நொருகை முதல் - நொன்னை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நொருகை சிற்றுண்டி .
நொருங்குதல் காண்க : நொறுங்குதல் .
நொலை பூரிகை என்னும் அப்பவருக்கம் .
நொலையல் பூரிகை என்னும் அப்பவருக்கம் .
நொவ்வல் வருத்தம் .
நொவ்விதாக விரைவாக .
நொவ்வு மெலிவு ; உடையுந்தன்மை ; வாட்டம் ; வருத்தம் ; விரைவு .
நொவ்வுதல் வருந்துதல் ; மெலிதல் .
நொழுந்துதல் நுழைத்தல் .
நொள்குதல் சுருங்குதல் ; முகத்தல் ; இளைத்தல் .
நொள்கெனல் அச்சக்குறிப்பு .
நொள்ளல் பார்வையற்றுக் கண்குழிந்த நிலை ; காண்க : நுளம்பு .
நொள்ளாப்பு காண்க : நொவ்வல் .
நொள்ளுதல் முகத்தல் ; விழுங்குதல் .
நொள்ளை குருடு ; காண்க : நாகரவண்டு ; விலங்குவகை ; கைக்குழந்தை .
நொள்ளைக்கண் பார்வை மாறிய கண் .
நொள்ளைப்பயல் இழிஞன் , புல்லன் .
நொளநொளத்தல் குழைதல் ; வழுவழுப்பாதல் .
நொளில் காண்க : நொதி .
நொளுக்கல் முற்றாத நிலை ; இளம்பாக்கு .
நொளுநொளெனல் குழைதற்குறிப்பு .
நொளுவல் காண்க : நொளுக்கல் .
நொற்பம் காண்க : நுட்பம் ; எளிமை .
நொறில் விரைவு ; நுடக்கம் ; ஒடுக்கம் ; அருவருக்கத்தக்க சேறு .
நொறு தின்பண்டம் .
நொறுக்கரிசி நொருங்கிய அரிசி ; பாதி வெந்த சோறு .
நொறுக்கித்தள்ளுதல் நன்றாயடித்தல் ; மிகத்திட்டுதல் ; திறமைகாட்டுதல் .
நொறுக்கு பொடியாக்குகை ; மெல்லுகை ; நன்றாயடிக்கை .
நொறுக்குதல் பொடியாக்கல் ; நையப்புடைத்தல் ; இரத்தக்காயம் பண்ணுதல் ; மிகுதியாய் உண்ணுதல் .
நொறுங்கு நொய் ; தூள் ; நுண்மை .
நொறுங்குதல் பொடியாதல் ; பின்னிரங்குதல் .
நொறுநாட்டியம் சிறுகுற்றங்கள் காணுந்தன்மை .
நொறுவை காண்க : நொறுவைப்பண்டம் .
நொறுவைக்கள்ளன் வீண்செலவு செய்வோன் .
நொறுவைக்கள்ளி வீண்செலவு செய்பவள் .
நொறுவைப்பண்டம் சிற்றுண்டி .
நொன்றி காண்க : நௌவி .
நொன்னை நையாண்டி ; பரிகாசம் .