ஆகந்துகம் முதல் - ஆகாதே வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆகனிகம் மண்ணகழ் கருவி ; பன்றி ; பெருச்சாளி .
ஆகா வியப்புக்குறிப்பு ; உடன்பாட்டுக் குறிப்பு ; ஒரு கந்தருவன் .
ஆகாசக்கத்தரி காண்க : வெண்டை .
ஆகாசக்கப்பல் ஆகாயவிமானம் .
ஆகாசக்கரை மனோராச்சியம் .
ஆகாசக்கட்டு மனோராச்சியம் .
ஆகாசக்கல் விண்ணிற் பறக்கும் அணு .
ஆகாசக்கோட்டை மனோராச்சியம் .
ஆகாசகங்கை மந்தாகினி ; பால்வீதி மண்டலம் ; பனிநீர் ; சிறுநீர் .
ஆகாசகபாலி புரளிக்காரன் ; மிக வல்லவன் .
ஆகாசகமனம் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; ஆகாயத்தே செல்லுதல் .
ஆகாசகரடம் புகைப்படை .
ஆகாசகருடன் கொல்லன்கோவை ; சீந்தில் ; பேயத்தி .
ஆகாசசாமி பறந்துசெல்லும் ஆற்றலுடையோன் ; பறக்கும் குதிரை .
ஆகாசகாமினி விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் .
ஆகாசசபை காஞ்சிபுரத்து நடராச சபை .
ஆகாசத்தாமரை காணக ; ஆகாயத்தாமரை .
ஆகாசத்துவனி வானொலி , அசரீரி .
ஆகாசதீபம் உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு ; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு .
ஆகாசதுந்துமி தேவதுந்துபி .
ஆகாசப்பந்தல் கற்பனை உலகு .
ஆகாசப்பாலம் கற்பனை உலகு .
ஆகாசப்புரட்டன் பெருமோசக்காரன் .
ஆகாசபட்சி காண்க : சாதகபட்சி ; வானம்பாடி .
ஆகாசபலம் விண்வீழ்கொள்ளி .
ஆகாசம் ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் .
ஆகாயம் ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் .
ஆகாசமண்டலம் வானவெளி ; நாட்டிய வகையுள் ஒன்று .
ஆகாசமார்க்கம் வானவழி .
ஆகாசலிங்கம் பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்தில் உள்ளது .
ஆகாசவல்லி சீந்தில் ; ஒரு பூண்டு .
ஆகாசவாணம் அந்தரத்தில் செல்லும் சீறுவாணம் .
ஆகாசவாணி வானொலி , அசரீரி .
ஆகாயவாணி வானொலி , அசரீரி .
ஆகாத்தியம் பாசாங்கு ; பொல்லாங்கு .
ஆகாத கெட்ட ; வெறுப்புக்குரிய .
ஆகாதிலை மரவகையுள் ஒன்று ; கொடியார் கூந்தல் .
ஆகாதே அல்லவா ? .
ஆகந்துகம் இடையில் வந்தேறியது .
ஆகந்துகமலம் ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் .
ஆகப்பாடு மொத்தம் .
ஆகம் உடல் ; மனம் ; மார்பு ; சுரை .
ஆகம்பிதசிரம் சிர அபிநயவகை .
ஆகம்பிடதம் மேலும் கீழுமாகத் தலையசைத்தல் ; சம்மதிக்குறி காட்டும் முகம் .
ஆகம்பிதமுகம் சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை .
ஆகமங்களோதினோன் சிவபிரான் .
ஆகமசாத்திரம் சைவ வைணவ சாக்த சமணசமய நூல்கள் .
ஆகமப்பிரமாணம் காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம் .
ஆகமம் வேதசாத்திரங்கள் ; முதல்வன் வாக்கு ; வருகை ; தோன்றல் விகாரத்தால் வரும் எழுத்து .
ஆகமமலைவு ஆகமவிதிக்கு முரண் ; சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது .
ஆகமவளவை காண்க : ஆகமப்பிரமாணம் .
ஆகமனம் வருகை .
ஆகமாந்தம் ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் .
ஆகரம் இரத்தினச் சுரங்கம் ; உறைவிடம் ; அடிநிலை ; கூட்டம் ; காலாங்கபாடாணம் .
ஆகரன் குடியிருப்போன் ; கிண்டுவோன் ; சுந்தரமூர்த்தி நாயனார் .
ஆகரி ஒரு பண் ; திப்பிலி ; சிறுகட்டுக்கொடி .
ஆகரித்தல் தருவித்தல் .
ஆகருடணம் இழுக்கை ; அழைக்கை ; அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று .
ஆகருடம் விற்பழக்கம் ; சூதாடுகை ; சூதாடுபலகை ; கவறு ; இழுக்கை .
ஆகவனம் பிணிக்கை ; விரும்புகை ; எண்பெருக்கல் .
ஆகலாகல் காண்க : ஆகவாக .
ஆகலூழ் ஆகூழ் ; நல்வினைப் பயன் .
ஆகவபூமி போர்க்களம் .
ஆகவம் போர் ; வேள்வி .
ஆகவனம் பலி .
ஆகவனீயம் வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று .
ஆகவாக உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை .
ஆகவியன் போர்வீரன் .
ஆகவும் ஆகுக .
ஆகவே ஆதலால் .
ஆகளமாய் இடைவிடாது .
ஆகளரசம் அபின் ; பாதரசம் .
ஆகளவாய் இருக்கும் அளவுக்கு .
ஆகன்மாறு ஆகையால் .
ஆகனாமி அவரை .