சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பாடாயடித்தல் | கடுமையாகப் புடைத்தல் . |
பாடாயழிதல் | மிகக் கேடுறுதல் . |
பாடாவதி | துன்பம் ; பயனற்றது . |
பாடாவறுதி | மிகுபாடு ; பேரிழப்பு ; அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை . |
பாடாற்றுதல் | துன்பம் பொறுத்துக்கொள்ளுதல் . |
பாடி | நகரம் ; சேரி ; முல்லைநிலத்தூர் ; காண்க : பாடிவீடு ; கவசம் ; படை ; உளவாளி ; பாடுபவர் ; பாடிப் பிச்சையெடுப்போன் ; ஒரு பண்வகை ; ஓர் ஊர் . |
பாடிக்கதை | வீண்பேச்சு . |
பாடிக்கொடுத்தல் | பிறனுக்காகப் பாடலியற்றித் தருதல் ; பாடல் இயற்றுதல் . |
பாடிகாப்பார் | ஊர்காவலர் . |
பாடிகாவல் | ஊர்காவல் ; தலையாரி ஊர் காவற்கு வாங்கும் வரி ; பாதுகாவல் ; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் ஒறுப்பு . |
பாடிசொல்லுதல் | உளவை வெளிப்படுத்துதல் . |
பாடிதம் | உச்சரிக்கப்படுவது . |
பாடிமாற்றம் | வழக்குச் சொற்கள் . |
பாடிமிழ்தல் | ஒலித்தல் . |
பாடியகாரர் | பேருரைகாரர் ; பதஞ்சலி ; பிரமசூத்திரத்திற்குப் பேருரை இயற்றிய இராமானுசாசாரியர் . |
பாடியம் | பேருரை . |
பாடிரம் | ஒரு கிழங்குவகை ; சந்தனம் ; துத்தநாகம் ; முகில் ; மூங்கிலரிசி ; கீல்வாதம் ; வயல் . |
பாடிலம் | நாடு . |
பாடிவீடு | பாசறை . |
பாடிவீரர் | படைவீரர் . |
பாடினி | பாணர்சாதிப் பெண் . |
பாடீரம் | சந்தனம் ; முகில் ; கீல்வாதம் ; மூங்கிலரிசி ; கிழங்குவகை ; துத்தநாகம் ; வயல் . |
பாடு | உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக்கம் ; அருகு ; ஏழாம் வேற்றுமையுருபு . |
பாடுகாட்டுதல் | சாய்ந்துவிழுதல் . |
பாடுகாயம் | படுகாயம் . |
பாடுகிடத்தல் | வரங்கிடத்தல் . |
பாடுதல் | பண் இசைத்தல் ; வண்டு முதலியன இசைத்தல் ; பாட்டியற்றல் ; பாட்டு ஒப்பித்தல் ; பாராட்டுதல் ; துதித்தல் ; கூறுதல் ; வைதல் . |
பாடுதாங்குதல் | துணைநிற்றல் . |
பாடுதுறை | புலவர் பாடுதற்குரிய போர்த்துறை ; தத்துவராயர் செய்த ஒரு நூல் . |
பாடுநர் | புலவர் ; இசைபாடுவோர் . |
பாடுபடுத்துதல் | துன்பப்படுத்துதல் ; கடின வேலை வாங்குதல் . |
பாடுபடுதல் | மிக உழைத்தல் ; வருத்தப்படுதல் . |
பாடுபறப்பு | கவலை . |
பாடுபார்த்தல் | தன் வேலையைக் கவனித்தல் ; நிமித்தம்பார்த்தல் . |
பாடுபெயல் | விடாமழை . |
பாடுவன் | பாடகன் ; பாணன் . |
பாடுவான் | பாடகன் ; பாணன் . |
பாடுவி | புகழ்பவள் . |
பாடுவிச்சி | பாண்மகள் . |
பாடுவித்தல் | பாடச்செய்தல் . |
பாடேடு | தாயேடு ; மூலப் படி . |
