் .
நுறுங்கு குறுநொய் .