சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நேர்ப்பம் | இறப்பு ; திறமை . |
நேர்பசை | குற்றுகரமுற்றுகரங்களோடு இயைந்து வரும் நேரசை . |
நேர்படுத்துதல் | காண்க : நேர்பிடித்தல் ; நேர்பண்ணுதல் ; நலப்படுத்துதல் . |
நேர்படுதல் | சந்தித்தல் ; நன்கு பயிலுதல் ; நிகழ்தல் ; ஏற்புடையதாதல் ; வாய்த்தல் ; காணப்படுதல் ; எதிர்ப்படுதல் ; உடன்படுதல் ; நட்புக் கொள்ளுதல் ; ஒழுங்குபடுதல் . |
நேர்பண்ணுதல் | சமனாக்குதல் ; ஒழுங்குப்படுத்துதல் ; ஒன்றுபடுத்துதல் ; ஆணையிடுதல் . |
நேர்பாடு | தற்செயலான நிகழ்ச்சி ; உபாயம் ; நீதி ; நீளம் ; உடன்பாடு ; காண்க : நேர்த்திக்கடன் . |
நேர்பிடித்தல் | நேர்வழி செலுத்துதல் ; முடிவுக்குக் கொண்டுவருதல் ; சரிப்படுத்துதல் ; சமாதானப்படுத்துதல் ; நலமாதல் . |
நேர்பு | நேரசை ; நீளம் ; எழுச்சி ; சந்திப்பு ; நிகழ்ச்சி ; போக்கு . |
நேர்போதல் | இணங்குதல் ; குணமாதல் ; சரியாய்ப்போதல் . |
நேர்ம்புணை | இலேசான தெப்பம் . |
நேர்முகம் | எதிர்முகம் . |
நேர்மை | செம்மை ; உண்மை ; நீதி ; நுண்மை ; அறம் ; திருத்தம் ; சமம் ; இசைவு ; நன்னிலை ; நிகழ்ச்சி . |
நேர்மையம் | சரிநடு ; |
நேர்வருதல் | ஒத்திருத்தல் . |
நேர்வழி | நேர்பாதை ; நல்லொழுக்கம் . |
நேர்வளம் | செவ்வழியாழ்த்திறம் ; பாலையாழ்த்திறம் . |
நேர்வாய்க்கட்டளை | மாடத்தின்கண் சாளரம் . |
நேர்வாளம் | மருந்துமரவகை . |
நேர்வான் | சித்திரைநாள் . |
நேர்விடை | உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை ; நேராகச் சொல்லும் விடை . |
நேர்வு | நிகழ்ச்சி ; உடன்பாடு ; கொடுத்தல் ; வேண்டுகை ; எதிர்தல் ; பொருதல் ; சரிந்து விழுகை . |
நேர | ஓர் உவமஉருபு . |
நேரகாலம் | ஏற்ற காலம் ; கெடுதியான காலம் ; விதித்த காலம் ; தற்காலம் . |
நேரங்கடத்துதல் | பொழுதுபோக்குதல் ; வேலையில் மந்தமாயிருத்தல் . |
நேரங்கெட்டநேரம் | ஒவ்வாத சமயம் ; தகுதியற்ற காலம் . |
நேரசை | குறிலோ நெடிலோ தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை . |
நேரஞ்சாய்தல் | பொழுதுபோதல் . |
நேரஞ்செல்லுதல் | அதிககாலம் பிடித்தல் ; தாமதமாதல் . |
நேரடி | நாற்சீரான் வரும் அளவடி ; நேரில் . |
நேரந்தப்புதல் | காலந்தவறுதல் . |
நேரபாரமறிதல் | அடக்கவொழுக்கமறிதல் ; காலமறிதல் . |
நேரம் | காலம் ; தருணம் ; பகலிற் பாதியாகிய இரு யாமகால அளவு ; குற்றம் ; அபராதம் ; ஒறுப்புப்பணம் . |
நேரல் | காண்க : நேர்வு . |
நேரல்லார் | கீழோர் ; பகைவர் . |
நேரலன் | பகைவன் ; நேர்மையானவன் ; நிறுதிட்டமானது . |
நேராக்குதல் | இணக்குதல் ; முடிவுபடுத்துதல் ; அழித்தல் . |
நேராக | தானாக ; காட்சியாக ; உண்மையாய் ; முழுமையும் . |
நேராதல் | இணங்குதல் ; சரியாதல் . |
நேராதார் | பகைவர் . |
நேரார் | பகைவர் . |
நேராளி | நேர்மையுள்ளவன் . |
நேரிசம் | எறிபடை ; அம்புவகை . |
நேரிசை | காண்க : நேரிசைவெண்பா ; பண்வகை . |
நேரிசைவெண்பா | இரண்டாமடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்றுவரும் வெண்பாவகை . |
நேரிடுதல் | நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; கைகூடுதல் . |
நேரியது | நேரானது ; ஒரு நல்லாடைவகை . |
நேரியன் | நேரிமலைக்கு உரியவனான சோழன் ; நுண்ணுணர்வுடையவன் ; அணுவுக்கு அணுவாய் இருப்பவன் . |
நேரிறை | சோழன் ; உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை . |
நேருக்குநேராய்நிற்றல் | சரிநேராதல் ; நேர்எதிராயிருத்தல் ; பிறர்போலத் தானும் நடத்தல் . |
நேருக்குவருதல் | இணங்கிவருதல் . |
நேரேடம் | நாவல்மரம் . |
நேரேடு | நாவல்மரம் . |
நேரொத்தல் | இணையாயிருத்தல் ; மாறுபாடின்றி இருத்தல் ; மிகப் பொருந்தி இருத்தல் . |
நேரோடல் | குதிரையின் நேரோட்டம் . |
நேளி | காண்க : தாமரை . |
நேற்று | முன்நாள் ; சற்று முன்காலத்தில் . |
நேற்றையதினம் | நேற்று . |
நேனம் | பைத்தியம் . |
![]() |
![]() |