சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நூற்பொருள் | நூலிற் கூறப்படும் பொருள் . |
| நூற்றந்தாதி | அந்தாதித் தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறைகொண்ட சிற்றிலக்கியவகை . |
| நூற்றல் | நூற்குதல் , நூலாக்குதல் . |
| நூற்றாண்டு | நூறு ஆண்டுகொண்ட கால அளவு . |
| நூற்றாறு | நூனாழி ; நெசவிற்குதவும் நூல் சுற்றிய சிறுகுச்சி . |
| நூற்றுநிறை | நூறுபலம் . |
| நூற்றுலாமண்டபம் | நூறடி உலாவுதற்குரிய அமுது செய்யும் மண்டபம் . |
| நூற்றுவர் | நூறு என்னும் தொகையினர் ; துரியோதனாதியர் . |
| நூற்றவரைக்கொல்லி | நூறுபேரை ஒருங்கே கொல்லும் பொறிவகை . |
| நூற்றுறை | நூற்பொருள் . |
| நூறாயிரம் | இலக்கம் , இலட்சம் . |
| நூறு | நூறு என்னும் எண் ; மா , பொடி முதலியன ; சுண்ணணாம்பு . |
| நூறு | (வி) அழி . |
| நூறுகோடி | பதினாயிரம் இலட்சங்கொண்ட எண் ; நூறு முனைகளையுடைய வச்சிரப் படை . |
| நூறுதல் | அழித்தல் ; அறைந்துகொள்ளுதல் ; வெட்டுதல் ; நெரித்தல் ;பொடியாக்குதல் ; இடித்தல் ; வளைந்துகொள்ளுதல் ; துரத்தல் . |
| நூறும்புகுதல் | நூறாண்டு வாழ்தல் . |
| நூறை | மலங்குமீன் ; வள்ளிவகை . |
| நூன்மடந்தை | கலைமகள் . |
| நூன்மாடம் | கூடாரம் . |
| நூன்முகம் | பாயிரம் ; நூலின் தொடக்கம் ; நூற்றுறை . |
| நூன்முடிபு | நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு ; நூற்பொருளினது நோக்கம் ; நூலின் இறுதி . |
| நூனம் | உறுதி ; குறைபாடு ; தோல்வித்தான வகை . |
| நூனயம் | நூலின் அழகு ; கல்விநயம் . |
| நூனாதிக்கம் | குறைசொல்லும் குணம் . |
| நூனாதிகம் | குறைசொல்லும் குணம் . |
| நூனாயம் | சூது . |
| நூனாழி | நெசவுநாடா . |
| நூனாழிகை | நெசவுநாடா . |
| நூனுட்பம் | நூலினது நுண்மை ; நூற்கருத்து . |
|
|