சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பறையாமை | கரிய ஆமை . |
| பறைவிடுதல் | காண்க : பறையறைதல் . |
| பறைவு | சொல்லுகை ; தெரிவிக்கை . |
| பன் | நாணல்வகை ; பருத்தி ; அரிவாட்பல் . |
| பன்மம் | தாமரை ; திருநீறு ; பொடி . |
| பன்மா | பலவிதமாக . |
| பன்மாண் | பலவிதமாக . |
| பன்மினி | காண்க : பதுமினி ; தாமரை . |
| பன்முறை | பல தடவை ; பலவகை . |
| பன்மை | ஒன்றுக்கு மேற்பட்டது ; தொகுதி ; ஒரு தன்மையாய் இராமை : நேர்குறிப்பின்மை ; பொதுமை ; பார்த்தும் பாராமை . |
| பன்மைப்பால் | பலர்பால் பலவின்பால்கள் . |
| பன்மையியற்பெயர் | ஓரினப் பல பொருளைக்குறிக்கும் இயற்பெயர் ; பல பாலையுங் குறித்து நிற்கும் பெயர் . |
| பன்மொழித்தொகை | இரண்டு பெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை . |
| பன்றி | ஒரு விலங்குவகை ; பன்றி வடிவான பொறிவகை ; கொடுந்தமிழ் நாட்டினொன்று . |
| பன்றிக்கிடை | பன்றிகள் அடைக்கும் இடம் . |
| பன்றிக்குறும்பு | நிலப்பனைச்செடி . |
| பன்றிக்கூழ்ப்பத்தர் | பன்றிக்குக் கூழிடுந்தொட்டி . |
| பன்றிக்கொம்பு | பன்றியின் கோரப்பல் ; ஒரு மீன்கொம்புவகை . |
| பன்றிக்கொழுப்பு | காண்க : பன்றிநெய் . |
| பன்றிநாடு | கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்றாகிய பழனிமலையைச் சுற்றியுள்ள நாடு . |
| பன்றிநெய் | பதப்படுத்தப்பட்ட பன்றிக்கொழுப்பு . |
| பன்றிப்பத்தர் | பன்றிக்குக் கூழிடுந் தொட்டி ; நீர் இறைக்குங் கருவிவகை . |
| பன்றிப்பறை | காட்டுப்பன்றிகளை வெருட்ட அடிக்கும் பறைவகை . |
| பன்றிமலை | பழனிமலை . |
| பன்றிமுகம் | நரக விசேடம் . |
| பன்றிவார் | பன்றி இறைச்சி . |
| பன்றிவெட்டுதல் | ஒரு விளையாட்டுவகை . |
| பன்னக்காரன் | கீற்று முடைவோன் ; வெற்றிலை வாணிகன் . |
| பன்னகசயனன் | பாம்பிற் பள்ளிகொண்ட திருமால் . |
| பன்னகசாலை | காண்க : பர்ணசாலை . |
| பன்னகப்பூணினான் | பாம்பை அணிகலனாக உடைய சிவபிரான் . |
| பன்னகம் | பாம்பு ; இலை ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| பன்னகர் | நாகலோகவாசிகள் . |
| பன்னகவைரி | பாம்பின் பகையான கருடன் . |
| பன்னகாசனன் | பாம்பை இருக்கையாகக் கொண்ட திருமால் ; பாம்பை உண்கிற கருடன் . |
| பன்னகாபரணன் | காண்க : பன்னகப்பூணினான் . |
| பன்னகுடி | காண்க : பர்ணசாலை . |
| பன்னச்சத்தகம் | ஓலைபின்னுவோரின் கையரிவாள் . |
| பன்னசாலை | காண்க : பர்ணசாலை . |
| பன்னத்தண்டு | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| பன்னத்தை | மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை . |
| பன்னம் | ஓலைமுடைகை ; இலை ; இலைக்கறி ; சாதிபத்திரி ; வெற்றிலை . |
| பன்னமிருகம் | தழையுண்ணும் விலங்கு . |
| பன்னரிவாள் | கருக்கறுவாள் . |
| பன்னல் | பஞ்சுகொட்டுகை ; சொல் ; பருத்தி ; சொல்லுகை ; நெருக்கம் ; ஆராய்கை . |
| பன்னவல்லி | வெற்றிலைக்கொடி . |
| பன்னவேலை | ஓலைமுடைதல் தொழில் . |
| பன்னாகம் | தென்னங்கீற்று ; தென்னந்தட்டி ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| பன்னாங்கு | தென்னங்கீற்று ; தென்னந்தட்டி ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| பன்னாங்குழி | காண்க : பல்லாங்குழி . |
| பன்னாசம் | துளசிச்செடி . |
| பன்னாசனம் | இலையுணவு ; புற்பாய் . |
| பன்னாசி | காண்க : பன்னாசம் . |
| பன்னாடு | ஒரு பழைய நாடு . |
| பன்னாடை | தென்னை , பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடுபோன்ற பகுதி ; மூடன் ; இழை நெருக்கமில்லாத் துணிவகை . |
| பன்னாபன்னாவெனல் | ஒன்றைப் பலமுறை பேசுதற்குறிப்பு . |
| பன்னாலம் | தெப்பம் . |
| பன்னி | காண்க : பத்தினி ; சணற்பயிர் . |
| பன்னிருகரத்தோன் | முருகக்கடவுள் . |
| பன்னீர் | ரோசா முதலிய பூக்களினின்று இறக்கப்படும் நறுமணநீர் ; சீழ்நீர் ; கருப்பைநீர் ; மரவகை . |
| பன்னீர்க்குடம் | கருவைச் சூழ்ந்த நீர்ப்பை . |
| பன்னீர்க்குப்பி | பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர் அடைத்துள்ள புட்டி . |
| பன்னீர்ச்செம்பு | பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர்ச் செம்புபோல் செய்யப்பட்ட தாலியுருவகை ; பன்னீர்ச்செம்பு உருவமைந்த மதிலுறுப்பு . |
| பன்னீர்வடித்தல் | மண எண்ணெய் இறக்குதல் . |
| பன்னு | வரிப்பணம் . |
| பன்னுதல் | பஞ்சுநூற்றல் ; ஆராய்ந்து செய்தல் ; புகழ்தல் ; பேசுதல் ; படித்தல் ; நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல் ; பாடுதல் ; நரப்புக்கருவி வாசித்தல் ; பின்னுதல் ; அரிவாளைக்கூராக்குதல் ; நெருங்குதல் . |
| பன்னை | தறி ; சூடன் ; ஒரு செடிவகை . |
| பன்னொன்று | பதினொன்று . |
| பனங்கட்டி | பனைவெல்லம் . |
| பனங்கதிர் | காண்க : பனம்பிடுக்கு . |
| பனங்கருக்கு | பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு ; இளம்பனை . |
| பனங்கள் | பனைமரத்திலிருந்து இறக்கும் மது . |
| பனங்கற்கண்டு | பனஞ்சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை . |
| பனங்காடு | பனைமரம் அடர்ந்த தோப்பு . |
| பனங்கிழங்கு | பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்ணுதற்குரியதுமான நீண்ட முளை . |
|
|
|