பாடை | பிணக்கட்டில் ; மொழி ; ஆணை ; சூள் ; குறிஞ்சி யாழ்த்திறவகை ; காண்க : வட்டத்திருப்பி ; பருத்தி . |
பாடைகுலைத்தான் | பாகற்கொடி . |
பாடைகூறுதல் | சூளுரைத்தல் ; ஆணையிடுதல் . |
பாடைப்பாடல் | அகநாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கும் உரிய செய்யுள் உருக்கள் . |
பாடோடிக்கிடத்தல் | காண்க : பாடுகிடத்தல் ; துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல் . |
பாண் | பாட்டு ; காண்க : பாணாற்றுப்படை ; பாணர்சாதி ; புகழ்ச்சொல் ; தாழ்ச்சி ; பாழாக்குவது . |
பாண்டம் | கொள்கலம் ; பாத்திரம் ; மட்கலம் ; உடம்பு ; வயிற்றுவீக்கநோய் ; காண்க : பாண்டரங்கம் . |
பாண்டரங்கம் | முப்புரத்தை எரித்த காலத்தில் சிவன் வெண்ணீறணிந்து ஆடிய கூத்து . |
பாண்டரங்கன் | பாண்டரங்கக் கூத்தாடிய சிவன் . |
பாண்டரம் | வெண்மை ; செஞ்சுண்ணாம்பு ; காண்க : பாண்டல் . |
பாண்டரம்பிடித்தல் | அழுக்குப்பிடித்தல் . |
பாண்டல் | பழமை ; பாசிபிடித்து நாறுகை . |
பாண்டல்நாற்றம் | தீநாற்றம் . |
பாண்டல்நெய் | நாற்ற நெய் . |
பாண்டலடித்தல் | தீநாற்றம் வீசுதல் . |
பாண்டவர் | பாண்டுவின் மைந்தர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் ஆகியோர் . |
பாண்டவர்படுக்கை | சமணத் துறவியரின் மலைக் கற்படுக்கை . |
பாண்டாகாரம் | பண்டசாலை ; நிதி அறை , கருவூல அறை . |
பாண்டி | பாண்டிய நாடு ; கூடாரப்பண்டி ; மாட்டு வண்டி ; எருது ; பல்லாங்குழிப் பலகை ; சிறு பிள்ளை விளையாட்டு ; தக்கேசிப் பண் . |
பாண்டிக்குறவன் | மலைநாட்டுத் தமிழ்க் குறவன் . |
பாண்டிகம் | பறைவகை . |
பாண்டிகன் | திருப்பள்ளியெழுச்சி பாடுவோன் . |
பாண்டித்தியம் | கல்வித்திறம் . |
பாண்டிமண்டலம் | பாண்டிய நாடு . |
பாண்டியம் | பாண்டிய நாடு ; எருது ; உழவு . |
பாண்டியன் | பாண்டியநாட்டு வேந்தன் . |
பாண்டில் | வட்டம் ; விளக்குத்தகழி ; கிண்ணி ; கஞ்சதாளம் ; குதிரைபூட்டிய தேர் ; இரண்டு உருளையுடைய வண்டி ; தேர்வட்டை ; வட்டக்கட்டில் ; கண்ணாடி ; வட்டத்தோல் ; நாடு ; குதிரைச் சேணம் ; எருது ; இடபராசி ; விளக்கின் கால் ; வாகைமரம் ; காண்க : சாத்துக்குடி ; மூங்கில்மரம் . |
பாண்டில்விளக்கு | கால்விளக்கு . |
பாண்டிவடம் | கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பகுதி . |
பாண்டிற்காசு | வட்டக்காசு என்ற அணிகலவகை . |
பாண்டீரம் | ஆல் ; வெண்மை . |
பாண்டு | வெண்மை ; காமாலை ; ஒரு நோய் வகை ; நீர்க்கோவை ; பஞ்ச பாண்டவர்களின் தந்தை ; காண்க : சிறுபூளை . |
பாண்டுகம் | வெண்மை ; நோய்வகை . |
பாண்டுகம்பளம் | இந்திரன் இருக்கை . |
![]() |
![]() |
![]() |