நெடுந்துருத்தி முதல் - நெய்தல்யாழ் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நெடுந்துருத்தி நீர்வீசும் கருவிவகை .
நெடுந்தூக்கு தூக்கு ஏழனுள் எழுசீர் கொண்டது .
நெடுந்தூரம் மிகத் தொலைவு .
நெடுந்தெய்வம் பெருமைபெற்ற தெய்வம் .
நெடுந்தெரு கடைவீதி ; பெருவீதி .
நெடுந்தொகை நீண்ட பாடல்களின் தொகுப்பாகிய அகநானூறு .
நெடுந்தோட்டி பெரிய அங்குசம் .
நெடுநாவை கலப்பையின் நீண்ட கொழு .
நெடுநாள் நெடுங்காலம் .
நெடுநிகழ்ச்சி நெடுங்காலம் .
நெடுநீட்டு மிக்க தொலைவு ; வெகுநீளம் .
நெடுநீர் கடல் ; நீட்டித்துச் செய்யும் இயல்பு .
நெடுநெடெனல் முறிதல் ஒலிக்குறிப்பு ; வளர்ச்சிக் குறிப்பு .
நெடுநேரம் பெரும்பொழுது .
நெடுப்பம் நீட்சி .
நெடுப்பிணை வங்கமணல் .
நெடும்பகை நீண்டகாலமா யுள்ள பகை ; பெரிய பகை ; தீராப் பகை .
நெடும்பயணம் நீண்ட பயணம் ; இறப்பு .
நெடும்பழக்கம் நீண்ட அனுபவம் ; நீடித்த நட்பு .
நெடும்பழி பெரும்பழி ; அழியாப் பழி .
நெடும்பா ஆடாதோடை என்னும் மருந்துச் செடி .
நெடும்பாடு பெருங்குறைவு .
நெடும்பார்வை நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் .
நெடும்புகழ் மிகுபுகழ் .
நெடும்புரிவிடுதல் நாட்கடத்துதல் ; பொய் சொல்லுதல் .
நெடும்புனல் ஆழமுள்ள நீர்நிலை .
நெடும்போக்கு மீளும் நோக்கமில்லாத செலவு .
நெடுமன் நீண்டது ; பாம்பு .
நெடுமாந்தடி நீண்ட கழி ; பயனற்றவன் .
நெடுமால் திருமால் .
நெடுமி நெடியவள் ; நீண்ட மரம் ; மழை .
நெடுமிசை உச்சி .
நெடுமிடல் மிகுவலியோன் .
நெடுமுரல் ஒரு மீன்வகை .
நெடுமூக்கு துதிக்கை .
நெடுமூச்சு பெருமூச்சு .
நெடுமூச்செறிதல் மேல்மூச்சு வாங்குதல் .
நெடுமை நீளம் , உயரம் , காலம் முதலியவற்றின் நீட்சி ; பெருமை ; அளவின்மை ; ஆழம் ; கொடுமை ; பெண்டிர் தலைமயிர் ; நெட்டெழுத்து .
நெடுமொழி புகழ்ச்சொல் ; தன்மேம்பாட்டுரை ; வஞ்சினம் ; காண்க : நெடுமொழியலங்காரம் ; புராணக்கதை ; யாவருமறிந்த செய்தி .
நெடுமொழிகூறுதல் புகழ்தல் .
நெடுமொழியலங்காரம் போரில் வீரன் ஒருவன் தனக்கு நிகரில்லையென்று மேம்படுத்துரைக்கும் அணி .
நெடுவசி போர்வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித்தழும்பு .
நெடுவரி ஒழுங்கு .
நெடுவல் நெடிய ஆள் .
நெடுவாசி பெருத்த மாறுபாடு .
நெடுவிரல் காண்க : ஆடாதோடை ; நாய்ப்பாகற்கொடி .
நெடுவீடு வீடுபேறு .
நெடுவெண்பாட்டு ஏழடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையுமுடைய வெண்பாவகை .
நெடுவெள்ளூசி புண் தைக்கும் ஊசி ; நெட்டை என்னுங் கருவி .
நெண்டுதல் எதிர்க்களித்தல் ; தோண்டுதல் ; நொண்டுதல் .
நெத்தப்பலகை சூதாடுபலகை .
நெத்தம் இரத்தம் .
நெத்தலி காண்க : நெய்த்தோலி .
நெத்திலி காண்க : நெய்த்தோலி .
நெதி செல்வம் ; முத்து ; தியானம் .
நெதியம் செல்வம் .
நெதியாளன் குபேரன் .
நெப்பம் மென்மை , மிருது , இலேசு .
நெம்பு மேல்எழுப்புகை ; இருகூர் இணைப்பு அணி ; காண்க : ஓடாணி ; ஏணிப்பழு ; ஏற்றமடலாணி ; விலாவெலும்பு ; காண்க : நெம்புதடி .
நெம்புதடி பொருளைக் கிளப்ப அதனடியில் செலுத்துங் கோல் .
நெம்புதல் மேலே கிளப்புதல் ; உடைத்துத் திறத்தல் .
நெமிரல் காண்க : நிமிரல் .
நெய் வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள் : வெண்ணெய் ; எண்ணெய் ; புழுகுநெழ் ; தேன் ; இரத்தம் ; நிணம் ; நட்பு ; சித்திரைநாள் .
நெய்க்கடல் எழுகடலுள் நெய்மயமாகியது .
நெய்க்கிழி எண்ணெய் தோய்த்த சீலைத்துண்டு .
நெய்கொட்டான் பூவந்திமரம் .
நெய்க்கொட்டை பூவந்திமரம் .
நெய்ச்சட்டி செங்கழுநீர்ப்பூ ; பவளக் குன்றி மணி ; கீரைவகை .
நெய்ச்சிட்டி காட்டுச்சீரகம் ; பவளக் குன்றிமணி
நெய்த்தல் பளபளத்தல் ; கொழுத்தல் ; பசப்புடையதாயிருத்தல் .
நெய்த்தோர் இரத்தம் ஒதிமரம் .
நெய்த்தோலி ஒரு பொடிமீன்வகை .
நெய்தல் ஆடை முதலியவை நெய்தல் ; வெள்ளாம்பல் ; காண்க : கருங்குவளை ; செங்கழுநீர்க்கிழங்கு ; கடலும் கடல் சார்ந்த இடமும் ; இரங்கலாகிய உரிப்பொருள் ; சாப்பறை ; ஒருபேரெண் .
நெய்தல்பூண்டோன் நெய்தல் மாலை அணிந்த ஐயனார் .
நெய்தல்யாழ் நெய்தற் பெரும்பண்களுள் ஒன்று .