பருங்குதல் முதல் - பல்கலைக்கழகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பருங்குதல் பறித்தல் ; கொல்லுதல் .
பருங்கை கொடைக்குணமுள்ளவர் ; பெருஞ்செல்வர் .
பருணன் ஆள்பவன் , நிருவகிப்பவன் .
பருணிதன் புலவன் ; அறிவுப் பக்குவமுடையவன் .
பருத்தல் பெருத்தல் .
பருத்தவன் தடித்தவன் .
பருத்தி பஞ்சு உண்டாகுஞ் செடிவகை ; பஞ்சு .
பருத்திக்காடு பருத்தி விளைநிலம் .
பருத்திக்குண்டிகை பருத்திப் பஞ்சடைத்த குடுவை .
பருத்திக்கொட்டை பருத்திவிதை .
பருத்தித்தூறு வாய்க்கிரந்தி .
பருத்திப்பெண்டு பஞ்சு நூற்கும் பெண் .
பருத்திப்பொதி பருத்திமூட்டை .
பருத்திவீடு பருத்தியின் பன்னப்பட்ட பஞ்சு .
பருதி காண்க : பரிதி ; விளையாட்டுக்குரிய வளையம் .
பருந்தலை பெரிய தலை ; செருக்குள்ளவன் ; பெருஞ்செல்வன் ; மாட்டுக் குற்றவகை .
பருந்தாட்டம் பருந்து தன் இரையைக் கொத்தியாட்டும் செயல் ; பெருந்துன்பம் .
பருந்து பறவைவகை ; வளையல் .
பருப்பதம் மலை .
பருப்பதி பார்வதி .
பருப்பம் பருக்கை ; பருமை ; மலை .
பருப்பு துவரை முதலியவற்றின் உள்ளீடு ; பருமை ; தோல் நீக்கிய தானியங்களின் பகுதி .
பருப்புப்பொங்கல் பருப்புக் கலந்து சமைத்த சோறு .
பருப்புமத்து வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை .
பருப்பொருள் நூலின் பிண்டப்பொருள் ; சுவையற்ற பொருள் ; பாட்டின் மேலெழுந்த வாரியான பொருள் .
பருப்போரை காண்க : பருப்புப்பொங்கல் .
பருபருக்கை வேகாச் சோறு ; சிறு கூழாங்கல் போன்ற பொருள் ; ஓரினப் பொருள்களில் பெரியது ; சிறிதும் பெரிதுமான பொருள் தொகுதி ; ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம் .
பருபாரித்தல் மிகப் பருத்தல் .
பரும்படி உரப்பானது ; செவ்வையின்மை ; பருமட்டு ; பெருவாரி ; கறி முதலியவற்றோடு சேர்ந்த சோறு .
பருமட்டம் தோராய மதிப்பு ; தூலமாய்க் குறிக்கப்பட்ட நிலை .
பருமட்டு காண்க : பருமட்டம் ; பருத்த பொருள் .
பருமணல் பெருமணல் ; வரிக்கூத்துவகை .
பருமம் பருமை ; பதினெட்டு வடம்கொண்ட அரைப்பட்டிகை ; நிதம்பம் ; கவசம் ; குதிரைக் கலணை ; யானைக் கழுத்திலிடும் மெத்தை ; எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு .
பருமல் கப்பற் குறுக்குமரம் .
பருமன் பருமை ; பருத்தது ; பருத்தவர் .
பருமித்தல் அலங்கரித்தல் ; படைக்கலம் பயிலுதல் ; இறுமாப்பாயிருத்தல் ; வருந்துதல் .
பருமிதம் எக்களிப்பு ; இறுமாப்பு ; படைக்கலம் பயிலுகை .
பருமுத்து பெரிய முத்து ; பெரியம்மையின் கொப்புளம் .
பருமை பருத்திருக்கை ; பரும்படியான தன்மை ; பெருமை ; முக்கியம் .
பருவக்காற்று குறித்த காலத்தில் ஒரு பக்கமாக அடிக்குங் கடற்காற்று .
