சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| படைத்தவன் | காண்க : படைப்போன் ; கருத்தா ; தந்தை ; ஒன்றை அடைந்தவன் . |
| படைத்துக்கோட்பெயர் | கூத்திலும் விளையாட்டிலும் உறுப்பினர்க்கு இட்டு வழங்கும் பெயர் . |
| படைத்துணை | போர்த்துணை ; போரில் உதவுவோன் . |
| படைத்துமொழிதல் | கற்பித்துச் சொல்லுதல் . |
| படைத்தோன் | காண்க : படைத்தவன் . |
| படைநர் | போர்வீரர் . |
| படைநாள் | படையெழுச்சி நாள் . |
| படைநிலை | படையாளர் மகளிருடன் தங்குமிடம் . |
| படைப்பற்று | பாளையம் ; மேகப்படை . |
| படைப்பு | உண்டாக்கப்பட்டது ; பெறுகை ; செல்வம் ; நிவேதனம் ; உணவு பரிமாறுதல் ; காடு . |
| படைப்போன் | பிரமன் . |
| படைபண்ணுதல் | போர் செய்தல் . |
| படைபயிற்றல் | ஆயுதவித்தை கற்பித்தல் ; சிலம்பம் பழக்கல் . |
| படைபோதல் | போருக்குப் போதல் . |
| படைமடம் | அறப்போர் நெறியினின்றும் தவறுதல் . |
| படைமயிர் | பாவாற்றி . |
| படைமரம் | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| படைமறுத்தல் | கீழறுத்தல் . |
| படைமுகம் | போர்த்தொடக்கம் . |
| படையணி | தீப்பந்தம் வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டவகை . |
| படையர் | சேனைகளையுடையவர் . |
| படையல் | தெய்வத்திற்குப் படைக்கும் பொருள் ; அடிக்குமடி . |
| படையறுத்தல் | கீழறுத்தல் ; வசீகரித்தல் . |
| படையறுதல் | வலிமையிழத்தல் ; கீழ்ப்பட்டு அடங்குதல் . |
| படையாட்சி | படைவீரன் ; வீரச்செயல் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் . |
| படையாள் | போர்வீரன் . |
| படையாளன் | போர்வீரன் . |
| படையிறங்குதல் | பாளையம் போடுதல் . |
| படையுடன்படாமை | ஆயுதமெடேன் என்று வரைந்துகொள்ளுகை . |
| படையுள்படுவோன் | அரசன் ஆணையைப் போர் வீரர்களுக்கு அறிவிப்போன் . |
| படையுறுப்பு | சேனையின் அணி . |
| படையுறை | ஆயுத உறை . |
| படையெடுத்தல் | படையுடன் பகைப்புலத்தின் மேற்செல்லுதல் . |
| படையெழுச்சி | படையெழுதல் . |
| படைவகுப்பு | தண்டம் , மண்டலம் , அசங்கதம் , போகம் எனும் நால்வகைப்பட்ட அணிவகுப்பு . |
| படைவட்டம் | வளைதடி . |
| படைவரம் | குதிரைச்சேனம் . |
| படைவழக்கு | தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை . |
| படைவாள் | கலப்பைக்கொழு ; கலப்பை . |
| படைவீடு | படைக்கலக்கொட்டில் , ஆயுதசாலை ; பாசறை ; முருகனின் அறுவகைப்பட்ட இருப்பிடம் ; தலைநகர் . |
| படைவீரன் | சேனைவீரன் . |
| படோல் | காண்க : பேய்ப்புடல் . |
| படோலம் | யானைகட்டுந் தறி ; முள்வெள்ளரி . |
| பண் | இசை ; இசைப்பாட்டு ; ஏழு சுரமுள்ள இசை ; யாழ் முதலிய நரம்புக் கருவிகள் ; பருவம் ; குதிரைக்கலணை ; அலங்காரம் ; கூத்துவகை ; ஓசை ; யானை குதிரைகளுக்குச் செய்யும் அலங்காரம் ; தேருக்குச் செய்யும் அலங்காரம் ; தகுதி ; அமைவு ; மரக்கலத்தின் இடப்புறம் ; வயல் ; தொண்டு ; நீர்நிலை ; தோணியின் இடப்பக்கப் பாய்மரக் கயிறு . |
| பண் | (வி) செய் , பண்என் ஏவல் . |
| பண்கயிறு | தோணியின் இடப்பக்கத்துப் பாய்மரக் கயிறு . |
| பண்செய்தல் | பண்படுத்தல் ; ஒப்பனைசெய்தல் . |
| பண்டக்கலம் | பொன்னணிகலன் . |
| பண்டக்காரன் | செல்வன் ; பண்டத்துக்குரியவன் . |
| பண்டகன் | அலி . |
| பண்டகாரி | பொருளாளன் ; செல்வமிக்கவன் . |
| பண்டங்கன் | காண்க : பண்டரங்கன் . |
| பண்டசாலை | பொருள்களைச் சேர்த்துவைக்கும் இடம் ; அணிகலன் முதலியன வைக்கும் இடம் ; களஞ்சியம் ; கருவூல அறை . |
| பண்டடை | களஞ்சியம் . |
| பண்டப்பழிப்பு | ஒரு பொருளைக் குறித்துக் குறை கூறுகை ; காய்கறிகளின் மதிப்பைக் குறைத்துக் கூறுகை . |
| பண்டபதார்த்தம் | பொருள்கள் ; உணவுப் பொருள்கள் ; சொத்து . |
| பண்டம் | பொருள் ; பாண்டம் முதலியன ; தின்பண்டம் ; பயன் ; பொன் ; நிதி ; ஆடுமாடுகள் ; வயிறு ; உடல் ; உண்மை ; பழம் . |
| பண்டமாற்று | ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குதல் . |
| பண்டமாற்றுமுறை | ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குதல் . |
| பண்டமாறுதல் | ஒன்று கொடுத்து மற்றொன்று வாங்குதல் ; விற்றல் . |
| பண்டர் | கீழ்மக்களுள் பாடும் வகுப்பினர் ; அசுரர் . |
| பண்டரங்கன் | பாண்டரங்கக் கூத்தாடுவோனான சிவபெருமான் . |
| பண்டவறை | காண்க : பண்டசாலை . |
| பண்டவீடு | நிதியறை . |
| பண்டறிசுட்டு | முன்னமே அறிந்ததைக் குறிக்குஞ் சுட்டு . |
| பண்டன் | ஆண்தன்மை இல்லாதவன் . |
| பண்டனம் | போர் ; கவசம் . |
| பண்டாக்கள் | தலங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் பார்ப்பனப் புரோகிதர் . |
| பண்டாகி | சேம்புச்செடி ; கத்தரிச்செடி . |
| பண்டாரத்தி | பண்டாரப்பெண் . |
| பண்டாரத்தோப்பு | அரசாங்கத் தோட்டம் . |
| பண்டாரம் | பல்பண்டம் ; செல்வம் ; களஞ்சியம் ; இனிய தின்பண்டம் ; மஞ்சட்பொடி ; பொது ; பரதேசி ; சைவத்துறவி ; பூக்கட்டி விற்கும் ஒரு சாதியார் . |
| பண்டாரவாடை | வேளாண்மையையே ஆதாரமாகக்கொண்டிருக்கும் ஊர் ; ஓர் ஊர் . |
| பண்டாரவாரியம் | கோயில்விசாரணைச் சபையார் . |
| பண்டாரவிடுதி | அதிகாரிகள் தங்கும் விடுதி . |
|
|
|