பருவகாலம் பக்குவ காலம் ; ஏற்ற காலம் ; மழை , காற்று , வெயில் , பனி முதலியவைமிக்குத் தோன்றும் காலப்பகுதி ; காருவா , மறைநிலா ; வெள்ளுவா , நிறைநிலா .
பருவஞ்செய்தல் செழிப்பாதல் .
பருவஞ்சொல்லுதல் ஆலோசனை கூறுதல் .
பருவத்தொழுக்கம் காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல் .
பருவதம் மலை ; மீன்வகை .
பருவதவர்த்தனி இமவானால் வளர்க்கப்பட்ட பார்வதி .
பருவதவாசினி காண்க : காயத்திரி ; துர்க்கை .
பருவதி பார்வதி ; சந்திரன் .
பருவநிலை காலவேறுபாடு ; காலநிலை .
பருவபேதம் காலவேறுபாடு ; காலநிலை .
பருவம் காலம் ; காலப்பிரிவு ; இளமை ; பக்குவம் ; வயது ; மறைநிலா அல்லது நிறைநிலா ; கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் என்னும் ஆறு பருவங்கள் ; மாதம் ; மழைக்காலம் ; தக்க காலம் ; பயிரிடுதற்குறிய காலம் ; ஆண்டு ; பயனளிக்குங்காலம் ; கணு ; நூற் கூறுபாடு ; நிலைமை ; உயர்ச்சி ; அளவு ; சூரியன் ஒவ்வோர் இராசியிலும் புகும் காலம் ; ஆடவர் பெண்டிர்க்குரிய வெவ்வேறு ஆயுட்கால நிலைகள் ; முகம்மதியர் திருவிழாவகை .
பருவம்பார்த்தல் ஆழம் பார்த்தல் ; தக்க சமயம் பார்த்தல் ; ஆலோசித்தல் .
பருவமழை உரிய காலத்தில் பெய்யும் மழை .
பருவமாதல் தகுதியாதல் ; பெண்கள் பூப்படைதல் .
பருவயோனி கரும்பு .
பருவரல் துன்பம் ; பொழுது .
பருவருதல் வருந்துதல் ; துன்புறுத்தல் ; அருவருத்தல் .
பருவல் பருத்தது .
பருவு முகத்தில் உண்டாகும் சிறு கட்டிவகை .
பருவுதல் அரித்தல் .
பரூஉ பருமை ; பரித்தல் ; மிகுதிப்படுகை .
பரூஉக்கை பருத்த கை ; வண்டியினோர் உறுப்பு .
பரேண் மிக்க வன்மை .
பரேபம் நீர்நிலை .
பரேர் மிக்க அழகு .
பரை பார்வதி ; சிவசத்தி ; சீவான்மா இறையருளைப் பெற்று நிற்கும் நிலை ; ஐந்து மரக்கால்கொண்ட அளவு .
பரைச்சி பார்வதி .
பரோட்சஞானம் கட்புலனுக்குத் தென்படாத பிரமமொன்று உண்டென்று கேட்டறிதல் ; இறையறிவு .
பரோட்சம் கண்ணுக்கெட்டாதது ; இறையறிவு ; சென்ற காலம் ; அரங்கிலுள்ளோர் காதில் விழாதபடி கூறும் மொழி .
பரோபகாரம் பிறர்க்குச் செய்யும் உதவி .
பரோபகாரி பிறர்க்கு உதவி புரிபவன் .
பல் எயிறு ; ஒன்றுக்கு மேற்பட்டவை ; யானை , பன்றி முதலியவற்றின் கொம்பு ; நங்கூரநாக்கு ; சக்கரம் ; வாள் முதலியவற்றின் பல் போன்ற கூர் ; சீப்புப் பல் ; வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனி உள்ளீடு ; தேங்காய் உள்ளீட்டின் சிறு துண்டு .
பல்கணி சாளரம் .
பல்கல் பெருகுதல் .
பல்கலைக்கழகம் பல கலைகளையும் கற்பிக்கும் உயர் கல்விக்கழகம் .